தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் [நேசகுமார்+எல்ஸ்டின் குற்றச்சாட்டுகள்]
- நல்லடியார்

மற்ற மதங்களைப்போல் இஸ்லாத்தை எளிதில் விமர்சிக்க முடியாது. கண்ணுக்குத்தெரியாத ஒரு சக்தியை அல்லாஹ் என்றும், அவன் தேர்ந்தெடுத்த சிலரை தூதுவர்கள் என்றும், அவ்வாறு வந்த தூதுவர்களில் முகம்மது நபி இறுதியானவர் என்றும் நம்புவதே இஸ்லாமாக இருப்பதால், இஸ்லாத்தை விட உயரிய வேறு தத்துவங்கள் இருந்தால் அவற்றைக் காட்டி டாக்டர் எல்ஸ்ட் வகையறாக்கள் இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும்.

மற்ற மதங்களிலிருந்து இஸ்லாத்தை வேறுபடுத்துவது அதன் அடிப்படை அமைப்பு முறையும் நம்பிக்கைகளுமே. அதாவது கடவுள் ஒருவரே என்றும் முகம்மது நபி அவரின் கடைசி தூதுவர் என்றும் நம்புவது. இதில் ஒன்றை ஏற்று மற்றொன்றை நிராகரித்தாலும் முழுமையான இஸ்லாமிய நம்பிக்கையாகாது. இஸ்லாமிய கட்டமைப்பு இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்திருக்கக் காரணம் இந்த இரண்டு அடிப்படை நம்பிக்கைகளே. இந்த அடிப்படை நம்பிக்கைகளை விட்டு முஸ்லிம்களை விலக்கும் வரை இஸ்லாத்தையும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் பிரிக்க முடியாது.

ஆக, அடிப்படையற்ற இந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை நோக்கி வருபவர்களை தடுத்தாக வேண்டிய அவசிய நிலை இந்து மத அபிமானிகளுக்கும், ஆரிய, ஜாதிய சிந்தனையாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வெளியேறிய மக்களின் ஆழ்மனத் தேடல்கள் உண்மையான ஆன்மீகப்பயணம் செய்தன. சிலர் வாழ்க்கையின் முதுமையில் தேடுகிறார்கள். இன்னும் சிலர் வெளியேறவும் முடியாமல், பின்பற்றவும் முடியாத ஒரு தவிப்பு நிலையிலேயே உள்ளனர்.

இதற்குக் காரணம் தன் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்துள்ள குடும்பவியல் முறையும் தெய்வ நம்பிக்கையும். தனி மனிதனின் சிந்தனை அவன் குடும்பத்தோடும், சமூகத்தோடும் பிணைந்துள்ளது. இதில் ஏற்படும் மாற்றம் ஒட்டு மொத்த குடும்ப முறையையோ அல்லது சமூக சூழலிலோ பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு கையறுநிலையடைந்த இந்துக்கள், இந்து மதத்தை கைவிடுவதை விட உள்ளிருந்து கொண்டே புறந்தள்ளும் நிலைக்கு ஆளாகினர். காலப்போக்கில் இவர்களின் சந்ததியினர் எந்த அடிப்படையைப் பின்பற்றுவது என்ற திக்கு தெரியாமல் போகும் நிலை ஏற்படலாம். அதன் கடைசி முயற்சிதான் இஸ்லாத்தின் அடிப்படையை சந்தேகப்படுத்தி விட்டால் இஸ்லாத்தை வீழ்த்தி விடலாம் என்ற அதீத கற்பனை "வஹீ - ஒரு அமானுடப்பார்வை" என்ற அவசர அல்லது அறைகுறை மொழி பெயர்ப்பு பதிவு.

காஞ்சி சங்கராச்சாரியாரின் பாலியல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்களுக்குப் பின் பிராமண ஆதிக்கம் வீழ்ந்தது என வீரிட்டு எழுந்த பிராமணரல்லாத காவிச்சிந்தனையாளரும், இந்து மதம் மறுமலர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அதீத நம்பிக்கை கொண்ட நேசகுமார், தனக்கே உரிய கற்பனைக் குதிரைகளையும் அரை குறை புரிந்து கொள்ளலையும் வைத்து அவசர அவசரமாக மொழி பெயர்த்துள்ளார்.

அவரின் மொழிபெயர்ப்பிலுள்ள சாரம்சங்கள் ஏற்கனவே அவரால் அவதூறு செய்யப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டவை. (உதாரணமாக, தன் முறைப்பெண்ணாக இருந்து தனது வளர்ப்பு மகனுக்கு விவாகம் செய்து வைத்து, பிறகு தான் மணந்த ஜைனப் பற்றிய தகவல்கள்).

முஹம்மது நபிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை களங்கப்படுத்தி விட்டால், அவரின் தூதுத்துவத்தையும் களங்கப் படுத்தி விடலாம் என்ற நப்பாசை. முதலில் முகம்மது நபிகள் மீதான நேசகுமார்+எல்ஸ்டின் குற்றச்சாட்டுகளை பார்ப்போம்.

1) முஹம்மது பால்ய பாதிப்புக்குள்ளானவரா ?

முஹம்மது நபிகள் சிறு வயது முதலே தந்தையை இழந்து, வளர்ப்புத்தாயால் பாலூட்டப்பட்டு, பிறகு தாயையும் இழந்து, தந்தையின் சகோதரரால் செல்லமாக வளர்க்கப்பட்டும் வந்துள்ளார். முஹம்மது நபிகள், ஓரிறைக் கொள்கையை தனது சமூகத்தாரிடம் சொன்ன போதும், அபூதாலிப் அவர்கள் வெருக்கவில்லை. சொல்லப் போனால் இறை மறுப்பாளர்களால் எந்த தீங்கும் வந்து விடக் கூடாது என்ற கவலையுடையவராகவே முஹம்மது நபிகள் மீது அன்பு கொண்டிருந்தார். இந்த அன்புக்கு பரிகாரமாக அவர் இறக்கும் தருவாயில், ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் படி மன்றாடிய போதும், அல்லாஹ் தான் நாடியவருக்கே அத்தகைய தெளிவைக் கொடுப்போம் என்று வஹீ வரும் அளவுக்கு முஹம்மது-அபூதாலிப் அவர்களின் பரஸ்பர அன்பு தொடர்ந்தது.

இன்றைய மனோதத்துவவியலாளர்கள், தற்போதைய மனநிலை பாதித்தவர்களின் செயல்களுக்கு, பால்ய பாதிப்புகள் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் முஹம்மது நபிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும் போது, சிறுவயது முதல் உண்மையாளர், நம்பிக்கையாளர் என்ற பெயருடன், முகம்மது போல தன் மகன் குணக்குன்றாக இருக்க வேண்டும் என அன்றைய அரபிகள் நினைக்கும் அளவுக்கு நற்பண்பு உடையவராகவும், அன்பிற்குரியவராகவும் இருந்துள்ளார்கள்.

வஹீயின் ஆரம்பக்கட்டங்களில் முஹம்மது நபி அஞ்சி நடுங்கும் போது, அவர்களுக்கு சமாதானம் சொன்ன துணைவியார் கதீஜா அவர்கள், முஹம்மது நபிகளின் சிறுவயது முதலிருந்த நற்குணங்களை சொல்லியே ஆறுதல் படுத்துகிறார்கள். ஆக, முகம்மது நபிகள் பால்ய பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டிற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை.

2) போர்கள் மற்றும் ஆதிக்க வெறியரா ?

பாகன் அரபிகளின் செயல்பாட்டில் இருந்த துர்பழக்கங்களால் சஞ்சலமுற்ற நபிகள். இறைக்கொள்கைகளை கொண்டு வந்த போது, தங்களில் ஒருவரே இவ்வாறு தெய்வங்களை குறை சொல்லுவதை சந்தேகப்பட்ட பாகன் அரபிகள் நபிகளாரை பல வழிகளிலும் தொந்தரவு செய்து, நபிகளாரின் பொறுமையால் தோற்று, செல்வக்குவியல்களையும், பேரழகு பதுமைகளையும் காட்டி பேரம் பேசினார்கள். முஹம்மது மட்டும் பாகன்களின் கடவுள்களை ஒப்புக் கொண்டிருந்தால் அன்றைய அராபிய பிரதேசங்களின் முடிசூடா மன்னனாக இருந்திருக்க முடியும். ஆனால், தான் கொண்டு வந்த கொள்கையில் உறுதியாக இருந்து வறுமையில் வாடி, சக தோழர்களின் சோகங்களில் பங்கெடுத்து, கொலை செய்யப்பட ஆணையிடப்பட்டதால் சொந்த ஊரை துறக்க நேரிட்டது. இதன் மூலம் ஆதிக்க வெறியர் என்ற குற்றச்சாட்டும் அர்த்த மற்றதாகி விடுகிறது.

3) பலதாரமணம் செய்த ஒழுங்கீனரா ?

முஹம்மது நபிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலேயே பிரதானமானது அவர்களின் ஒழுக்கம் பற்றியவைதான். பலதார மணம், விவாக விலக்கு பெற்ற தன் வளர்ப்பு மகனின் மனைவியாக இருந்த, தன் முறைப்பெண்ணான ஜைனப் அவர்களை மணந்தது, பதினொரு வயதில் ஆயிஷாவை மணந்தது என்ற காரணங்களைச் சொல்லி காமவெறியர், ஒழுக்கசீலர் அல்ல என்ற குற்றச்சாட்டை வைக்கின்றவர்கள் அவர்களின் முதல் திருமணத்தை வசதியாக மறந்துவிடுகின்றனர்.

முதல் மனைவி கதீஜா முஹம்மது அவர்களைவிட 15 வயது மூத்தவர். தனது வாலிபம் முறுக்கெடுத்த வயதில் தன்னை விட மூத்த, இரண்டுமுறை விதவையான ஒரு பெண்ணை (கதிஜாவை) மணந்தார்கள். முஹம்மது நபி வாலிபராக இருந்த காலத்தில் கதிஜா அம்மையாருடன் மட்டுமே வாழ்ந்துவந்தார்கள். கதிஜா அவர்களின் மரணத்திற்கு பின்புதான் மற்ற திருமணம் செய்துக்கொண்டார்கள்.

இதனை வைத்து இவர்களின் முதல் கல்யாணத்தை காமவெறி என்ற குற்றச்சாட்டு சொல்ல முடியாது. ஏனெனில், மூத்த பெண்களை மணப்பதும், விதவையை மணம் முடிப்பதும், பலதார மணமும் அன்றைய பாகன் அரபிகளின் பழக்க வழக்கமாகவே இருந்தது. முதல் கல்யாணத்தை அறிவுள்ள எவரும் காமம்தான் காரணம் என குற்றமாகவே சொல்ல முடியாது. இவ்வாறே இதர திருமணங்களுக்கும் பொருத்தமான சமூகக் காரணங்கள் இருந்தன.

ஆக முஹம்மது நபியின் சொந்த வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் குற்றம் சொல்லி தோல்வியுற்றவர்கள், எப்படியும் இஸ்லாத்தின் அடிப்படியை சந்தேகப்படுத்திவிட சோர்ந்துவிடாமல் இன்றும் பல்வேறு காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வாய்ப்பாக தேடிப்பிடித்தவைதான் உளவியல்/அறிவியல் காரணங்கள். ஆனால் அதிலும் தங்கள் அறியாமையையும், காழ்ப்புணர்வையும் பதிந்து வைத்து விட்டுச் சென்றுள்ளதை பார்க்கலாம்.

அறிவியல் அறிந்திடப்படாத காலத்தில் வாழ்க்கையின் வழிகாட்டியாக அனுப்பப்பட்டவர் செய்த சில செயல்களை எப்படி தங்கள் கருத்துக்கு சாதகமாகத் திரிக்க முயன்றுள்ளனர் எனப்பார்ப்போம்.

5) அறியாமையும் அபத்தவாதமும்

a) இரத்தம் வடித்து நிவாரணம் பெறல்:

"முகம்மதின் விஷயத்தில் இந்த மனோதத்துவ அணுகுமுறையை விட அவர் உடல்ரீதியான பிரச்னைகளும் சேர்ந்திருக்கின்றன. முகம்மதின் உடல் நலத்தைப் பற்றிய செய்திகளை ஆராய்ந்து பார்க்கும்போது தெரிய வருவது என்னவென்றால், அவர் தீராத தலைவலியால் அவதிப் பட்டிருந்தார் என்பது. அதைக் குணப்படுத்த கழுத்தின் இரண்டு ரத்தநாளங்களை வெட்டி(இரத்தத்தை வடித்து)க் கொண்டதாகத் தெரிகிறது. முகம்மதின் மனச்சிதைவை இதை வைத்து எடை போட முடியாவிட்டாலும், இந்தக் காரணம் ஒரு வலுவான ஆதாரம் என்று கொள்ளலாம்." இதுவே எல்ஸ்ட் என்பவரின் குற்றச்சாட்டு.

உடலின் நோய்ப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக கீறி கெட்ட இரத்தத்தை வெளியேற்றும் முறையை இன்றைய நவீன மருத்துவம் (Phlebotomy அல்லது venesection) பெல்போடமி அல்லது வீன்செக்சன் என்று ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி நிவாரணம் பெறும் முறையே கடை பிடிக்கப்பட்டது என்பதை அறியாத அல்லது சாதகமாக தவிர்த்து "மனச்சிதைவு" க்கான அறிகுறி என்று அணுகி இருப்பது அவரின் கல்வியறிவை கேலிக்குரியதாக்குகிறது.

இவ்வாறு இரத்தத்தை தற்காலிகமாக வெளியேற்றி நிவாரணம் பெறும் முறை சமீபத்திலோ அல்லது முஹம்மது நபியின் காலத்திலோ தோன்றியதல்ல. இது பற்றிய குறிப்புகள் யூத, கிறிஸ்தவ, இந்து வேதங்களிலும் காணப்படுகிறது. மேலும் பண்டைய இந்தியாவிலிருந்து திபேத்தியர்கள் மூலம் சீனாவிற்கு சென்ற பண்டைய இந்திய ஆயுர்வேத முறையாகும்.

The Talmud recommended a specific day of the week and days of the month for bloodletting, and similar rules, though less codified, can be found among Christian writings advising which saint"s days were favourable for bloodletting. Islamic authors too advised bloodletting, particularly for fevers. The practice was probably passed to them by the Greeks; when Islamic theories became known in the Latin-speaking countries of Europe, bloodletting became more widespread. Together with cautery it was central to Arabic surgery; the key texts Kitab al-Qanum and especially Al-Tasrif li-man "ajaza "an al-ta"lif both recommended it. It was also known in Ayurvedic medicine, described in the Susrata Samhita.

பார்க்க :
http://www.answers.com/bloodletting

மேலும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி நோய் குணப்படுத்தும் முறை இன்றும் இந்தியாவில் கடைபிடிக்கப் படுகிறது. பார்க்க: http://www.mtn.org/quack/devices/phlebo.htm

b) வலிப்பு நோயும் வரலாற்றுத் திரித்தலும்

"முகம்மது தன் சிறுவயதில் தரையில் விழுந்து கிடந்தது ஒருவகை வலிப்பு நோய் என்று பைஸாண்டினைச் சேர்ந்த(Byzantine) தியோபேன்ஸ் குறித்து வைத்திருக்கிறார். இதுவும் ஒரு திருப்தியான ஆதாரம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் வலிப்பு நோயால் ஒருவன் நிரந்தர மனநோய்க்கு ஆளாவதில்லை. வலிப்பிலிருந்து மீண்டபின் அதைப்பற்றியே நினைவிருக்காது. ஆனால் பாரனாய்ட் போன்ற மனோவியாதிகள் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தும்." - இது எல்ஸ்டின் இன்னொரு குற்றச்சாட்டு.

முஹம்மது நபி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களைச் சொல்லி, ஆரம்பகால தூதுத்துவத்தை சந்தேகப்படுத்தும் முயற்சிகள் புதிதல்ல என்ற போதிலும், Dr.Herman Somers போன்ற மத நம்பிக்கையில்லாதவர்களின் கருத்துக்கள் சில சமயம் மேற்கோள் காட்டப்பட்டு முஹம்மது நபிக்கு எதிரான அவதூறுகளை நியாயப்படுத்தும் முயற்சிகள் அவ்வப்போது நடக்கின்றன.

முதலில் முகம்மது நபிகளின் பால்ய வரலாற்றை நோக்கினால், அது போன்ற உடலியல் கோளாறுகள் இருந்திருக்கவில்லை. (முஹம்மது நபியைத்தவிர மற்ற எவருக்கும் இந்த அளவுக்கு வரலாற்றில் அனைத்து சம்பவங்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதில்லை. குறிப்பாக நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் ஒருவரின் செயல்பாடுகளை எடைபோட அவரின் பிற செயல்களுடன் ஒப்பிட்டு ஓரளவு அனுமானிக்க முடியும்.)

முஹம்மது நபியின் முழு வாழ்க்கை வரலாற்றையும் நோக்கினால் மிகுந்த உடல் நலத்துடனேயே இருந்திருக்கிறார்கள். சிறு வயதில் வலிப்பு நோய் இருந்தது என்பதற்கு எந்த குறிப்பும் காணப்படவில்லை. முஹமது நபி (epilepsy) வலிப்பு நோயால் அவதிப்பட்டார் என்று குற்றம்சாட்டுவதன் மூலம் அவரால் எடுத்தோதப்பட்ட குர்ஆன் வரிகள் அந்நோயின் வெளிப்பாடு என குற்றம் சொல்லமுடியும் என டாக்டர் சோமர்ஸ் மற்றும் டாக்டர் சர். வில்லியம் மாயிர் ஆகியோர் முனைந்தனர். இவர்களின் அனுமானத்திற்கு நபிகளாரின் வாழ்க்கையில் எந்த ஆதாரமும் இல்லை என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரபல WebMD என்ற மருத்துவ தளத்தில் வலிப்பு நோய் பற்றிய குறிப்பில்,

"Epilepsy is a neurological disorder and has nothing to do with your mental capabilities, but there can be a stigma associated with the diagnosis."

Epilepsy is not necessarily a lifelong diagnosis; many people recover on their own, and this could happen to you. Even if it doesn"t, you are in good company: Many great figures from history -- among them Alexander the Great and Julius Caesar -- had epilepsy. - Yours in health,Jacqueline Brooks, MD" அறிய முடிகிறது. இதன் மூலம் வலிப்பு நோய் என்பது தற்காலிகாமானதும், அசாதாரண குறைபாடாக இருந்தாலும் இது ஒருவரின் ஆளுமையை பாதிப்பதில்லை என்பதை அறிய முடிகிறது.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற்றவர்கள் பலர் இருக்கும்போது இந்த அரைகுறை ஞானிகளுக்கு இத்தகைய பொய்யை சொல்வதில் எந்த வெட்கமும் இருப்பதில்லை.

அவர்களில் ஒரு சிலரை குறிப்பிடலாம். இயேசு கிறிஸ்துவிற்கு பின் கிறிஸ்தவத்தை நவீனப்படுத்திய St. Paul, உலக மகா வீரர்கள் Alexander the Great, Julius Caesar, Joan of Arc, Napoleon Bonaparte, Dante, Flaubert, Paganini, Tennyson, Byron, Charles Dickens, Fydor Dostoyevsky, Molière, Lewis Carroll, Agatha Christie, Handel, யூத இசை ஞானி Beethoven, Vincent Van Gogh, அறிவியலாரளர்கள் Isaac Newton, Alfred Nobel, Richard Burton. இதில் முஹம்மது நபியின் பெயர் இல்லை என்பதன் மூலம் டாக்டர். சோமர்ஸ் மற்றும் வில்லியம் மாயிர் வரலாற்றை அறிந்திருக்கவில்லை அல்லது டாக்டர் எல்ஸ்ட் தனக்கு சாதகமான அம்சங்களை வைத்து முஹம்மது நபியின் மீது அத்தகைய குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.

http://my.webmd.com/content/pages/11/1812_5085
http://www.bismikaallahuma.org/Muhammad/epilepsy.htm#notes
http://www.islamonline.net/English/In_Depth/mohamed/1424/misconception/article02.shtml
http://www.epilepsy.com/epilepsy/famous.html
http://www.epilepsyfoundation.org/local/michigan/famouspeople.cfm
http://en.wikipedia.org/wiki/Epilepsy

Copyright © 2005 Tamiloviam.com - Authors