Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் - யார் இந்த கொயின்ராட் எல்ஸ்ட் (Dr.Koenraad Elst)?
- நல்லடியார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

Elst Koenraadகொயின்ராட் எல்ஸ்ட் ஒரு உளவியல் நிபுணரோ அல்லது மருத்துவரோ அல்லர். இந்தியாவுக்கு வந்த ஒரு சாதாரண பல்கலைக் கழக மாணவர். இவர் சீன ஆய்வுக்கல்வி, இந்தோ-ஈரானிய ஆய்வுக்கல்வி போன்றவற்றைக் கற்று, இந்து மீட்சி குறித்த பொருளில் ஆய்வு செய்து லவனில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். முதலில் பாபர் மசூதி பிரச்னையை மையமாக வைத்தே காஷ்மீர் ஹெரால்டில் எழுதி இந்துத்துவா அபிமானிகளின் ஆதரவைப் பெற்றார்.

சீன வரலாறு, ஆரிய ஜாதியக் கொடுமைகள் மற்றும் படையெடுப்பு குறித்த ஆய்வுகள் செய்து இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியவர். கிறிஸ்தவம், இஸ்லாம் பற்றிய எதிர்மறைக் கண்ணோட்டம் கொண்ட எல்ஸ்ட் இந்தியாவில் இந்து மீட்சி இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தார். இஸ்லாத்தை இதுவரை ஆரியக் கண்ணோட்டத்தில் விமர்சித்து வந்த இந்த இந்து மீட்சியாளர்களிடம்- டாக்டர். கொயின்ராட் எல்ஸ்ட், பிரான்ஸ்வா கோஷியே (Francois Gautier), மைக்கேல் டேனினோ (Michel Danino) போன்ற மேற்கத்திய சிந்தனையாளர்ககளின் படைப்புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

சல்மான் ருஷ்டியின் விரச எழுத்துக்களால் எழுந்த உலகளாவிய எதிர்ப்பு இவர்களுக்கு இருக்காதற்குக் காரணம், ருஷ்டி, முகம்மது நபியின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி விரசமாக எழுதி நடுநிலையாளர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தன் மூலம் அவரின் எழுத்துக்கள் எடுபடாமல் போயின. இதனை கருத்தில் கொண்டு மேற்சொன்ன இறக்குமதி செய்யப்பட்ட மேற்கத்திய எழுத்தாளர்கள் இஸ்லாம், கிறிஸ்தவம் மட்டுமின்றி ஒப்புக்கு இந்துத்துவா, ஆரிய படையெடுப்பையும் விமரிசித்து கட்டுரைகள் எழுதி ஒரு நடுநிலை முகமூடியுடன் எழுதும் கூலி எழுத்தாளர்கள். டாக்டர் எல்ஸ்டை தாங்கிப் பிடிப்பவர்களின் பின்னணியைக் ஆராய்ந்தால் மறைந்திருக்கும் அவர்களின் இஸ்லாமிய குரோதம் பல்லிளிக்கிறது. (இணைய தளங்களில் டாக்டர். எல்ஸ்டின் படைப்புகளைத் தேடினால் இந்துத்துவா இணையதளங்களும் குழுமங்களும் முந்திக் கொண்டு வருவதிலிருந்தும் இவர்களின் பின்னனி தெளிவாகிறது)

இஸ்லாம் அறிமுகமாகிய காலம் முதல் கடந்த 1400 வருடங்களாகச் சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டை கொஞ்சம் "மேற்கத்திய மனோதத்துவ கண்ணோட்டம்" என்ற புதிய கோப்பையில் கொடுக்க முனைந்துள்ளனர். இதிலும் அவர்களின் அறியாமையும், இஸ்லாத்தைப் பற்றிய அதீத அச்சமும் (phobia) வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

முதலில் "மனோத்துவம்" என்பதே நிகழ்கால ஆராய்ச்சி. ஒருவனின் வெளிப்புற செயல்பாடுகளையும் ஆழ்மன எண்ணங்களையும் வைத்து அவரின் செயல்பாடுகளை கணிப்பது. 1400 வருடங்களுக்கு முந்தைய மனிதரின் வரலாற்றையும் சாதனைகளையும் வைத்து "மனோதத்துவ ஆய்வு" என்பது ஒரு அனுமானமாகவே இருக்க முடியும் என்பது தெளிவு.

இதுவரை உலக வரலாற்றை மாற்றி அமைத்தவர்களின் முஹம்மது நபி முன்னிலையில் இருப்பதற்கு காரணம் அவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் வரலாற்றில் தெள்ளத் தெளிவாகப் பதியப் பட்டுள்ளன. இதற்காகவே கிட்டத் தட்ட ஐந்து லட்சம் தனி நபர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் அலசப் பட்டு, நம்பகத்தன்மை புடம் போடப் பட்டுள்ளது. இதனாலேயே டாக்டர். எல்ஸ்ட் போன்றவர்கள் எடுத்து வைக்கும் மனோதத்துவ காராணங்கள் எளிதில் நிராகரிக்கப்படும். காரணம் முஹம்மது நபியின் பிறப்பு முதல் இறப்பு வரையான நிகழ்வுகளை ஆராய்ந்தால், எழுதப் படிக்கத் தெரிந்திராத ஒருவரின் கொள்கை எந்த அளவு எதிரிகளையும் ஈர்த்து அவர்களாலே தீவிரமாக எதிர்க்கப்பட்ட அக்கொள்கைகளை பல பிரதேசங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது என்பதைக் கவனித்தால், டாக்டர் எல்ஸ்டின் அனுமானங்களும் உளவியல் காரணங்களும் கேலிக்குரியவையாகின்றன.

முஹம்மது நபியின் பலதார மணத்தைக் காரணம் சொல்லி கற்பை விமரிசித்தவர்களுக்கு, அத்தகைய திருமணங்களின் காலகட்டம், தேவை, சமூகப் பழக்கவழக்கம் ஆகியவற்றையும், மனைவியரின் நற்சான்றுகளாலும், அத்தகைய குற்றச்சாட்டுகள் எடுபடாமல் போயிற்று. ஒருவனின் கற்பை குறை சொல்லுவதற்கும் அந்தரங்கத்தை விமரிசிப்பதற்கும் அவரின் மனைவியே தகுதியானவள். ஆனால் திருமணம் செய்த அனைத்து மனைவியரும் முஹம்மது நபியை நேசிக்கக் கூடியவர்களாகவே இருந்துள்ளனர். எந்த அளவுக்கென்றால் தன்னுடன் அதிக நாள் தங்கமாட்டார்களா என்று ஏங்கும் அளவுக்கு அவரிகளின் இல்லறம் இருந்துள்ளது.

அன்றைய போர்களைக் காரணம் சொல்லி, ஆதிக்க வெறியர் என்ற குற்றச்சாட்டு, போர்களுக்கான நியாயமான காரணங்களாலும், அத்தகைய போர்களால் ஏற்பட்ட சமூக மாற்றங்களாலும் எடுபடாமல் போயின. அக்கால போர்கள் முஹம்மது நபியின் மீது திணிக்கப்பட்டவையாகவே இருந்ததால், இக்காரணமும் எடுபடாமல் போயிற்று.

குர்ஆன் அது அருளப்பட்ட காலத்தில் வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம், விஞ்ஞானமும் மக்களின் மன நிலையிலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ள தற்காலத்திற்கு எப்படிப் பொருந்தும் என்பவர்களால் அதற்கு மாற்றமான சிறந்த கொள்கையை வைக்க முடியாததால், இந்த காரணமும் எடுபடாமல் போயிற்று. விந்தையிலும் விந்தை என்னவென்றால், புதுமையை விரும்பும் இவர்கள், நியாயமாக இதர பழமைவாத மதங்களுக்குப்பின் தோன்றிய இஸ்லாத்தின் உன்னத கோட்பாடுகளை விமர்சிப்பது காழ்ப்புணர்வேயன்றி வேறென்ன?

சரி, இஸ்லாம் ஓர் இனிமையான அமைதியான மார்க்கம் என்றால் ஏன் இஸ்லாத்தின் பெயரால் குண்டு வெடிப்புகளும் தீவிரவாதமும்? எந்த இஸ்லாமிய நாட்டில் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்? என்ற கேள்விகள் எழலாம். உலகில் அன்றாடம் நடக்கும் அநியாயங்களில் 90% இஸ்லாம் அல்லாதவர்களால் நடத்தப் படும் போது, அவர்களின் மதமோ கொள்கையோ முன்னிலைப்படுத்தி விமரிசிக்கப்படுவதில்லை.

இங்கொன்றும் அங்கொன்றும் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களால் நடத்தப்படும் பயங்கரவாதங்களுக்கு, அந்த அடக்குமுறையாளர்களும், அவர்களின் கொள்கைகளும்தான் காரணமேயன்றி இஸ்லாம் எவ்விதத்திலும் காரணமல்ல. அவ்வாறு தீவிரவாதிகளாக்கப்பட்டவர்கள் துரதிஷ்டவசமாக முஸ்லிமாக இருப்பதுதான், இஸ்லாம் விமரிசிக்கப்பட காரணமேயன்றி வேறில்லை. நேபாளத்தில் நடக்கும் நக்சலைட்டுகளின் தாக்குதலுக்கும், இலங்கையில் நடக்கும் இனப்போராட்டங்களுக்கும் எப்படி அவர்கள் சார்ந்த மதம் காரணமல்லவோ அதுபோலதான் முஸ்லிம்களால் நடத்தபடும் தீவிரவாதத்திற்கு இஸ்லாம் காரணமல்ல.

எங்கெல்லாம் தீவிரவாதமும் பயங்கரவாதமும் நடைபெறுகிறதோ அவற்றையெல்லாம் தங்களுக்கு சாதகமாக்கி முஸ்லிம்களின் மேல் வெறுப்பும் துவேசமும் வளர்க்கும் ஒரு கூட்டம் உலகளாவிய அளவில் இருக்கிறது. மொத்தத்தில் இவர்களின் செயல்திட்டம் ஒன்றே ஒன்றுதான். சமத்துவத்தையும், சமூகமாற்றத்தையும் ஏற்படுத்தும் இஸ்லாத்தை ஒழித்து தங்கள் சனாதன கொள்கையை எவ்வித தடையுமின்றி நிறுவுவது.

பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சிரியா, சூடான் எனத் தங்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட முஸ்லிம் நாடுகளின் பட்டியலை அதிகரிப்பதில் இஸ்ரேலின் அரசியல் இலாபமும், அமெரிக்காவின் பொருளாதார இலாபமும் அடங்கி இருக்கிறது. எங்கெல்லாம் அரசியல், பொருளாதார, ஜாதிய சிந்தனைகளுக்கு இஸ்லாம் தடையாக இருக்கிறதோ அங்கெல்லாம் தீவிரவாதம் இருப்பதாக இதன் பயனாளர்கள் பிரச்சாரம் செய்வார்கள். (எங்கெல்லாம் இஸ்லாம் கடைபிடிக்கப்படுகிறதோ அந்த நாடுகளை ஆள்பவர்களையும் சட்டங்களையும் காட்டுமிராண்டிகள் எனச்சொல்வர். இவர்களுக்குத் தேவைப்படும் போது, குறிப்பாக வளைகுடா பெட்ரோலை அபகரிக்க அல்லது பங்கு போட்டுக் கொள்ள, தீவிரவாதத்துக்கு எதிரான நண்பர்கள் என்று சவூதி, அமீரகம், குவைத், ஜோர்டான், கத்தார்,பஹ்ரைன் ஆகிய நாடுகளின் முஸ்லிம் முடியாட்சி ஆட்சியாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டு, இதர முஸ்லிம் நாடுகளில் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக காட்டிக்கொள்வது வேடிக்கைதானே.)

இஸ்லாத்தின் சமீபத்திய வளர்ச்சியை நோக்கினால் இஸ்லாத்தின் பெயரால் கடந்த 200 ஆண்டுகளுக்குள் எந்த நாடும் அந்நிய நாட்டுடன் போரிட்டதில்லை. கடந்த இருபது வருடங்கள் வரை வெடிகுண்டுகள், தீவிரவாதம் உலக மக்களுக்கு பரிச்சயமில்லாதவை, இன்று இஸ்லாத்தை ஒழிக்க பிரபலப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தொடங்கிய இஸ்லாமிய துவேசம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று வழிமொழியப்பட்டு அதற்கு எதிரானப் போர்கள் என்ற பெயரில் முஸ்லிம்களை கருவறுக்கும் கடமையை சிலரும், இஸ்லாத்திற்குள்ளேயே குழப்பங்களை செய்தும், நம்பிக்கையாளர்களை விமர்சித்தும், கொள்கை ரீதியான குழப்பங்களை செய்து இஸ்லாத்தை முடிந்தவரை இம்சிக்க இன்னொரு கூட்டமும் இயங்கி வருகிறது. அதற்கு இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான் டாக்டர்.கொய்ன்ஸ்ராட் எல்ஸ்ட் வகையறாக்கள்.

இவர்களின் சிந்தனை தாக்குதல்களுக்கும், அதற்கான பின்னனியையும் பற்றி அறிய ஒரு பின்னோக்கு பார்வை அவசியமாகிறது. வஹீ பற்றிய தனது கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தியுள்ள அறியாமைகளையும், அதனை மறைத்து இஸ்லாத்தை குறைசொல்லி பெறப்படும் நீண்டகால பலன்களையும் தோலுரித்து காட்டுவதுதான் இத்தொடரின் நோக்கம்.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
Feedback Closedஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |