Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கங்கை இல்லாத காசி - பாகம் : 7
- பாஸ்டன் பாலாஜி
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

பெண்களை சோகத்தில் தன்வயபடுத்தலாம். அல்லது நக்ஷத்ரா வைரம் கொடுத்து கமல்ஹாசனாக மாற முயற்சிக்கலாம். ப்ருந்தாவை துன்பத்தில் ஆற்றுபடுத்தி அடைவதற்கு இதுவரை யோகம் அமையவில்லை. இப்போதோ 'R' சான்றிதழ் வழங்கப்பட்ட ஆங்கிலப்லட நாயகனாக நாயகியை கரைக்கும் நேரம்.

இப்படியெல்லாம் தடுமாறிய மனசுக்கு எவ்வளவோ லகான் போட்டேன். 'ஆனாலும் ஒரே ஒரு முறை தொடேன்' என்று உணர்ச்சிகள் கெஞ்சின.

நமஸ்கரித்து எழுந்தவளின் பின்னலைப் பிடித்திழுத்து பூவை முகர்ந்தேன், திரும்பினாள்.

"மூடிய கதவு. தனி வீடு. நமது தனிமை. அவரோ, குழந்தைகளோ இப்போதைக்கு வரமாட்டார்கள். இந்த உடலுக்கு அவர் சொந்தம், மனசு...? அதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? தவறு செய்வதற்கு வினாடிகள் போதும். செய்யத்தான் வேண்டுமா? நீங்கள் எது செய்தாலும் நான் தடுக்கப் போவதில்லை.

ஆனால் அதற்குப் பிறகு நாம் நிச்சியம் சந்திக்க மாட்டோ ம். ஆணின் பார்வைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியும். நிச்சயம் நான் உங்களை சகோதரனாக நினைப்பதாக சொல்லி ஏமாற்ற விரும்ப வில்லை. ஆனால் சமூக விதிகளை மதிக்கிறேன். உன் குழந்தைகளும், என் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடுகின்றன என்ற மேனாட்டு வாக்கியத்தை அருவருக்கிறேன்.

நமது நாட்டுப் பண்பாடு ஒருவனுக்கு ஒருத்தி. அதை மதிப்போம். உங்கள் துணையில்லாவிட்டால் நான் அதிலிருந்து வழுவி விடலாம். தவிர மது, மாது இரண்டும் இருக்கிறதே... ஒரு நாளோடு தீர்ந்து போவதில்லை! அனுபவிக்கும் நேரத்தில் திருப்தி தரும்... பிறகு யார் இருந்தாலும், பார்த்தாலும் லட்சியம் செய்யாமல் போதை வசப்படுத்தும். மானம், மரியாதையெல்லாம் காற்றில் பறக்கும். பிறகு நம் நிம்மதி கானல் நீராகிவிடும். அந்த நிலை நமக்குத் தேவைதானா?"

நான் பின்னலை விட்டு விட்டேன். தலை குனிந்திருந்தேன்.

"ஏன் இப்படி தப்பு செய்து விட்டது போல்? என் செல்லத்திடம் இது தான் எனக்குப் பிடிக்கவில்லை! இந்த மிட்டாய் பிங்க் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமாக்கும்! என் ப்ரெண்ட்ஸெல்லாம் எப்போதிருந்து ரசனையை மாற்றிக் கொண்டாய் என்று கேலி செய்யப் போகிறார்கள்!" வழக்கமான குறும்பு அவள் குரலில்.

"அப்போ புடவை பிடிக்கலையா?" எனக்கு ஏனோ என் மனைவியின் நினைவு வந்தது.

"பிடிக்கலையா? சரியாப் போச்சு... இதிலேயுள்ள உங்கள் ஆசையைப் பார்க்கிறேன். உங்களை திருப்திப் படுத்த, உங்கள் ரசனைக்கு வளைந்து கொடுக்க எனக்குத் தெரிந்ததும் என் கையாலாகாத்தனத்தை நினைத்து வேதனைப் படுகிறேன். நாம் ஏன் ஒரு பறவையாய் விலங்காய் பிறந்திருக்கக் கூடாது?" கண்கலங்கினாள் பிருந்தா. அவள் தாபங்களைத் தூண்டி விட்டு விட்டேனோ?

"சே, எனக்கு புத்தி சொல்லி விட்டு நீ ஏன் கலங்குகிறாய்! நாளும் கிழமையுமாய், கண்ணைத் துடைத்துக் கொள்"

அவள் கணவன் வந்ததும் இருவருமாய் சாப்பிட்டோ ம். புடவையைக் காட்டினாள். "எப்போ எடுத்தாய்?"

"மேரேஜ் ஆனிவர்ஸரி டேயில்லையா? நான் ட்யூஷன் சொல்லிக் கொடுக்கிற இடத்திலே கொஞ்சம் பணம் கொடுத்தா. நீங்க 'சாரி' வாங்கிக்க சொல்லி கொடுத்த பணம் கொஞ்சம் இருந்த்து. எல்லாத்தையும் போட்டு எடுத்தேன்."

"சரி தான்... இதென்ன ஜமுக்காள கட்டம்? கலரும் அடிக்க வராப் போல..."

"எனக்குப் பிடிச்சிருக்கு! இன்னிக்கு கச்சேசிக்கு இது தான்... மேடையிலே பளிச்சினு தெரியாது?"

"உனக்குப் பிடிச்சிருந்தா சரி... செல்வம் நீங்க என்ன சொல்றீங்க? புடவை நல்லாவா இருக்கு?"

மௌனமாக அவர்கள் உரையாடலை ரசித்துக் கொண்டிருந்த என்னை ஏன் இழுக்கிறார்?

"எனக்கு புடவையெல்லாம் வாங்கத் தெரியாது. பணத்தைக் கொடுத்துடுவேன். அவங்களே வாங்கிப்பாங்க!"

"நான் கூட அப்படித்தான். ஆனா இவ இருக்காளே... என்ன பணத்தைக் கொடுத்தாலும் கூடவே வந்தாதான்னு கழுத்தை அறுப்பா! அவளோட போய் போயி ஓரளவு டேஸ்ட் வந்துட்டது".

"உங்களுக்கு வாங்கத் தெரியாது. பணத்தைத் தாங்க... நாங்க வாங்கிக்கறோம்" என்று மண்டையில் தட்டும் என் மனைவிக்கும் பிருந்தாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்? மனைவி அமைவது இறைவன் கொடுத்த பரிசுதான்! எனக்குப் பரலோக பரமபிதா பரிசு கொடுக்கவில்லை.

அன்று மேடையில் பிருந்தா அதைத்தான் கட்டிக் கொண்டு பாடினாள். என் காது படவே பலர் புடவையை கேலி செய்தனர். ஆனால், பிருந்தா... என் அன்பை மட்டுமே அதில் பார்த்திருக்கிறாள். எனக்கு அது போதும்!

முதன் முதல் ஆசையாய் வாங்கிக் கொண்டு வந்த புடவையை என் மனைவி எப்படியெல்லாம் கேலி செய்தாள்! அதோடு போச்சா? குழந்தைகளுக்கு எடுத்தாலும், "ஐயே, இது என்ன கலரு குழம்பிப் போய்! இதை யாரு கட்டுவா? வேலைக்காரி கூட எம்புட்டு நாகரிகமா எடுக்கறா? உங்கப்பாவுக்கு ஒரு ஃபாஷனும் தெரியலை..." இப்படிச் சொல்லிச் சொல்லியே நான் வீட்டுக்காக துணி எடுப்பது துப்புரவாக நின்றுவிட்டது.

மனிதன் நிம்மதியே உணவு, உடை, உறையுள் மூன்றிலும் அடக்கம். நாலாவது தான் முக்கியம். இந்த மூன்றையும் இணைப்பது துணை. நல்ல நண்பர்கள், மனைவி. நண்பர்கள் விஷயத்தில் பாக்கியம் செய்த நான் இரண்டாவதில் தரித்திரனாகி விட்டேன். சரி, விடுங்கள்... அதையே பேசிக் கொண்டு! பிருந்தாவைப் பார்க்கும் போதெல்லாம் இந்த நினைப்பு தோன்றுகிறதே! நான் என்ன செய்யட்டும்!

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மல்லி, ஜாதியை எங்கே பார்த்தாலும் அவள் என்னைப் பார்ப்பாள். நான் பர்ஸை திறப்பேன். என் மனதை மலர வைக்க அவள் தான் எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறாள்?

வெளியில் போகாத நாட்களிலும் 'தலையில் கட்டுமல்லியோடுதான் என்னை வரவேற்பாள். என் ரசனைகள், வெறுப்புகள் எல்லாம் அவளுக்கு அத்துப்படி.

(கங்கை வழியும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |