Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கங்கை இல்லாத காசி - பாகம் : 8
- பாஸ்டன் பாலாஜி
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

என் பிருந்தாவுக்கு என்ன உடம்பு?

டாக்டரிடம் போகலாமென வற்புறுத்தினேன். மறுத்து விட்டாள். பின்னால் பார்த்துக் கொள்ளலாமென சொல்லி விட்டாள்.

எங்கேயோ இடித்தது... எங்கே என்று புரியவில்லை!

"என்ன சிந்தனை? காபி ஆறிப் போறது" என்றாள்.

"காபி வேண்டாம்... நீ குடிச்சிடு"

"ஏன்? ரொம்ப அலட்டிக்காதீங்க. உங்களாலே காபியை வேண்டான்னு சொல்ல முடியாது"

"இப்போதுதான் சொல்றேனே..."

"அதான் ஏன்கிறேன்?"

"என்னை பத்தி நீ இவ்வளவு தெரிஞ்சு வைச்சுட்டிருக்கறப்போ, உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதுன்னு என்னை முட்டாளாக்கிட்டே பாரு! அதுக்காகத்தான்..." வெடுக்கென்று எழுந்தேன்.

இதென்ன என் கைகளுக்கு மட்டும் சூடும் குளிர்ச்சியுமாய்? வெயில் காலத்தின் வெளியில் நின்ற காரின் உஷ்ணமும், விளம்பரங்களில் காண்பிக்கும் மென்தால் பபுள்கம் போட்டால் வரும் சில்லிர்ப்பும், ஒருங்கே ஏற்பட முடியுமா? நிச்சயம் முடியும். என் ப்ருந்தாவின் தொடுகை ஏற்படுத்திய குளிர்ச்சியை அவள் கண்ணீர் போக்கியது.

தானாக வந்து காதலி ஸ்பரிசித்தால், அந்த இன்பமே தனி என்று வள்ளுவரின் காமத்துப்பாலில் படித்ததுண்டு! அனுபவத்தில் இப்பொழுது உணர்ந்த போது? வள்ளுவர் இஸ் க்ரேட்.

"செல்வம்... நீங்க காபியைக் குடியுங்க. நான் சொல்றேன்..."

அந்த சங்கீதக் குரலில் முதன் முதல் என் பெயரை உச்சரிக்கிறாள். இரண்டாவது இன்பம். எத்தனையோ பேர் என்னைக் கூப்பிட்டு இருக்கிறார்கள். என் பெயர் இத்தனை அழகாகவா இருக்கிறது!?

பேசாமல் காபியைக் குடித்தேன்.

"அவர் வேலை பார்க்கிற ஜவுளிக் கடையை விற்கப் போறாங்களாம். பழைய முதலாளி சிங்கப்பூர் போறார். புது முதலாளி இவங்களுக்கு எல்லாம் மூணு மாசச் சம்பளம் கொடுத்து நீக்கிட நினைக்கிறாராம்! இவர் பழையபடி வேலை தேடணும்... அதிகம் படிப்புமில்லை. இருபத்தி நாலு மணி நேரமும் வீட்டிலே இருந்தா இவர் தொல்லை தாங்க முடியாது... அந்தக் கவலைதான்!"

இன்னும் அவள் என் கையை விடவில்லை. நானும் விடுவித்துக் கொள்ளவில்லை.

என் வைர மோதிரம் தொலைந்து விட்டதாக கேள்வி பட்டதும் என் மனைவி குய்யோ, முறையோவென்று அலறினாள். ஆனால், என் ப்ருந்தாவுக்கு அது ஜவுளிச் சரக்காக மாறி இருக்கிறது தெரிந்தால் என்னை சும்மா விடுவாளா?

எப்படியோ, ப்ருந்தா பழையபடி கலகலப்பாக இருந்தால் சரி. அவள் ஸ்பரிசம் எதிர்பாராத போனஸ். அது அடிக்கடி கிடைக்காதது.

என் கதாபாத்திரங்களை அவள் விமரிசிக்கும் கோணமே தனி.

ஆனால் இன்னொரு சுகத்தை இழக்கத் தயாராயில்லை. கண்டிப்பாய் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட வேண்டும் என்று கட்டளை போட்டு விட்டேன்.

"ஏன் செல்வம்... வைதீக குடும்பத்தில் பிறந்தவளை ஒரு நிமிடத்தில் அந்த அனாசாரத்தோட அனுப்பிட்டேளே?" என்று கடிந்து கொள்வாள்.

"ஆனாலும் நீங்க வரவர ரொம்ப மோசம்... கல்யாணம் பண்ணிண்டு ரெண்டு குழந்தை பெத்தவ ஓடிப் போறதாவது!" என்று கோபித்துக் கொள்வாள்.

நான் புன்னகையோடு மௌனமாய் இருப்பேன்.

"இன்னிக்கு நீ கச்சேரிக்குப் போகக் கூடாது".

"இது என்ன வம்பு? அட்வான்ஸ் வாங்கிட்டு வாக்குத் தவறலாமா? அப்புறம் யார் சான்ஸ் கொடுப்பா?"

ஏடாகூடமான நேரத்தில் வந்து விட்டேனோ? கால்கள் உள்ளே போகத் தயங்கின. என் ப்ருந்தாவின் குரல் அழுவதா? அட்டகாசமாய் கொக்கரிக்கிறான் அவள் கணவன்.

"சான்ஸ் வரக்கூடாதுன்னுதானே அப்படி சொல்றேன்! அப்பதான் உன் கொட்டம் அடங்கும்..."

"நீங்க பேசறது உங்களுக்கே நன்னா இருக்கா? நான் என்ன கொட்டமடிக்கிறேன்?"

"சம்பாதிக்கற திமிர்! வாய்க்கு வாய் பதிலா கேட்கறே?"


ப்ருந்தாவுக்கு விழுந்த அடி எனக்கு உறைத்தது.

"நீங்க ரெண்டு வேஷம் போடறேள். அவர் எதிரிலே நல்லவராட்டம் நடந்துண்டு போனப்புறம்.... சே, நாக் கூசறது! கச்சேரிக்குப் போகலேன்னா பட்டினி கிடக்க வேண்டியதுதான்"

"கிடந்தா என்ன மோசம் போயிடும்? தாலி கட்டினவன் நான் சொல்றேன். பட்டினி கிட! எங்கப்பா அன்னிக்கே சொன்னார். பொம்மனாட்டியை மேடை ஏத்தி சம்பாதிக்க விட்டே, துளிர்த்துப் போயிடும். மதிக்க மாட்டேன்னார்... நான் முட்டாள். உன்னை நம்பி ஏமாந்துட்டேன்"

"நீங்க சரியான ஆம்பிளையா இருந்தா செல்வம் வந்த உடனே நேருக்கு நேர் சொல்லுங்கோ..."

"ஐயோ... அம்மா" எதனாலோ அடிக்கிறான். விறகா, கம்பா? தள்ளி பார்த்தேன். கதவு தாளிட்டு இருந்தது. தட்ட பயம்! விவாகரத்தின் காரணகர்த்தாவே நானாக இருக்கும்போது அவர்கள் முகத்தில் முழிப்பதெப்படி?

"ரத்தம் வருதா? வரட்டும்... செல்வம் என்ன பெரிய கொம்பனா? அவன்கிட்டே எனக்கென்னடி பயம்? தாராளமா சொல்றேன். தேவடியாத்தனமா பண்றே? அவன் யாருடீ உனக்குப் பூ வாங்கிக் கொடுக்க? அவன் எடுத்துக் கொடுத்த புடவையைக் கட்டிக்கறதை விட அம்மணமா இருக்கலாமே?! எதுக்காகடீ வைர மோதிரத்தை செலவு பண்றான்? சொல்லு... எனக்குத் தெரிஞ்சாகணும்!"

"சே.. முடியை விடுங்கோ. கொஞ்சம் கொஞ்சமா இப்படிக் கொல்றதை விட விஷம் கொடுங்கோ... தின்னுட்டு ஒரேயடியா ஒழிஞ்சுடறேன். சரியான சமயத்திலே செல்வம் உதவலேன்னா குழந்தைங்க படிக்கிறதேது? நடுத் தெருவில் நின்னிருப்போம்"

"படிப்பென்னடி படிப்பு? போய் மூட்டை தூக்கச் சொல்லு... ஹோட்டல்லே போய் மாவரைக்க சொல்லு... பொண்ணை எவனாவது கூலிக்காரனுக்கு, குமாஸ்தாவுக்குக் கொடு! ஐ.ஏ.எஸ். வேணுமின்னு ஏன் ஆசைப்படறே?"

"தூ... நீங்களும் ஒரு தகப்பனா? என்ன பெருந்தன்மையான நினைப்பு!"

மறுபடி அடி விழுந்த போது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தாங்க முடியாமல், ஆனது ஆகட்டும் என்று படபடவென்று கதவைத் தட்டி விட்டேன்.

(கங்கை வழியும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |