Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கங்கை இல்லாத காசி - பாகம் : 13
- பாஸ்டன் பாலாஜி
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

ஆபரேஷனுக்கு நாள் குறித்தாயிற்று. என்னில் இருந்து ஏதோ ஒன்று என்னை விட்டு விலகுகிறது போல் ஒரு உணர்ச்சி! எது? தெரிந்தால் அல்லவா நிறுத்தி வைக்க... முடியுமா?

முகத்திலெல்லாம் குண்டு குண்டாய் கொப்பளங்கள். சிலது வெடிக்க, சிலது கருக... இதற்கொரு முடிவே கிடையாதா?

கதவு ஒருக்களித்திருந்தது. ப்ருந்தாவின் கணவன் உட்கார்ந்திருந்தான். திரும்பி விடலாமா என்று நினைத்த போது ப்ருந்தா பார்த்துவிட்டாள்.

"வாருங்கள் செல்வம், நீங்கள் ஏன் தயங்க வேண்டும்?"

அவன் பார்வையில் குரூரமிருந்தது. என்ன கஷ்ட காலம். கால்கள் பின்ணடைய உள்ளே போனேன்.

"நீங்க பேசிட்டிருக்கீங்க... நான் வேணா விசிட்டிங் ஹால்லே வெயிட் பண்றேனே".

"ஏன், நான் உங்களுக்கு இடைஞ்சலா இருக்கேனா? நான் வேணா வெளியே போயிடறேன்". அவன் எழுந்து கொண்டான்.

"என்ன இது?" நான் பதற.

"கரெக்ட்... செல்வம். அவரை விடுங்க. நான் உங்ககிட்டே தனியாப் பேச வேண்டியது இருக்கு. ஆபரேஷனுக்கு அப்புறம் நான் பிழைப்பேங்கற நம்பிக்கை எனக்கு இல்லே. பிழைக்கக் கூடாதுன்னு ஈசுவரனை வேண்டிக்கறேன். அதனாலே மனசிலே இருக்கிறதை எல்லாம் கொட்டிடணும். நிறையப் பேசணும்னு ஆசையா இருக்கு. அதுக்குப் பொறுமையா கேட்கறவங்க வேணும். மனசிலேயே இருந்து செத்துட்டேன்னா நெஞ்சு வேகாது". ப்ருந்தா ஏகமாக குலைந்து போயிருந்தாள்.

"எத்தனை நாளாடீ காத்திட்டிருந்தே?" அடப்பாவீ.... இப்படி எத்தனை குடியைடா கெடுத்திருக்கே?" இருவர் மேலேயும் பாய்ந்தான் அவன். அட, அவன் பெயரைச் சொல்லவே இல்லை இல்லே... கோபாலன்.

நான் கூட சில நாள் கேலி செய்ததுண்டு. பெயர் கண பொருத்தமென்று.

"நிறுத்துங்க... அந்தரங்கமான வேளைகள்லே கூட 'உன்னை விட அவ அழகா இருக்கா, நான் அவளோட போனேன், இவளோடப் போனேன்னு' பேசற உங்களை விட அவர் மேலானவர். நேத்திக்கு 'நீ சீக்கிரம் செத்துத் தொலைச்சா நான் வேற கல்யாணம் பண்ணிப்பேன்'னு கொத்தினேளே! போய் புதுப் பொண்டாட்டிக்கு படுக்கை வாங்குங்கோ... ராணாவைக் கல்யாணம் பண்ணிண்ட மீரா, கண்ணன் மேலே நெஞ்சத்தைப் பறி கொடுத்தா. அது சரீரத் தேவையா? அது ஒரு ஆத்ம திருப்தி. அது சதை வெறியர்களுக்குத் தெரியாது."

"ப்ருந்தா பேசாம இரு" நான் தடுத்துப் பார்த்தேன். கோபாலன் அடிக்க வந்தார். அவரை மடக்கித் தள்ளினேன். வேகத்தில் கோபாலன் முன்னிலை மறந்து எங்கள் ஒருமை வந்துவிட்டது. ப்ருந்தாவின் வெறி தணியட்டும் என்று நான் வெளியேற சென்ற போது,

"செல்வம், இப்போ போனீங்க... மறுபடி உணர்வோடு என்னை நீங்க பார்க்க முடியாது". ப்ருந்தாவுக்கு மூச்சு திணறியது.

"செல்வத்தோட எனக்கு எந்த சரீரத் தொடர்பும் கிடையாது. இதை நீங்க நம்பணுங்கறதுக்காக சொல்லலை. ஆத்மா யாருக்கும் சொந்தமில்லை. நம்ம உணர்வுகளுக்கு, அன்புகளுக்கு, சின்னச் சின்ன ஆசைகளுக்கு எங்கே எதிரொலி கிடைக்கிறதோ அங்கே ஈடுபட்டுடறது. ராதா, மாதவன் காலத்திலே பிருந்தாவனத்திலே யிருந்து ஏற்படுகிற தொடர் விஷயம்".

"ஆபரேஷனுக்கு முன்னாலே நீ இப்படி பேசிட்டே இருக்கக் கூடாது, ப்ருந்தா..." நான் தடுத்தேன்.

"முன்னாலே பேசக்கூடாது... பின்னாலே பேச முடியாது". அவள் சிரித்தாள்.

"நான் இவர்கிட்டே பேசணும்".

ப்ருந்தா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் எனப் புரியாமல் என்னை முறைத்தபடி கோபாலன் வெளியேறினான்.

"செல்வம், முதல்லே கதவை சாத்திட்டு வாங்க... தாள் போட வேண்டாம். கொஞ்ச நேரத்திலே ஆயா வருவா. ஏன் செல்வம்... என்ன பயம்? இப்படி உட்காருங்க". கட்டிலை தட்டிக் காட்டினாள்.

"நான் உங்களை கற்பழிச்சுட மாட்டேன்".

"ஏன் ப்ருந்தா... எப்படியெல்லாமோ பேசறே? நான் போய் டாக்டரைக் கூட்டிண்டு வரட்டுமா?"

"வியாதி முத்திட்டதோன்னு பயப்படறீங்க! மரை லூஸாயிடுத்து... யோசிக்கிற சக்தியை இழந்தாச்சு... போதுமா! போங்க... எல்லாரும் போங்கோ... நன் தனி. அனாதை. எனக்கு யாருமே இல்லை!" விசித்து விசித்து அழுதாள்.

"ஏம்மா... ஏம்மா ப்ருந்தா இப்படி உன்னை வருத்திக்கறே? நான் இருக்கற வரை நீ தனி இல்லை. அனாதைங்கற வார்த்தைய என் காது கேட்க நீ சொல்லக் கூடாதும்மா. நீ பாடுவியே... 'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்' என்று... என் மனசுலே நிஜமாவே உதிரம் கொட்டுதம்மா!"

"என் உருவம் கோரமானதாலே என்னைப் பார்க்கப் பிடிக்கலே இல்லே? நேத்து ராத்திரி பூரா காய்ச்சல். திடீர் திடீர்னு காய்ச்சல் வருதே... அப்போ இவர் கேட்கறார்... 'ஏன் ப்ருந்தா செல்வத்தோட இருக்கும்போது இவ்வளவு சூடு இருக்குமா'ன்னு. எனக்கு எப்படி இருந்திருக்கும்? ஏன் இப்படிப் பேசறேன்னு புரிஞ்சதா?"

ப்ருந்தாவின் விழிகளைத் துடைத்தேன். சண்டாளன்... சூட்டுக் கோலால் கன்னா பின்னாவென்று நோயுற்றுக் கிடக்கும் மானையா குத்துவது.

"எல்லாம் எனக்குத் தெரியும் ப்ருந்தா. நித்தியச் சாவுக்கு விவஸ்தை கிடையாது. விடு... உருவத்தை வைத்துக் காதல் என்றால், அது காதலே இல்லை; காம விகாரம். நீ சொன்ன மீரா குழந்தையில் இருந்தே கண்ணனை நேசித்தாள். நான் உன் குரலை. அதன் பிறகு உன் அன்பை நேசித்தேன். மழை காணாப் பயிராயிருந்த நீ அதைப் பிடித்துக் கொண்டாய்... இதற்கு யார் வேண்டுமானாலும் எந்தப் பெயரும் சூட்டிக் கொள்ளட்டும். வேண்டாததற்கெல்லாம் மன உளைச்சல் படுவதை விடு".

"உங்ககிட்டே நிறையப் பேசணும். அதுக்கு தடை சொல்லாதீங்க... எல்லாத்தையும் உங்ககிட்டே கொட்டப் போறேன்! பைத்தியம்னு நீங்க கேலி செய்தாலும் சரி..."

(கங்கை வழியும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |