தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) [திருக்குரான் வெளிப்பட்ட ஆவேச நிலை குறித்த யோகியர்/சித்தர் பார்வை]
- நேச குமார்

முகம்மதின் இறை-வேச நிலைக்கு தரவாய் எழும் 'கலாச்சாரத் தொடர்புத்தன்மை' குறித்தான வாதங்கள்
 
மனோதத்துவக் கோட்பாடுகளுள் ஒரு பிரிவு உண்டு. இன்றைக்கு அது வலுவிழந்து நின்றாலும், அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மிக வலுவானதாய் விளங்கிய அக்கோட்பாட்டின் படி, முற்றிலும் மாறுபட்ட ஒரு கலாச்சார, காலத்தய மனிதர்களின் உளவியல் குறித்து இன்றைய தேதியில் நிலவும் நாகரிக கோட்பாடுகளை வைத்துக் கொண்டு ¬ஆய்வு செய்வது தவறு, அது 'கலாச்சார மேட்டிமை'யின் குறியீடாக விளங்குகிறது என்பதாம். ஆகவே, ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அரபி குறித்த இன்றைய உளவியல் ஆய்வுகள், அலசல்கள் குறித்த வாதங்களை பொதுமக்களிடம் முன்வைக்கும்போது அது நமது கலாச்சார மேட்டிமையின் குறியீடாகக் கொள்ளப் படுகிறது. இன்றைய அளவுகோள்களை வைத்து ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு முற்றிலும் வித்தியாசமான காலகட்டத்தில், கலாச்சார சூழலில் வாழ்ந்த ஒருவரது உளவியலை நாம் கணிக்க முடியாது என்பதான வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. அதிலும் மனோதத்துவம் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாதோரிடையே இத்தகைய வாதங்கள் இன்று மிகவும் பிரபலம்: பின்நவீனத்துவ அறிவுஜீவிகள், மற்றைய கலாச்சாரங்களின் நபர்கள் பற்றி தீர்மாணிப்பதை தவிர்க்கின்றனர்.

ஆகவே, இம்மாதிரியான ஆவேச 'சாமியாடல்கள்' மற்றும் கடவுளிடம் ஆவேச நிலையில் பேசுதல்கள், குறி சொல்தல்கள் ஆகியன பல கலாச்சாரங்களில் ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்து வருகின்றன என்பதே இதுபோன்றோரின் வாதமாக உள்ளது. இதன்படி, ஷமன்கள் ஆவியுலகத்துடன் ஆவேச நிலையில் தொடர்பு கொண்டது போன்றே முகம்மதுவும் வஹி மூலமாக கடவுளிடம் தொடர்பு கொண்டார் என்ற நியாயப் படுத்துதலும் இதற்கு கிட்டுகிறது. முகம்மதின் வஹியை ஒரு கோடங்கியின் சாமியாடல்கள் என்று அழைப்பது, அவரது 'இறுதி நபி' என்கின்ற ஏகோபித்த பட்டத்திற்கு பின்னடைவே என்றாலும், அவருக்கு 'மனப்பிறழ்வு' ஏற்பட்டிருந்தது, 'சித்தப் பிரமை' பிடித்திருந்தது, 'கற்பனைக் குரல்களை' கேட்டார் போன்று சொல்வதை விட உயர்வானதாகவே தென்படுகிறது. ஜார்ஜ் பியூவர்ஸ்டீன்(Holy Madness, Arkana Books 1992, மதத்திற்கும் மனதின் பிறழ்வுகளுக்குமான தொடர்பை விவரிக்கும் புத்தகம் இது) முகம்மதை ஒரு முனி என்றே கருதி அவருக்கு உயரிய இடத்தை வழங்குகிறார் தமது நூலில்.

ஆனாலும்,  கலாச்சாரத் தொடர்புத்தன்மை குறித்தான வாதங்களை இதுபோன்ற முன்நவீனக் கலாச்சாரங்களின் அறிஞர்களே மறுத்து விடுகின்றனர். இன்றைக்கு நாம் மனப்பிறழ்வாய் கருதும் சில அடையாளங்கள் பழைய கலாச்சாரங்களில் ஆன்மீக வெளிப்பாட்டின் குறியீடுகளாக பார்க்கப் பட்டன என்று கருதுவது தவறு என்றும், இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மனநோய் சம்பந்தமான சொற்களான மானியா, பருனோயு(paranoia) போன்றவை அந்தக் கால கிரேக்கர்கள் நமக்குத் தந்துவிட்டுச் சென்றவைதாம் என்பதை நமக்கு இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். (இந்திய)ஆயுர்வேத, திபெத்திய மருத்துவ பழைய நூல்களில் மனநோய்களுக்கான மருத்துவ முறைகள் விவரிக்கப் பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், மனநோய் சம்பந்தமான கருத்துக்கள் இல்லாத பழைய கலாச்சாரங்களே இல்லை எனலாம். நாம் எடுத்துக்கொண்ட இவ்விஷயத்தில், அரபியருக்கு மனோதத்துவம் பற்றிய அறிவு ஏழாம் நூற்றாண்டிலேயே இருந்தது என்ற முடிவுக்கு நம்மால் வரமுடியவில்லை என்றாலும், முகம்மதுவின் மன ஆரோக்கியத்துக்கு என்னவோ ஆயிற்று என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதை நம்மால் காண முடிகிறது.
நமது கடந்த கட்டுரையில் முகம்மதுவே ஆரம்பக் காலங்களில் தமக்கு ஏற்படும் வெளிப்பாடுகள் குறித்த நம்பிக்கையின்மையையும், தமது மனப்பிறழ்வு குறித்த ஆரோக்கியச் சிந்தனைகளையும் கொண்டிருந்தார் என்பதைக் கண்டோம். அவரது முதல் மனைவியான கதீஜாதான் இந்தமாதிரி அவருக்கு கிபி 610லிருந்து தொடர்ந்து ஏற்பட்ட ஆவேச நிலைகளையும், விண்குரல் அனுபவங்களையும் பற்றிய சஞ்சலங்களைத் தெளிவித்து அவருடைய நபித்துவம் பற்றிய நம்பிக்கைகளை அவர் மனதில் விதைத்தார். அதேசமயத்தில் பெரும்பாலான மக்கா நகரவாசிகள் இது குறித்து அவநம்பிக்கை கொண்டு, முகம்மது நபி அடிக்கடி செவிமடுப்பது கடவுளின் குரல்கள், கட்டளைகள் என்பதை நம்ப மறுத்துவந்தனர். இன்றைக்கு இருக்கும் நவீன காலனி மனோபாவ மனோதத்துவ நிபுனர்கள் அவர்களது மனதில் இப்படியான சந்தேகங்களுக்கு வித்திடவில்லை, மாறாக அதே கலாச்சாரப் பிண்ணனியில், அதே காலகட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மனிதர்களே முகம்மதுவிற்கு அடிக்கடி ஏற்படும் இறை-ஆவேச நிலை, அந்நிலையில் அவர் மூலம் வெளிப்படும் கடவுளின் குரல்கள் போன்றவை குறித்த இப்படியான சந்தேகங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் வாழ்ந்த சூழலின் பின்புலத்திலேயே முகம்மதுவுக்கு ஏற்படும் இந்நிலை குறித்த தமது மறுப்புக்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தனர்.
 
குரானிலேயே ஒரு டஜனுக்கு மேற்பட்ட இடங்களில் முகம்மது அல்லது ' அவர் கேட்ட அமானுடக் குரல்' இப்படியான கூற்றுக்கள்(அதாவது முகம்மதுவுக்கு மனப்பிறழ்வு ஏற்பட்டுள்ளது, பிசாசின் ஆளுமைக்குள்ளானவர் அவர் போன்றவை) குறித்து அவருக்கு 'எச்சரித்துள்ளதையும்', இம்மாதிரியான கருத்துக்களுக்கு எதிராக அவருக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்க்கும் போதித்துள்ளதையும் காணமுடிகிறது. இது இந்த பத்து குரான் வசனங்களில் தெள்ளத் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளது: 15:6,23:70/72,34:8,34:46/45, 37:36/35, 44:14/13, 52:29, 68:2, 68:51, 81:22. இது போன்று:” 'அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள” (குரான் 23:70)
 
இது மட்டுமல்லாது, பிசாசின் ஆளுமைக்குள்ளானவர்கள் என்று குற்றம் சாட்டப் பட்ட பல பழைய ஏற்பாட்டின் இறைத்தூதர்கள் சம்பந்தமாகவும் முகம்மது குறிப்பிடுகின்றார்: முன்னால் வாழ்ந்த நபிமார்கள் குறித்து பொதுவாக குரான் வசனம் 51:52ல்("இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.  "), நூஹ்(நோவா) 23:25, மூஸா(மோஸஸ்) 26:27/26 மற்றும் 51:39. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பைபிளில் எங்குமே இப்படியான குறிப்புகள் இந்த நபிமார்களைப் பற்றி குறிப்பிடப் படவில்லை( பைபிள் ஹொசியு ஒரு நபியைப் பற்றிய இம்மாதிரியான குற்றச் சாட்டைக் குறிப்பிடுகிறது: "தேவ வியின் நபராகிய இவருக்கு பைத்தியக்காரப்பட்டம் கட்டுகின்றனர் இவர்கள், இவர்களின் குற்றவுணர்வைப் போன்றே வலுவானது இவர்களின் எதிர்ப்பு" ஹொசியு 9:7, ஆனால் இந்த நபி பற்றி முகம்மதுவுக்கு எதுவுமே தெரியாது). பைபிளைப் பற்றி மேலோட்டமான விபரங்களை மட்டுமே அறிந்து வைத்திருந்த முகம்மது, இம்மாதிரியான குறைபாடுடைய கூற்றுக்களின் மூலம் தமது பரிதாப நிலைக்கு மற்ற நபிமார்களைத் துணைக்கழைத்துக் கொண்டார் என்றே தோன்றுகிறது.
 
ஒட்டுமொத்தமாய்ப் பார்த்தோமானால், அந்தக் கால அரபியர் ஒன்றும் மனவியல் நிபுனர்கள் அல்ல, ஆனால் முகம்மதுவின் மனதில் எதோ கோளாறு இருக்கிறது என்பதை மட்டும் அவர்களால் திட்டவட்டமாக உணர முடிந்தது. ஒரு சில இடங்களில், முகம்மது அதிகாரத்தை குறிவைத்து செயல்படும் அதீதக் கற்பனையுடைய ஒரு கவிஞர் என்ற கூற்றையும் அவர்கள் உரைத்திருப்பது இந்த குரான் வசனங்கள் மூலம் தெளிவாகிறது: 21:5,36:69,37:36/35, 52:30, உதாரணமாக:'இவை கலப்படமான கனவுகள்" இல்லை, 'அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்" இல்லை, 'இவர் ஒரு கவிஞர்தாம்" (21:5). முகம்மது ஒரு சூனியக்காரர் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது:17:47, 25:8. இதை எதிர்கொள்ளும் விதமாக (மதம்மாறா) அரபியருக்குத்தான் மதிமயங்கிவிட்டது என்று முகம்மது கூறியுள்ளதையும் காணமுடிகிறது(23:89), ஆனால் பெரும்பாலும் முகம்மது பைபிளில் காணும் நபிகளின் மீது பொதுமக்கள் கூறிய(கூறப்பட்டதாக தாம் கூறும்) குற்றச்சாட்டுகளையே தமக்கு சாதகமாக துணைக்கு அழைத்துக் கொள்வதையே நாம் காணமுடிகிறது: மோஸஸ்17:107/108, ஸூயப்(Shu'aib) 26:185, ஸாலீஹ் 26:153.

"எனக்கு முன்னாள் வந்து சென்ற உண்மையான நபிமார்களை நீங்களெல்லாம் புறக்கணித்து பைத்தியக்காரன், சூனியக்காரன் என்று சொன்னது போலவே என்னையும் சொல்கின்றீர்கள்" என்ற முகம்மதின் வாதம், அவரது நபித்துவத்தை ஏற்காதவர்களின் வாதத்தை புரட்டிப் பொட்டு அதுவே நபித்துவத்திற்கான அத்தாட்சி என்பது போல கெட்டிக்காரத்தனமாக மாற்றிவிட்டது. நாலுபேர் சந்தேகித்தால், நார்மலான சாமான்ய மனிதர்களுக்கு தம்மைப் பற்றியே சந்தேகம் எழுவது இயல்பே. ஆனால், முகம்மதுவோ இப்படி எண்ணலானார்: என்னைப் பார்த்து இவர்களெல்லாம் பைத்தியக்காரர், சூனியக்காரர், பித்தலாட்டக்காரர், பொய்யர், கபட நாடகதாரி என்றெல்லாம் கூறுவதிலிருந்தே நான் மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு, உயர்ந்த ஸ்தானத்தை உடைய கடவுளின் தூதர் என்பது புலனாகிறது. பைபிளில் கூறப்பட்டுள்ள நோவா, மோஸஸ் போன்ற மிக உயர்ந்த நபிகளுடன் நானும் உயர்ந்து நிற்கின்றேன்.
 
ஆனால், அறிவியல் நோக்குடன் ழ்ந்து கவனிப்பவர்களுக்கு தமது மன நிலை குறித்த எதிர்மறை கருத்துக்களை இப்படிப் புரட்டிப் போட்டு தமக்குச் சாதகமாய் புரிந்து கொண்டதும், பிரச்சாரம் செய்ததும் பகுத்தறிவுக்கொவ்வா மனநிலையை,  அறிவுபூர்வமாக விளக்குவது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் மிக மேம்போக்கான சப்பைக் கட்டே.

Copyright © 2005 Tamiloviam.com - Authors