தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) [நேசகுமாரின் முடிவுரை]
- நேச குமார்

கடந்த இரு மாதங்களாக தமிழோவியத்தில் வெளிவந்த இந்தத் தொடர் இத்துடன் முடிவுக்கு வருகிற நிலையில், இது குறித்த எனது சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

முதலாவதாக, இந்த படைப்பை சீரிய முறையில் பிரசுரித்து, சில சமயங்கள் நான் தாமதப் படுத்திய போதும் பொறுமையுடன் மடலிட்டு, என்னைத் தொடர்ந்து எழுதவைத்த தமிழோவியம் கணேஷ் சந்திரா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவருக்கு பக்கபலமாய் இருக்கும் தமிழோவியம் குழுவினருக்கும் எனது நன்றிகள்.

இரண்டாவதாக, இதை ஒவ்வொரு வாரமும் பொறுமையுடன் படித்து எனக்கு குறை, நிறைகளை சுட்டிக் காட்டியோர், இத்தொடரைப் பற்றி குழுமங்களிலும், மடல்களிலும் விவாதித்தோர் ஆகிய அனைத்து இணைய வாசகர்களுக்கும், இணைய வாசகர்களிடமிருந்து கட்டுரைகளை வாங்கிப் படித்து என்னை ஊக்குவித்தோருக்கும் எனது நன்றிகள்.

மூன்றாவதாக, இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - இக்கட்டுரைகளைக் கண்டு வெகுளாமல், கருத்துச் சுதந்திரத்தை மதித்து உடன்படாதபோதும் கண்ணியம் காத்தமைக்கு.

இந்த மூன்று சாராருக்கும் நன்றிகளை நவிலும் இவ்வேளையில், உங்களிடையே ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு முக்கியமான கேள்விக்கும் எனது விளக்கத்தைத் தர கடமைப்பட்டிருக்கின்றேன். பல வாசக அன்பர்களின் மனதில் கட்டுரையைப் படிக்குமுன்னரே ஏற்பட்டிருக்கக் கூடிய கேள்வி, உலகில் பல பிரச்சினைகள் இருக்க, ஏன் இந்த வஹி பற்றிய ஆய்வு என்பதாகத்தான் இருக்கும் என்று யூகிக்கின்றேன். என்றென்றும் உலகில் நன்மையும் தீமையும் கலந்தே இருந்து வருகின்றன. கீழத்தய மரபுகளின் அசைக்கமுடியா அடிப்படை நம்பிக்கை என்று ஒன்று உண்டு என்றால் , அது இந்த நன்மை-தீமை கலப்பும், இவற்றின் மோதல்களினால் உருண்டு முன்னேறும் உலகம் பற்றிய கோட்பாடாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆகவே, உலகில் பல பிரச்சினைகள் எப்போதும் இருக்கும். பிரச்சினைகள் இல்லா உலகம் என்பது கனவுலகம் மட்டும்தான்.இவற்றில், இன்றைய உலகை, உலக நாகரிகத்தை, பண்பாட்டை எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல், தீவிர மதப்பிடிப்பு கொண்டு கடவுள் பற்றிய தமது கோட்பாடுகளே உயர்ந்தவை என்றும், மற்றவர்கள் எல்லாம் வழிகேட்டிலும், ஒழுக்கக் கேடான வாழ்க்கை முறையிலும், உண்மையான கடவுளின் கட்டளைகளை புறக்கணித்து அக்கடவுளை அவமதிப்பு செய்பவர்களாக இருக்கின்றனர் என்று நம்பும் மதத்தீவிரவாதிகள். இவர்களது இலக்கிற்கு எதுவும் தப்புவதில்லை -  ருஷ்யாவின் குழந்தைகளாயிருக்கட்டும், நியூயார்க் நகரின் பணியாளர்களாயிருக்கட்டும், லண்டன் நகரின் பயணிகளாயிருக்கட்டும், காஷ்மீரின் பண்டிட்டுகளாயிருக்கட்டும், கோயம்பத்தூர் நகரவாசிகளாயிருக்கட்டும், கீழக்கரையின் இந்துக்களாகயிருக்கட்டும் - இவர்கள் எல்லோரும் உண்மையான இறைவனின் கட்டளைகளைப் புறக்கணிப்பவர்கள், கடவுளுக்கு மாறு செய்பவர்கள், ஒழுக்கக் கேடானவர்கள் ஆதலால் இவர்கள் அழித்தொழிக்கப் படவேண்டியவர்கள், இழிவு படுத்தப் படவேண்டியவர்கள், தத்தமது ஊர்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் வெளியேற்றப் படவேண்டியவர்கள் என்பதே இத்தகைய அடிப்படைவாதிகளின் உறுதியான எண்ணமாயிருக்கிறது.

இதனால், இந்தத் தீவிரவாதிகள் தங்களது அந்தஸ்து, குடும்பம், வேலை எல்லாவற்றையும் துறந்து கடவுளின் பாதையில் போரிடத் தயாராகின்றனர். இத்தகைய தீவிரவாதத்தை வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாக, வாய்ப்பில்லாத இளைஞர்களின் விரக்தியில் எதிரொலியாக பார்ப்பது தவறு என்பது இன்று உலக மக்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒன்று - ஒசாமா பின் லேடனுக்கு இல்லாத செல்வவளம் இல்லை. காஷ்மீரிகளின் வாழ்க்கை இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இருப்போரில் பெரும்பாலானோரை விட வளமானதாகவே இருந்தது, இருக்கிறது. பாலஸ்தீனத்தில் வெளியேற்றப்பட்டவர்களைப்போன்ற பலநூறுமடங்கு
இந்துக்கள், கிறிஸ்துவர்கள் பாகிஸ்தானிலிருந்தும், வங்கதேசத்திலிருந்தும், காஷ்மீரிலிருந்தும் வெளியேற்றப் பட்டுள்ளனர். அவர்களெல்லாம், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதில்லை. ஆகவே, வருமானம் இல்லாதது, எங்கோ ஒரு மூலையில் உள்ள பாலஸ்தீனப்பிரச்சினை, இன்று இருந்துவரும் ஈராக் பிரச்சினை ஆகியவை இவற்றுக்கு காரணம் அல்ல. ஏனெனில் 1400 வருடங்களாக இந்த தீவிரவாதச்செயல்கள் நடந்து வருகின்றன. 'அல்லாஹ¤ அக்பர்' என்ற கோஷத்துடன் அழிக்கப்பட்ட வழிபாட்டுத்தலங்கள், மதம் மாற மறுத்ததற்காக கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டு இதன் காரணமாகவே 'ஹிந்துகுஷ்' என்று அழைக்கப்படுகின்ற பாக்-ஆ·ப்கான் மலைத்தொடர்கள், அடிமைகளாக்கப்பட்டு மிருகங்கள் போல் ஈரானுக்கு இழுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்ட இந்தியர்களின் வரலாறுகள் உலகெங்கும் அதிர்ச்சியுடன் படிக்கப் படுகின்றன. ஆகவே, இந்த தீவிரவாதம் புதிதல்ல.  இந்தியர்களாகிய நாம் இந்த தீவிரவாதத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 1300 வருடங்களாக அனுபவித்து வருகின்றோம்.

இதை எப்படி எதிர்கொள்வது? வன்முறையை வன்முறை மூலம் தீர்க்க முடியாது. போலீஸ் கொண்டு இதை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக எதிர்கொள்வது ஜனநாயக முறையில் அமைந்த சுதந்திர நாடுகளால் இயலாத ஒன்று. ஏனெனில்,தீவிரவாதச் செயல்களில் ஈடுபடாது அமைதியான முறையில் வாழ்வு நடத்திவரும், சமூகத்தின் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் ஒரு மதக்கூட்டம் இதே எண்ணங்களை பிரதிபலிக்கின்றது. உதாரணமாக சென்ற மாதம் நடந்த லண்டன் குண்டு வெடிப்பிற்குப் பிறகு நடைபெற்ற கருத்துக்கணிப்பில் அங்கே வசிக்கும் ஒரு லட்சம் இஸ்லாமியர்கள், மேற்கத்திய வாழ்வு முறை அழித்தொழிக்கப் படவேண்டிய ஒன்று என்ற கருத்தைத் தெரிவித்திருக்கின்றனர். இந்தியாவில் நல்லவேளையாக இப்படிப்பட்ட கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆகவே, இவற்றின் மூல காரணத்தை அமைதியான முறையில் ஆய்ந்து விவாதிப்பது, சிந்திப்பது ஆகியவையே ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சாத்தியமான முறை, சாத்வீக முறை.

ஆகவே, இச்செயல்களுக்கு என்ன காரணம்? நமது சக மனிதர்கள், சகோதரர்கள், என்றோ ஒருநாள் நமது உறவினர்களாக இருந்தவர்கள் மனதில் இத்தகைய மாறுபாடு ஏற்பட்டு அசுரபலத்துடன் நமது வாழ்க்கை முறைய, சமூகத்தை அழித்திட ஏன் இவர்கள் எண்ணுகின்றனர்? மாமன் மச்சான் என்று உறவுமுறை கொண்டாடி, வீட்டு விசேஷங்களுக்கு அழைத்து, நட்புடன் பழகும் நமது அண்டை அயலார்கள், மதவிஷயத்தில் சற்றும் விட்டுக் கொடுக்காமல், எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் வன்செயலகளில் ஈடுபடுவதற்கு என்ன காரணம் என்று ஆய்ந்து, அலசுவது இன்றையமையாத ஒன்றாகிறது.

இதனால்தான் வஹி பற்றிய இந்த ஆய்வுகள் அவசியமாகின்றன.

ஆம், முஸ்லிம் அல்லாதவர்கள் இழிவு படுத்தப் படவேண்டும் என்பது வஹி மூலம் ஏக இறைவன் அறிவித்த ஒன்று. பாகிஸ்தானில் இந்துச் சகோதரரர்களை இழிவுபடுத்தும் அப்பாவி முஸ்லிம்களை குறைசொல்லி பிரயோசனம் இல்லை. கா·பிர்கள் (முஸ்லிம் அல்லாதோர்) அழித்தொழிக்கப் பட வேண்டியவர்கள் என்பது இந்தியாவைப் படையெடுத்துவந்து அழித்த துருக்கியரின் தனிப்பட்ட எண்ணம் அல்ல, அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்த கட்டளை.

கடவுளுக்கு மகன் உண்டு என்று கருதுவோர் தீயோர் என்பது வஹி மூலம் அல்லாஹ் அறிவித்த ஒன்று. கிறிஸ்துவர்களை துன்புறுத்தும் சவுதி அரசை குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும், சுதந்திரமாக செயல்படக்கூடாது என்பது தாலிபான்களின் தீர்ப்பு அல்ல, வஹி மூலம் அல்லாஹ் மனிதகுலத்துக்கு இட்ட கட்டளை. நடத்தை தவறியவர்கள் என்று கருதும் பெண்களை கல்லால் அடித்துக் கொள்வது ஈரான் அரசின் கண்டுபிடிப்பு அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் ஒரு சமூகத்தையே தாம் கல்லால் அடித்துக் கொன்றதாக அல்லாஹ் வஹி மூலம் அறிவித்துள்ளார்.

பெஸ்லானில் குழந்தைகளைக் கொன்றதற்காக தீவிரவாதிகளைக் குறை சொல்லிப் பிரயோசனம் இல்லை. குழந்தைகளும் எதிரிகளே என்பது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தவொன்று. ஜிஹாத் செய்து எதிரிகளை அழிக்கும்போது அவர்களின் பெண்களை கற்பழிக்கலாம் என்பது நபிகள் நாயகமோ, அல்லது 1400 வருடங்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சமூகங்களின் வழக்கமோ அல்ல. அது அல்லாஹ் வஹி மூலம் அறிவித்தது. தெளிவாக இப்படிப் பிடித்து அடிமைகளாக்கப் படும் பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதை வஹி மூலம் அல்லாஹ் ஹலாலாக்கியிருக்கின்றார்.

மேலும், இதெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற விஷயங்கள், அப்போது இதுதான் அனைத்து சமூகங்களிலும் வழக்கமாயிருந்தது ஆகவே இப்போது அதெல்லாம் தவறு என்று கருதுவோர்களுக்கும் அல்லாஹ் தெளிவாக அப்போதே வஹி மூலம் அறிவித்திருக்கின்றார், இதெல்லாம் மாற்றமுடியாத கட்டளைகள் -  இறுதித்தீர்ப்பு நாள் வரைக்கும் இவற்றை மு·மீன்கள்(நம்பிக்கையுள்ளோர் - முஸ்லிம்கள்) பின்பற்றப்பட வேண்டியவை, இவற்றை மறுப்பது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப் பட்ட ஒன்று, அப்படி மாறுபாடு செய்வோர் தலையில் கொதிக்கும் தண்ணீர் ஊற்றப்படும், உருக்கும் செம்பை குடிக்க வைக்கப் படுவார்கள், தீயில் வறுத்து எடுக்கப் படுவார்கள் என்று.

ஆகவே, இத்தகைய மதவாதத்துக்கு, மத அடிப்படைவாதத்துக்கு, இவற்றிலிருந்து வெளிக்கிளம்பும் வன்கும்பல்களுக்கு, அவற்றின் தீவிரவாதச்செயல்களுக்கு, ஊற்றுக்கண்ணாயிருப்பது அல்லாஹ் எனும் அரபி இறைவன், தமது வானவர் ஜிப்ரீல் மூலம் தாம் தேர்ந்தெடுத்த முகமது என்ற நபிகள் நாயகத்துக்கு அறிவித்த
வஹியாகும். இந்த வஹி மூலமே அல்லாஹ் தம்மையும்,ஜிப்ரீலையும்,தமது தூதரையும் நம்பும் மு·மீன்களுக்கு(முஸ்லிம்களுக்கு) எவ்வாறு மாற்று மதத்தோரை நடத்தவேண்டும், அவர்களிடையே எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படித்தாக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டுள்ளார்...... அல்லது, அப்படி நம்பப்படுகிறது!

ஆம், இந்த நம்பிக்கையே இச்செயல்களின் பின்னால் உள்ளது. இந்நிலையில், இந்த வஹி பற்றி ஆய்வு செய்வதும், விவாதிப்பதும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. இந்த ஆய்வுகள், தனியொரு மனிதருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் சில ஆன்மீக அனுபவங்களின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட மதக்கோட்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து வன்முறையை தவிர்த்து, உலகில் அமைதியை நிலவச்செய்யும். மனிதர்களிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் மதப்பிளவுகளை தகர்த்து அனைவரையும் சகோதரர்களாக, நன்பர்களாக, சுதந்திரமாக சிந்தித்து செயல்படுபவர்களாக மாற்றும் என்பதே எனது நம்பிக்கை. அதனை நோக்கிய எனது சிறு முயற்சியே இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்.

இது சம்பந்தமாக விரைவில் இன்னுமொரு முக்கிய அறிவிப்பு தமிழோவியத்தில் வெளியாகும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors