Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் - அடிப்படையும் அடிப்படைவாதமும்
- நல்லடியார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

அ) அடிப்படையும் அடிப்படைவாதமும்:

"அடிப்படை" இல்லாத எந்த கொள்கையும், திட்டமும், மதமும், இசமும் நாளடைவில் வழக்கொழிந்து போய்விடும். மதம் அல்லாத மற்றவை குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது தனி நபரின் செல்வாக்கினாலோ பின்பற்றப்படலாம். ஆனால் மதம் என்பது தனிமனிதன் முதல் அவன் சார்ந்த சமூகத்திற்கும் பொருந்த வேண்டும். உலகில் தோன்றிய கொள்கைகளின் அடிப்படையைப் பார்த்தோமேயானால் அவை ஒரு குறிப்பிட்ட மனிதனின் சிந்தனையாகவோ அல்லது குழுவினரின் கொள்கையாகவோ இருக்கும்.

அடிப்படைவாதம் (Fundamentalism - The interpretation of every word in the Bible as literal truth அல்லது Strict Adherence to the religious doctrine). அதாவது மதக்கொள்கைகளை சொல்லப்பட்ட அடிப்படையிலிருந்து விலகாமல் கடைபிடித்தல். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை "அடிப்படைவாதம்" என்ற சொற்பிரயோகம். கிறிஸ்தவத்தை தீவிரமாக பின்பற்றுபவர்களைக் குறிக்கவே பயன் பட்டது. இன்று அடிப்படைவாதம் என்றால் இஸ்லாத்தோடும் முஸ்லிம்களோடும் தொடர்பு படுத்தப்படுகிறது. காரணம் இஸ்லாம் தவிர ஏனைய மதக் கொள்கைகள் அடிப்படையை விட்டு விலகி விட்டன என்ற ஒற்றைக் காரணமே.

ஆ) தேடல்களும், கலாசாரங்களுக்கிடையேயான மோதல்களும்:

கலாச்சாரங்களுக்கிடையான நம்பிக்கை மோதல்கள்தான் மோதல்களிலேயே மோசமான மோதல். உலகில் மனித இனம் தோன்றியது முதல் மனிதன் பல்வேறு நம்பிக்கைகளை இரண்டு வகையான தேடல்களின் அடிப்படையில் மனிதன் கடந்து வந்துள்ளான். அத்தகைய தேடல்களில் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையேயான போராட்டமே இன்றைய பிரச்னைகளுக்கு காரணமாகும்.

முதலாவதாக வயிற்றுப்பசி மற்றும் உடற்பசி போன்ற புறத்தேடல்கள். மற்றவை அறிவு, ஆன்மீகம் போன்ற அகத்தேடல்கள். புறத்தேடல்களான வயிற்றுப்பசி மற்றும் உடற்பசி போன்றவற்றில் மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஏறத்தாழ பொதுவான அம்சங்களே உள்ளன. அகத்தேடல் மூலமே மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபட்டு சிறப்புறுகிறான்.

ஒவ்வொரு உயிருக்கும் வயிற்றுப்பசியும் உடல்பசியும் வாழ்க்கைக்கான அவசியங்கள். இவையின்றி எந்த உயிரினமும் இல்லை. தான் உணவாகி விடக்கூடாது. அதே சமயம் தனக்கு உணவு கிடைக்க வேண்டும். இந்தத் தற்காப்பு உணர்வு அனைத்து உயிர்களுக்குமுள்ள பொதுவான அம்சம்.

அகத்தேடல்களின் அவசியம் மனிதன் தன் நிலையை ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாற்றிக் கொள்ள அவசியமாக உள்ளது. புறத்தேடல்கள் ஒரு நிலையில் முடிவுக்கு வந்துவிடும். அகத்தேடல்களுக்கு முடிவு என்பதே இல்லை. இந்த தொடர்ச்சியான தேடல்தான் மனிதனின் வாழ்க்கையை நடத்திச் செல்கிறது.

இ) ஆன்மீகத் தேடல்களும் மதங்களும்:

புறத்தேடல்களால் திருப்தியடையாத மனித மனம் அகத்தேடல்களை நோக்கிச் செல்கிறது. அத்தகைய தேடல்களுக்கு ஒரு அமைப்பு முறை அவசியமாகிறது. அவ்வாறு தேடிய அகத்தேடல்களின் தொடர்ச்சிதான் மதங்களின் தோற்றமும் பிறப்பும். மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த வந்ததாக சொல்லப்படுகின்றன. பல்வேறு காலங்களில் அறிமுகமான மதக்கொள்கைகள் அந்தந்த காலகட்ட மக்களுக்குத் தேவையான வாழ்க்கைத் தத்துவங்களை போதித்தன.அவற்றைப் புரிந்து கொள்ளுதலில் ஏற்பட்ட வித்தியாசம் ஒரு மத நம்பிக்கையை மற்ற மத நம்பிக்கையிலிருந்து வேறுபடுத்தியது.

ஒரு நம்பிக்கையை விட்டு அடுத்த நம்பிக்கைக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டதெனில், மனிதனின் அகத் தேவைகளை அந்த கொள்கைகள் பூர்த்தி செய்யத் தவறியது தான். அவ்வாறு தவறியது மதங்களின் தவறல்ல. ஏனெனில் அந்தந்த காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்களே அன்றைய மதக் கொள்கையில் போதிக்கப்பட்டிருந்தன. காலமும் சூழலும் மாறுபடும் போது அந்தந்த கொள்கைகளின் மாற்றமும் அவசியமாகிப் போனது.


ஈ) அராபிய மதங்களின் தோற்றம்:

எகிப்து, பாலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட இஸ்ரேல் அல்லது இஸ்ரவேலர் என்ற யூத இன மக்களின் கொள்கை "யூதம்" என்றும் அவர்களின் இறைத்தூதுவர் மோசஸ் என்பவரால் போதிக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்புக்களைக் கொண்டவை "தோராஹ்" அல்லது "தவ்ராத்" என்ற வேதமாகும். வரலாற்றில் அறியப்படும் இவர்களின் காலம் கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் ஆயிரம் வருடங்கள் (கி,மு.1000). இவ்வேதம் மோசஸின் வாழ்க்கை மற்றும் அவரின் சமூகத்தினருக்கான பத்து கட்டளைகளைக் கொண்டுள்ளது.

அவர்களுக்குப் பின் வந்த ரோமானியப் பிரதேசங்களை உள்ளடக்கிய மக்கள் "கிறிஸ்தவர்கள்" என்றழைக்கப்பட்டார்கள். இறைத்தூதர் இயேசு என்கிற ஈசா கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர் என்று நம்பப் படுகிறார். கிறிஸ்தவர்களின் வேதமாகிய பைபிள் இறைத்தூதர் இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளை உள்ளடக்கியுள்ளது. பிற்காலத்தில் இயேசுவின் சீடர்களால் பைபிள் மாற்றம் செய்யப்பட்டு, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பிரிவாக்கப்பட்டன.

இயேசு கிறிஸ்துவுக்குப்பின் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு இறைத்தூதர் முகம்மது என்ற அராபியரால், இஸ்லாம் முழுமையாக்கப்பட்டது. முகம்மது நபிகள் இறைவனிடமிருந்து பெற்ற கட்டளைகளின் தொகுப்பு "குர்ஆன்". இந்த குர்ஆன் முந்தைய யூத, கிறிஸ்தவ வேதங்களின் தொடர்ச்சி என்றும் இதுவே இறைவனால் அனுப்பப்படும் கடைசி வேதம் என்றும் சொல்லப்படுகிறது. இதனை பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் எனப்படுவர்.

யூத, கிறிஸ்தவ வேதங்கள் ஒரு குறிப்பிட்ட பிரதேச, இன மக்களுக்காக அனுப்பப்பட்ட வேதங்கள் என்பதை அவற்றின் உள்ளடக்கத்தின் மூலம் அறியலாம். ஆனால் குர்ஆன் உலக மக்கள் அனைவருக்குமான வேதம் என்றும், முஹம்மது நபி கடைசி இறைத்தூதுவர் என்றும் சொல்லப்படுகிறது.

இவையே மேற்கண்ட மூன்று மதங்களின் அடிப்படையாகும். இவற்றை உள்ளது உள்ளபடி பின்பற்றுபவர்கள் அந்தந்த மத அடிப்படைவாதிகள் எனப்பட்டனர். மேற்கண்ட மூன்று பெரும் மதங்களும் அராபியப் பிரதேசங்களில் தோன்றியவை என்பதும் பைபிளின் புதிய ஏற்பாடு தவிர்த்து இதர வேதங்கள் ஓரிறைக் கொள்கைய ஒப்புக் கொள்வதும் பொதுவான ஒற்றுமையாகும்.
 

 உ) இந்து மதமும் இதர இந்திய மதங்களும்:

இந்தியப் பிரதேசத்தில் பெரும்பாலோரால் பின்பற்றப்படும் இந்து மதம். இதர மதக் கொள்கைகளிலிருந்து வேறுபடுகிறது. இந்து மதத்திற்கும் வேதங்கள் இருந்த போதிலும் இதனை தோற்றுவித்தவர் யார்? அதற்கான அவசியம் என்ன என்ற காரணங்களை அறிய முடியவில்லை. பொதுவாக இந்து மதம் என்பதே பல இன, ஜாதிய குழுக்களாகவே அறியப்பட்டது.

இந்து வேதங்களும் கடவுளால் அனுப்பப்பட்டவை என்று சொல்லப்பட்ட போதிலும் எந்த வேதம் எந்த கடவுளுக்குரியது என்று அறிந்தவர் இலர். பல கடவுளை நம்பும் இந்து மதம் எந்த கடவுள் உண்மையான கடவுள் என்றோ அந்த வேதங்கள் குறிப்பிட உண்மையான கடவுளால் அருளப்பட்டவை என்றோ எவ்வித ஆதாரங்களும் இல்லை. வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைச் சித்திரங்களும், வடநாட்டு மன்னர்களும் இந்து கடவுளாக வணங்கப் படுகிறது. ஆரியர்களின் மத்திய ஆசிய, வட இந்திய கடவுள் கொள்கைக்கும் திராவிடர்களின் தென்னிந்திய பூர்வீகக் குடிகளின் கடவுள் வழிபாட்டிலும் மிகுந்த வேறுபாடுகளும் முரண்பாடுகளும் இருக்கிறது.

இவ்வாறு இந்து மதம் - பல இன, ஜாதிய குழுக்களின் ஒருங்கமைப்பு என்றே அறியப்படுகிறது. சிந்து என்ற சொல்லிலிருந்தே "இந்து" என்ற வார்த்தையும் அதனைச் சார்ந்த மக்கள் இந்தியர் என்றும் அறியப்படுகின்றனர். உண்மையில் தற்போதைய இந்து மதத்தின் நிறுவனர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் போலன் கணவாய் வழியாக சிந்து பிரதேசத்தில் குடியேறிய ஆரியர்களே. இவர்களின் வேதங்கள் மற்றும் கடவுள்களே, தற்போதைய இந்துக்களின் கடவுளாக முன்னிறுத்தப் படுகிறார்கள். இதனாலேயே இந்தியாவின் ஜாதிய பிரச்னைகளும் இந்து மத உள்வேறுபாடுகளும் தொடர்கின்றன என்பது தனிக்கதை.


ஆக யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் தவிர்த்து எந்தவித அடிப்படையும் இல்லாது நம்பப்படும் மதம் ஒன்று உண்டென்றால் அது இந்து மதமே. கிறிஸ்தவத்தை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக சில நூற்றாண்டுகள் கழித்து ஏற்கனவே உலகில் தோன்றிய முதல் மார்க்கமான இஸ்லாமும் அறிமுகமாயிற்று. மேற்சொன்ன மற்ற மத நம்பிக்கையிலிருந்து இஸ்லாம் முற்றிலும் வேறுபடுகிறது.

இஸ்லாம் ஒரு குழுவினருக்கோ, பகுதியினருக்கோ, இனத்தினருக்கோ சொந்தமல்ல. அகில உலகுக்கும், இனி வரக்கூடிய முழு மனித சமுதாயத்திற்கும் உரியது என்ற சுய அறிமுகத்தோடு சொல்லப்படுவதுதான் மற்ற மதத்தினருக்கு இஸ்லாத்தின் மீதான வெறுப்பையும் சந்தேகத்தையும் உண்டாக்கியது.

மேற்சொன்ன மூன்று மதங்களுக்கும் உள்ள ஒற்றுமை அதன் காலச்சூழலும் வேத அடிப்படையுமே. யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம் மூன்றுமே ஒரே கடவுளால் கொண்டுவரப்பட்டது. இம்மூன்று மதங்களும் அராபிய, ஆப்பிரிக்க பிரதேசங்களில் தோன்றின. கிறிஸ்தவத்தின் ஆதிக்கத்தால் அதற்கு முந்தைய யூதம் நாளடைவில் வழக்கொழிந்து போனது. இஸ்ரேல் மட்டுமே யூதர்களை அதிகம் கொண்ட ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக இருக்கிறது.

ஊ) ஆரியர்களின் ஆதிக்கச் சூழ்ச்சியும் திராவிட நம்பிக்கைகளின் வீழ்ச்சியும்:

இம்மூன்று மதங்கள் அல்லாமல் இந்து, பெளத்த, சமண நம்பிக்கைகள் இந்தியப் பிரதேசங்களில் தோன்றின. சமணமும் பெளத்தமும் பிற்கால இந்து மன்னர்களின் ஆதிக்க வெறியால் ஒழிக்கப்பட்டன. அதனால்தான் இந்தியாவில் தோன்றிய புத்தம் சீனாவுக்கும், இலங்கை, இந்தோனேசியா என தளத்தை மாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இஸ்லாம் தவிர்த்த மற்ற மதங்களின் வீழ்ச்சிக்கு அதனதன் அடிப்படை நம்பிக்கையிலிருந்து அவை விலகியதே மிக முக்கிய காரணம்.

அரபுலகில் தோன்றிய யூத மதம் அதனைக் கொண்டு வந்த தூதுவர்களை சந்தேகக்கண் கொண்டு கொன்றொழித்ததாலும், கிறிஸ்தவத்தின் அடிப்படை வேத நம்பிக்கைகள், இயேசுவுக்குப்பின் தனி நபர்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டதாலும் வீழ்ந்தன.

இந்துமதம் இந்தியாவில் பெரும்பாலோரால் பின்பற்றப்படும் நம்பிக்கை என்ற போதிலும். இதன் அடிப்படை என்ன மற்றும் அதன் முரண்பாடுகளுக்கு சரியான விளக்கம் இல்லை. இந்து மதம் மத்திய ஆசியாவிலிருந்து வந்து குடியேறிய ஆரியர்களின் மதமா? இயற்கையை உருவகப்படுத்தி வணங்கி வந்த இந்திய பூர்வீகக்குடிமக்களான திராவிடர்களின் மதமா? என்ற வினாவிற்கு விடை கிடைக்காமலேயே பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்து மதத்தில் தூதர்களும், வேதங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டு தூதர்களையே கடவுளின் அவதாரமாகப் பார்த்து கடவுளை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு இந்த வேதங்கள் திணிக்கப்பட்டன. மனித அவதாரங்களின் மறைவுக்குப்பின் வழக்கொழிந்து போயின அல்லது முரண்பாடுகளின் மொத்த உருவமாக இந்து மதம் பின்பற்றப்படுகிறது. இதற்கு இயற்கையான அடிப்படை ஏதுமில்லை. அந்தந்த காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு பின்பற்றப்படும் ஒரு குழுவாகவே (Cult) இருக்கிறது.

மனிதர்களில் பெரும்பான்மையினரைத் தாழ்த்தியும், சிறுபான்மையினரை உயர்த்தியும் போதிக்கப்படும் ஆரிய நம்பிக்கைகளை முன்னிறுத்தியோ அல்லது அறியாமைக்காலத்தில் இயற்கையை வழிபட்ட திராவிட நம்பிக்கைகளை முன்னிறுத்தியோ இந்துமதத்தை அடையாளப்படுத்த முடியாது. இவ்வாறு அடிப்படையற்ற ஒரு கொள்கையை கைவிட்டு, ஜாதிமுறையை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்து மதமே ஏற்படுத்தியதுதான் இந்து மதத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. இவ்வாறு முரண்பாடு கொண்ட கொள்கையாளர்களை ஒருங்கிணைக்கவும், ஆரியக் கொள்கைகளை நிலை நாட்டவும், ஜாதிய காவிச் சிந்தனையாளர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படையை சந்தேகப் படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவசியமாயிற்று.

எ) இஸ்லாத்தின் மீதான அச்சமும், அதீத கற்பனைகளும்:

மனிதனின் ஆதிகால வரலாற்றிலிருந்து இன்று இருக்கின்ற நேசகுமார்கள் வரை எல்லோரிடத்திலும் இருக்கின்ற பிரச்னை இந்த இஸ்லாத்தின் மீதான அச்சமே. நாளைய வாழ்க்கை எப்படியிருக்கும், இதுநாள்வரை நான் வாழ்ந்து வந்த, ஆராதித்து வந்த கொள்கைகள் தவறா? என்னிடம் உள்ளதை நான் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்ற உலகியல் பரிமாற்றங்களிலும் வாழ்க்கையிலும் உள்ள பிரச்சனைகளின் மோதல்களில் தங்களை இழந்துவிடுவதன் காரணமாகத்தான் சில வேளைகளில் அமானுடமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலை எல்லோருக்கும் அவ்வப்போது ஏற்படுவதுதான். ஆனால் ஒரு சிலர் இதற்கு எதார்த்தமான அணுகுமுறைகளின் மூலமும் சரியான வழிகாட்டுதல்களின் மூலமும் இந்த பய உணர்ச்சியிலிருந்து விடுபட்டு தனது அன்றாட வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். ஒரு சிலர் இதற்கு வழி தேடுகிறேன் என்று தனது பிரச்னைகளை இன்னும் அதிகமாக்கி மனம் பிறழ்ந்த அந்நிலையிலேயே முழுவாழ்க்கையையும் கழித்து விடுவதுண்டு.

இன்னும் ஒரு சிலர் இந்தப் பிரச்னை எனக்கு மட்டும் இல்லை இன்னும் எத்தனையோ கோடான கோடி பேர்களுக்கு இருக்கிறது அவர்களுக்கெல்லாம் சேர்ந்து நான் வழி காணப் போகிறேன் என்று தனக்குக் கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை பயன்படுத்தி தனது குறைகளை, நிறைகளாக உலகிற்கு காட்டி தன்னை ஒரு ஞானியாக, அறிவாளியாக உலகிற்கு காட்டி ஆதாயம் தேட முற்படுகின்றனர். இதற்கு intelligence Escapism மேதாவித்தனமான தப்பித்தல் என்பர்.

மேலே சொல்லப்பட்ட இந்த மூன்று நிலைகளுக்கும் உட்பட்டவர்களில் உள்ளவர்கள்தான் அமானுட கேள்வி கேட்கும் அரைகுறை ஞானியான டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட். இஸ்லாத்திற்கு எதிராக எந்த அரைகுறைகளும் எதை வேண்டுமானாலும் எழுதலாம், அதையெல்லாம் படிக்கவும், புகழவும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது என்ற நிலை காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது.

இவ்வாறு இஸ்லாத்தின் மீதான அச்சமும் தங்கள் கொள்கையின் மீதான அவநம்பிக்கையும்தான் இவர்களின் துவேசங்களுக்கும் தவறான விமர்சனங்களுக்கும் அடிப்படை. "சிறு இந்திரியத் துளியிலிருந்து படைத்த மனிதர்கள், படைத்தவனிடமே தர்க்கம் செய்கின்றார்கள்" என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போல் இம்மனிதர்கள் இங்கே புத்திசாலித்தனமானச் செய்கிறோம் என்ற பெயரில் மனம் பிறழ்ந்தவர்களாக செயல்படுவதை அடுத்த தொடரில் பார்க்கலாம்.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
Feedback Closedஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |