தமிழோவியம்
கேள்விக்கென்ன பதில் ? : இ.பா விற்கு திருத்தொண்டனின் 3 கேள்விகள் ?
-

Indira Parthasarathyபாலாஜி,  நல்ல பேட்டிக்கு நன்றி. இ.பா அவர்கள் இன்னும் அமெரிக்காவில் இருந்தால் இன்னும் சில கேள்விகளையும் வைக்கிறேன். முடிந்தால் அவர் கருத்தைக் கேட்டு எழுதுங்கள்.

1. எட்டெழுத்து மந்திரம் எவர்க்கும் பொதுவானது என்று இராமனுசர் காலத்தில், சாதிப்பிரிவினைகள் தவிடுபட மகத்தான பேரியக்கமாய் எழுந்த வைணவம், காலம் செல்லச் செல்ல இன்று ஒரு வகுப்பாரால் மட்டுமே அடையாளம் காட்டப்படும் அளவில் குறுகியதைப் பற்றியும், இதை மீட்டு மீண்டும் மக்கள் இயக்கமாய் எடுத்துச் செல்வதைப் பற்றியும்..

2. திவ்வியப்பிரபந்தம் பல அருமையான கருத்துக்களைச் சொல்வதுதான்; என்றாலும் அதுவும் ஒரு வகுப்பார் மட்டுமே பெருமாள் கோயில்களில் புரியாத ஒரு ராகத்தில் பாடப்படுவது சோகமல்லவா? ஓதுவார்மூர்த்திகள் பண்களில் தேவாரப் பாடல்களைக் காத்து வருவது போல் ஒரு மரபு வைணவத்தில் அமையாதது ஏன்? அமைக்க முயற்சிகள் உள்ளனவா?

3.

 நெறிவாசல் தானேயாய் நின்றானை ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி அறிவானாம்
ஆலமரநீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலமர் கண்டத்து அரன்.

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரைநூல் மறை உறையும் கோயில் வரைநீர்
கருமம் அழிப்பளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று.

பொன்திகழு மேனி புரிசடை அம்புண்ணியனும்
நின்றுலகம தாய நெடுமாலும் என்றும்
இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன்
ஒருவன் அங்கத்து உளன்.

இவையெல்லாம் ஆழ்வார் பாடல்களில் காணப்படும் பரந்த நோக்கிற்குச் சான்றாய் சில எடுத்துக்காட்டுகள். ஆனால் தமிழ் வைணவர் பொதுவாய் இந்தப் புரிதலை ஏற்றுக் கொள்கிறார்களா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors