Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கங்கை இல்லாத காசி - பாகம் : 10
- பாஸ்டன் பாலாஜி
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

அப்படி என்ன கேட்கப் போகிறாள் என்று மனசு பரபரத்தது.

"என்கிட்டே உனக்கென்ன தயக்கம்?" ஆர்வத்தோடு பார்த்தேன்.

கொஞ்ச நேரத் மௌனத்துக்குப் பின் கேட்டாள்.

"கல்யாணத்தைப் பத்தி உங்க அபிப்ராயம் என்ன? ரெண்டு பேருக்கும் சமபங்கா? இல்லே... ஆணின் சுகத்துக்காகவா?"

"எதுக்கு பீடிகை? விஷயத்துக்கு வா..."

"இல்லே... எனக்கு பதில் தெரிஞ்சாகணும்".

"நல்லா யோசிச்சு சொல்லுங்க. நீங்க எப்பவாவது மனைவிக்கு இஷ்டமில்லாத போது உங்க ஆக்கிரமிப்பைக் காட்டியதுண்டா?"

"எதுக்கு இப்போ இது?"

"இல்லை. நீங்க எங்கிட்டே பொய் சொல்ல முடியாது. அருவருக்கத் தக்கபடி பொண்டாட்டியையே பலாத்காரம் செய்கிறவங்க நிறைய பேர்..." அவளால் பேச முடியவில்லை. குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

ஆஃபிஸில் எக்கச்சக்கமான வேலை. அதோடு ஒரு மாச டூர். வந்ததும் பிருந்தாவைப் பார்க்க ஓடினேன். வீடு பூட்டி இருந்தது.

யாரிடம் கேட்பது? ஒன்றுமே புரியவில்லை. எதிரே சபாக் காரியதரிசி சபேசன் வந்தார்.

"என்ன செல்வம், ஆளையேக் காணோம்? அந்தப் பொண்ணு பிருந்தாவுக்குக் கான்சராமே! அடையாறிலே சேர்த்திருக்காமே. இப்போ எப்படி இருக்கு?"

என்ன இது? பூமி அதிர்கிறதா? கடல் கொந்தளிப்பா? இடி இறங்கியதா? திடீரென்று காது செவிடாகி, கண் குருடாகி உலகமே அஸ்தமித்து விட்டதா? விபத்து எதுவும் இல்லாமல் பஸ் ஏறி வந்து சேர்ந்தது பெரும் அதிசயம். நின்ற இடம் அடையாறு கான்சர் மையம்.

ஆஸ்பத்திரி நோயாளிகளுக்குத்தான் கிருமி தாக்குதால் என்றால், கணினிகளும் கிருமி நாசினி இல்லாததால் நோயுற்று இருந்தது. ரிசப்ஷனில் கேஸ் ஷீட்டுகளை புரட்டி, பெயர் கண்டு பிடிக்க அரை மணிக்குள்தான் ஆயிற்று. ஓடினேன்.

நல்ல வேளை... யாருமில்லை. நான் விரும்பிய தனிமை கிடைத்தது. கொஞ்ச நேரம் அவளைப் பார்த்தபடியே இருந்தேன். அது பொது இடம். ஆஸ்பத்திரி என்பதால் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன்.

"எப்போ வந்தீங்க செல்வம்? யார் சொன்னாங்க? ஆரம்ப நிலைதானாம். ஆபரேஷன் செய்தா சரியாயிடும்னு..." என் முகத்தைப் பார்த்து அவள் பேச்சு நின்று விட்டது.

தினம் வாக்கிங் ஆஸ்பத்திரி பக்கமாய் மாற்றிக் கொண்டேன். உலகம் என்ன சொல்லுமோ என்ற பயம் கூட என்னை விட்டுப் போய் விட்டது. ஷேவிங் செய்து கொள்வதில், மடிப்பு கலையாமல் ட்ரெஸ் பண்ணிக் கொள்வதில் எதிலுமே சிரத்தை இல்லை.

பணம் செலவழித்து ஸ்பெஷல் வார்டில் சேர்த்தேன்.

------ "இப்போ எல்லாம் வெட்ட வெளிச்சமாயிடுச்சே? என்னடி சொல்றே? உன் கள்ளப்புருஷன் தினம் வந்துட்டுப் போறானே! எதுக்கு?"

"அவரையே கேட்கிறதுதானே?"

"நீ இல்லாட்டா குடும்பமே நடக்காதுன்னு நினைச்சிண்டிருந்தியே? குழந்தைகள் மூணு வேளையும் மூக்கைப் பிடிக்கச் சாப்பிடறா; பள்ளிக்கூடம் போறா. பெரியவனுக்கு கால் செண்டர் வேலை கிடைச்சிருக்கு. மாசத்துக்கு 25,000".

"கேட்கவே சந்தோஷமாயிருக்கு. எப்படியோ என் தரித்திரம் என்னோடு ஒழிஞ்சா சரி!"

"ஆரஞ்சுப் பழத்தை உரிச்சுத் தரவா?"

"வேண்டாம். வாய்க்கு நன்னா இல்லே".

"ஏன்? அவன் வந்து ஊட்டி விட்டாதான் ருசிக்குமோ? என்ன பார்க்கிறே? கொண்டவனுக்கு துரோகம் பண்ணினே... உள்ளே புத்து புறப்பட்டுத்து! இல்லேன்னா சுத்தம் சுத்தம்னு பார்த்த உனக்கு இது வருவானேன்! என்னைப் பார்த்தியா, எப்படி இருக்கேன்?"

"நீங்கத் திருப்திப்பட்டா சரி!"

"தீசல்... இன்னும் உன் திமிர் அடங்கலியே! ஆபரேஷனில் பிழைச்சுட்டேன்னு வை... அவனோடு ஓடிடுவியா?"

"நிச்சயம் பிழைக்க மாட்டேன், டோ ண்ட் வொர்ரி."

கொலைகாரப் பாவி... ஊமை அழுகையுடன் மறுபடி வராண்டாவுக்கேத் திரும்பினேன். அவனை அப்போது சந்திக்கும் திடம் எனக்கில்லை. தான் வளர்த்த பூனையிடம் கூட பிரியம் காட்டுவார்களே! அவனுக்காகவே வாழ்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்ற அவளை; அதுவும் மரண வாசலில் இருப்பவளை; என்னமாய் வதைக்கிறான்?

"ஹலோ! செல்வம்... வந்துட்டீங்களா? ஏன் இங்கேயே நிக்கறீங்க? ரிலிவ் பண்ண ஆள் வரலியே, எப்படிப் போறதுன்னு யோசிச்சிட்டிருந்தேன். வேணு நேத்திலேர்ந்து வேலைக்குப் போறான். உங்க பேரைச் சொன்னதுமே மறுபேச்சுப் பேசாம அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கொடுத்துட்டானாம்"

"சந்தோஷம்"

"என்ன இது? பாலகுமாரன் மாதிரி தாடி வளர்த்துண்டு! இலக்கியமெல்லாம் கூட படிக்கறதுண்டா?" அட்டகாசமாய் சிரித்தான். " என்னை பார்த்தீங்களா? நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன். ஸ்டுண்ட் மாதிரி ஸ்னோ, செண்ட்ன்னு ஷோக்காயிருக்கேன் பார்த்தீரா? ட்ரிம்மா இருங்க சார்".

----- "அப்பா, இன்னிக்கு 'ஜே... ஜே' போகலாமா?"

"வேண்டாம்மா" ஜென்னி கேட்டு எதையும் நான் மறுத்ததில்லை.

"போங்கப்பா! வரவர நீங்க ரொம்ப மோசம். வெளியே கூட்டிட்டுப் போறதே இல்லே. போரடிக்குது"

உள்ளேயிருந்து ஜென்னியின் அம்மா வந்தாள். "இதை நான் சொன்னா தப்பு வரும். பணத்தைக் கொடுத்துட்டா தீர்ந்து போச்சா? ஆசை, பாசம் ஓண்ணுமில்லே... போன வாரம் சித்தப்பா வூட்டுக் கலியாணத்துக்குப் போனா ஆளுக்கு ஆள் கேள்வி கேட்கிறாங்க. ஏண்டீ, ஊரு உலகத்து ஆம்பிளைங்க வேலைக்குப் போகலியா? சம்பாதிக்கலையா? உம்புருசன்தான் அதிசயமா சம்பாதிக்கறாரா? உறவு மொறையிலே நல்லது கெட்டதுன்னா கலந்துக்கிறதில்லையான்னு? ஒங்களுக்கு என்னா வந்திச்சு? நேத்து ஒங்களுக்குப் பிடிக்குமேன்னு எறாலும், கோழியும் வறுத்திருந்தேன். தொட்டுக்கூட பார்க்கலை. ராவுக்குப் படுத்தா தூங்காம பெரள்றீங்க... கீழே கிடக்கிற சிகரெட் துண்டுங்க்ளே சொல்றதில்லே!"

"இப்ப என்ன செய்யணுங்கறே?"

"இன்னிக்கு எங்க அத்தை பேத்திக்கு மஞ்ச நீராட்டறாங்க. அதுக்கு நீங்க வரணும்".

"இவ்வளவுதானே... சரி", புறப்பட்டேன்.

டி.ஆர்.பி ரேட்டிங் உயரும்போது நீட்டிக்கப்படும் நெடுந்தொடராய், எனது நிராயுதபாணி நேரத்தை உணர்ந்து அவள் "நான் ஒண்ணே ஒண்ணு கேட்பேன். கோச்சுக்க மாட்டீங்களே?" என்றாள்.

(கங்கை வழியும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |