Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கங்கை இல்லாத காசி - பாகம் : 9
- பாஸ்டன் பாலாஜி
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

சிறிது நேரம் அசாதாரண மௌனம். கதவு தாள் நீக்கப்பட்டது.

"அட, உங்களுக்கு ஆயுசு நூறு. பிருந்தா செல்வம் சார் வந்திருக்கிரார். சூடா காபி கொண்டா... என்ன இந்த நேரத்திலே? சாயங்காலம் தானே கச்சேரி? கதை ஏதாவது பிரசுரமாகி இருக்கா?"

அற்புதமான நடிப்பு. சற்று முன் நான் கேட்டவை நாடக வசனங்களோ? இருக்க முடியாது. என் காதுகள் என்னை என்றுமே ஏமாற்றிய தில்லை!

பிருந்தா காபியுடன் வந்தாள். முகத்தைக் கழுவி, லேசான பவுடர் பூச்சுடன் திலகமிட்டிருந்தாலும் முகமும், கண்களும் லேசாக வீங்கி இருந்தன. தலை குனிந்தபடி வைத்து விட்டு புறப்பட்டாள். "ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" இவள் எவ்வளவு தூரம் நடிக்கிறாள் என்று பார்ப்போம்! 'ஒண்ணுமில்லே வெங்காயம் உரிச்சேன்... அதோட லேசா ஜுரம்...' "அப்படியா? அப்படீன்னா ஏன் வெங்காயம் உரிக்கறீங்க? கச்சேரியை வேணா கேன்சல் பண்ணிடலாமா?"

அவசரமாக மறுத்தான் அந்த அயோக்கியன். "சேச்சே, அதெல்லாம் வேண்டாம். சாயங்காலத்துக்குள்ளே சரியாயிடும். வாக்கு மாறினா சான்ஸ் கிடைக்காது... ஏன் பிருந்தா, உடம்பு சரியில்லேன்னா வெங்காயம் ஏன் உரிக்கறே? வெறுங் குழம்பு வைக்கிறது? பார்த்தீங்களா சார்... உங்ககிட்டே சொல்றது எங்கிட்டே சொல்லி இருக்கக் கூடாதா? சாருக்கும் இலையைப் போட்டுடு..." நான் அவசரமாக மறுத்து விட்டு வெளியே வந்தேன். நான் வந்த காரியமே வேறே!

கொஞ்ச தூரம் வந்த பிறகு தான் செருப்பை மறந்து விட்டது நினைவுக்கு வந்தது. கொஞ்ச நாளாய் ஒதுங்கி இருந்த மறதி ஒட்டிக் கொண்டது எப்போ? மறுபடி திரும்பினேன்.

"ஏன், அவன் மடியிலே படுத்துண்டு கொஞ்சறது தானே? உடம்பு சரியில்லையோ உடம்பு... அவனாடீ உம் புருஷன்?"

"சே, நீங்க ஒரு மனுஷரே இல்லே" நான் செருப்பை எடுக்காமலே திரும்பி விட்டேன்.

 "உன்னாலே இவ்வளவையும் சீரணிச்சுண்டு எப்படி வளைய வர முடிகிறது?"

இதமாக புன்னகைத்தாள் பிருந்தா.

"உங்களுக்கு பிருந்தா கதை - ஐ மீன்... துளசி கதை - தெரியுமோ?

நீங்க முழிக்கறதைப் பார்த்தா தெரியாதுன்னு நினைக்கிறேன். அவள் தன் கணவன் சங்க சூடனை உயிரா மதித்தாள். அவனைப் போரிலே தேவராலேயும், மூவராலேயும் கூட வெல்ல முடியலை... கடைசியிலே மகாவிஷ்ணு ஒரு உபாயம் செஞ்சார்."

"தெரியும்... சங்க சூடன் உருவத்திலே போய்..."

"ஆமாம்... இந்திரன் செய்த அதே தப்பு! அவன் செய்தப்போ அவனுக்கு உடம்பெல்லாம் கண்ணாச்சு. சாட்சாத் நாராயணனே செய்தப்போ..."

"அசுரனை ஒழிக்க வேற வழி தெரியலே! துளசியின் கற்பு ஒரு கவசமா இருந்த்து. அசுரன் அட்டகாசம் தாங்க முடியலே... சரி, இப்போ எதுக்கு சங்க சூடன் கதை?"

"சொல்றேன்... இன்னிக்கும் துளசி மகாவிஷ்ணுவின் மார்புலே தான் மாலையாத் தொங்கறா. அவர் பாதத் தடியிலே தான் கிடக்கா... துளசி தான் எனக்குப் பிரியம்னு அவர் வாயாலே சொல்லி இருக்கார்... ஜ, மீன்... இப்பப் புரியும்னு நினைக்கிறேன். ரெண்டாவதாக் கிடைச்ச மகாவிஷ்ணுவோட தான் அவ இணைஞ்சிருக்கா. தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு பிருந்தான்னு பேர் வைச்சதாலே! உங்க பேர்லே ஒரு மந்திர சக்தி இருக்கு. உங்க வரவுக்காக, தரிசணத்துக்காக நான் எதையும் தாங்கிப்பேன் தாங்கிக்க முடியும்."

என்னால் எதுவுமே பேச முடியவில்லை. வறியனுக்கு புதையல் கிடைத்த மாதிரி எனக்கு அவ்வளவு பாக்கியமா?

"என்ன பேசாம இருக்கேள் செல்வம்? இவ மனசாலே சோரம் போறதுக்கு 'ஒரு நாள் அறியாம தவறு நடந்துட்ட துளசியை' வக்காளத்துக்கு இழுக்களான்னு நினைக்கிறேளா?"

"இல்லை" அவசரமாக மறுத்தேன்.

மனசாலே சோரம் போகாதவா யாரு? நான் தைரியமா ஒத்துக்கறேன். ரொம்பப் பேர் அத்திக்காயா மூடி வைச்சுக்கறா... ராதா கல்யாணம் பண்றாளே! ராதா யாரு? இன்னொருத்தன் மனைவி! அது தேவலையா? மூடி மறைக்கத் தெரிஞ்சவா தான் பத்தினின்னா நான் பத்னி இல்லே..."

அந்த கோரங்களுக்குப் பிறகு நான் சில நாள் பிருந்தாவை சந்திக்கவே இல்லை. ஆமாம். சில நாள் தான்... அப்புறம் போன் பண்ணி சந்தித்த போது தான்! அவள் கொட்டி முடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.

"செல்வம், ஒரு கதை கேட்டிருக்கேளா? புலி விரட்டிண்டு வந்ததாம் ஒருத்தனை. பாதுகாப்புக்காக மரத்தில் ஏறினால் மேலே மலைப்பாம்பாம். பயந்து போய் பிடியை விட விழுந்த இடம் ஒரு பாழும் கிணறு. இடையில் இருந்த கரட்டில் அவன் தொத்திக் கொண்டு பார்த்தால் கீழே வாயைப் பிளந்து கொண்டிருக்கும் சிங்கம். எப்படியோ தவறி விழுந்திருக்கிறது.

மேலே புலி... கீழே சிங்கம்... இந்த நிலையில் இவன் ஏறி அலைப்புண்ட வேகத்தில் மரத்தில் உடந்த தேன்கூட்டிலிருந்து தேன் துளிகள் சொட்டியதாம். அதை ருசித்த அவன் சப்புக்கொட்டினானாம். இந்தக் கதையை நான் எத்தனை முறை ரசித்திருக்கிறேன் தெரியுமா? மனிதப் பிறவிகளின் ரசனைகள் அப்படி... இதிலே உங்கள் சந்திப்பு எனக்குத் தேன் துளி! இன்னும் எப்படிச் சொன்னால் உங்களுக்குப் புரியும்?"

"போதும் பிருந்தா... நீ சொல்லி நான் புரிந்து கொள்ள வேண்டிய உணர்ச்சியில்லை இது! ஆனாலும்..."

"அவருக்குப் பொறுப்பும், பாசமும் குறைச்சல்! ஏன் இல்லேன்னு சொன்னாக் கூடத் தப்பில்லை. என் சம்பாத்தியம் வேண்டி இருக்கற அதே சமயம் நான் சம்பாதிக்கறதும் பிடிக்கலை."

"செல்வம், ஃப்ராங்கா உங்க கிட்டே ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்றேளா?"

"இது வரை மறைச்சுப் பேசியிருக்கிறதா அர்த்தமா?"

"அப்படி இல்லை... இது கொஞ்சம் அந்தரங்கமானது. சொல்லப் போனா ஒரு பெண் பேசக் கூடாதுன்னு வகுத்து வைச்சிருக்கிறது... என்னடா, இவ வெட்கமில்லாம இதெல்லாம் கேட்கிறான்னு நீங்க நினைச்சாலும் ஆச்சரியப் படறதுக்கில்லே!?"

(கங்கை வழியும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |