Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் - கீழைத்தேய ஆய்வு
- நல்லடியார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

கீழைத்தேய ஆய்வு (Science of Orientalism) என்பது பொதுவாகக் கீழைத்தேய நாடுகள், இனங்களின் மொழி, மதம், பண்பாடு, நாகரிகம், வரலாறு பற்றிய மேற்கத்திய ஆய்வாளர்களின் ஆராய்ச்சியைக் குறிக்கும். (பார்க்க: Encyclopedia Britannica). கீழைத்தேய ஆய்வு என்பது ஆரம்பத்தில் ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் ஆதரவிலும் அதனைத் தொடர்ந்து கீழைத்தேய உலகில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை மேற்கொண்ட கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்களின் துணையாலும் வளர்ச்சியடைந்தது.

கீழைத்தேயங்களைக் கைப்பற்றி ஐரோப்பிய அரசியல் ஆதிக்கத்தை அங்கு நிலைபெறச் செய்யவும், கீழைத்தேய மக்களுக்கும் அவர்களது மதம், பண்பாடு, வாழ்க்கை முறைக்குமிடையேயுள்ள பிரிக்க முடியாத உறவைச் சீர்குலைத்து, அவர்களைக் கலாச்சாரப் பண்பாட்டு ரீதியாக அடிமைப்படுத்தவும் அம்மக்களின் மொழி, பண்பாடு, நாகரிகம், வாழ்க்கைமுறை பற்றிய அறிவு மிக அவசியம் என்பதை உணர்ந்த காலனித்துவவாதிகள் இத்துறைகளில் ஆழமான அறிவும் புலமையும் பெற்ற ஒரு குழுவை உருவாக்க முனைந்தனர்.  இதுவே மேற்குலகில் கீழைத்தேய ஆய்வின் ஆரம்பமாகும்.

குறிப்பாக, கிறிஸ்தவ மதத்திற்கும் (ஐரோப்பாவிற்கும்) முஸ்லிம் உலகிற்குமிடையில் நிகழ்ந்த சிலுவைப்போர்களின் பின்னர்தான் முஸ்லிம்களைக் கலாச்சார ரீதியாக அடிமைப்படுத்தும் ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்குலகில் காலனித்துவவாதத்தின் எழுச்சிக்குப் பின்னர் இவ்வுணர்வு மிக உக்கிரமாகச் செயல்பட்டது. முஸ்லிம்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றுவதில் தோல்விகண்ட மேற்கத்தியவாதிகள், முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்குமிடையேயுள்ள தொடர்பைத் துண்டிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான குர்ஆன், ஹதீஸ் பற்றிய சந்தேகங்களை முஸ்லிம்களின் உள்ளத்தில் தோற்றுவித்து, இஸ்லாத்தைச் செயலிழந்ததாக ஆக்கி, அவர்களைக் கலாச்சாரப் பண்பாட்டு ரீதியாக முற்றிலும் சீர்குலைத்துவிடுவதே மேற்கத்தியவாதிகளின் திட்டமாக அமைந்தது.

பிரான்ஸிலிருந்து பிரசுரிக்கப்பட்ட Le Monde Mussalman என்னும் இதழில் Mr. Chatalier என்னும் கிறிஸ்தவ மிஷனரி ஒருவர் எழுதிய கட்டுரையில் காணப்படும் இக்கருத்து இதனை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.

"No doubt our missionaries have failed so far indirectly undermining the faith of the Muslims, This end can be achived only by the propagation of ideas through the mediam of European languages.

"முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பலவீனமடையச் செய்வதில் எமது மிஷனரிகள் (பிரச்சாரகர்கள்) தோல்வி கண்டு விட்டனர் என்பதில் சந்தேகமில்லை. மேற்கத்திய மொழிகள் மூலம் நம் கருத்துக்களைப் பரப்புவது கொண்டே இதனைச் சாதிக்க முடியும்".

அவர் மேலும் கூறுகிறார்:

"With the weakening of their belief in Islam, decay and disintergration are bound to set in and when this decay and this disintergration spreads throught the world of Islam, the religious spirit of the Muslims will be entirely uprooted and will never be able to re-emerge in a new form".

"இஸ்லாத்தின் மீது அவர்களுக்குள்ள நம்பிக்கை பலவீனமடைந்தவுடன், அவர்களை வீழ்ச்சியும் நலிவும் பலவீனமும் ஆட்கொண்டுவிடும். நலிவும் பலவீனமும் முஸ்லிம் உலகம் முழுவதும் வியாபித்துப் பரவியதும் முஸ்லிம்களின் மத உணர்வு முற்றிலும் வேரோடு பிடுங்கப்பட்டுவிடும். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் புது உருப்பெற்று என்றும் தலை தூக்க முடியாது. "[Ref: Khurshid Ahmad, "Islam & the west". (1970, P 13-15)]

எனவே முஸ்லிம்களின் உள்ளத்தில் இஸ்லாத்தைப் பற்றிய சந்தேகங்களைத் தூண்டிலாகப் போட்டு, அதில் மீன்பிடிக்க அடிகோலிட்ட மிஷனரிகளின் உத்தியையே இந்தியாவின் காவிச் சிந்தனாவாதிகள் தொடருகிறார்கள். அவர்களுக்கு (மிஷனரிகளுக்கு) ஆள்பிடிக்க வேண்டும் என்பது நோக்கமென்றால். இவர்களுக்கோ மாந்தர்கள் விடுதலை அடைந்துவிடக்கூடாது. அதாவது, சாதிய முறையினால் மனிதனை மனிதனாகப் பார்க்காத கேவல நிலையை விட்டு வெளியேறத்துடிக்கும் மனிதர்களைத் தடுத்தாக வேண்டும் என்பதே தலையாய நோக்கமாகும்.

இஸ்லாத்தின் மீது சேற்றை வாரி இறைப்பவர்கள், இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறிக்கு மாற்று வழியாக அதைவிடச்சிறந்த ஒன்றைச் சொல்லமுடியாது என்று நன்கு உணர்ந்திருப்பதால்தான் போலிப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

முன்பு குறிப்பிட்டதுபோல மேற்கத்தியர்கள் 'கீழைத்தேய ஆய்வு' என்ற பெயரில் குர்ஆனின் மொழிபெயர்ப்பையும் ஹதீஸ்(நபிவழிச் செய்தி)களையும் திரித்தும் இட்டுக்கட்டியும் அல்லது இட்டுக்கட்டி கூறப்பட்ட ஹதீஸ்களை மக்கள் மத்தியில் தந்திரமாகப் பரப்புவதில் ஈடுபடலாயினர்.

இத்துறையில் குர்ஆனைவிட ஹதீஸ்களும் சீறாவும் (நபி வரலாறு) அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தன. காரணம், நபிகளாரின் வாழ்க்கையை, அவருடைய தன்னினைவைக் குறை சொல்வதில் வெற்றி பெற்றுவிட்டால் இறைவனிடமிருந்து அவருக்கு வந்ததாகக் கூறப்படும் அனைத்தையும் - குறிப்பாக வஹீ எனும் 'அமானுட' அடிப்படையை ஆட்டங்காணச் செய்து விடலாம் என்பதே கீழைத்தேயவாதிகளின் நோக்கமாக இருந்தது. எனவே கீழைத்தேயவாதிகள் - குறிப்பாக யூதர்களும் கிறிஸ்துவர்களும் முகம்மது நபி அவர்களின் மேல் தமது கருத்துப்போரை ஆரம்பித்தனர்.

இத்துறையில் முதலாவது முக்கிய முயற்சிகளை மேற்கொண்டவர் இக்னாஸ் கோல்ட்லியர் (Goldzier) என்பவர் ஆவார். இவர் முதலாவதாக ஜெர்மன் மொழியில் 1890இல் தமது விமர்சனங்களை இரண்டு வால்யூம்களாகப் பதிய வைத்தார். கோல்ட்ஸியரைத் தொடர்ந்து அல்பிரட் கிலோம் (A.Guillaume) தனது Traditions of Islam என்னும் நூலிலும் Margoliut தனது Mohammadanism என்னும் நூலிலும் கோல்ட்ஸியரின் கருத்துக்களையே வலியுறுத்தியுள்ளனர். ஏனைய கீழைத்தேயவாதிகளான Granuborm, Dozy, Hurgrinje, Lammens, Juynnoil ஆகியோரும் அவ்வழியைப் பின்பற்றலானார்கள். அவர்களுள் Juynboll, மதங்கள் பற்றிய ஆங்கிலக் கலைக்களஞ்சியத்தில் (Encyclopedia of Religion and Ethics) சுன்னா பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.:

"The word Sunnah is often wrongly taken to mean "traditions" (viz. regarding The deeds and sayings of the Prophet) but it really means the method of behaviour generally followed" (Edinburgh. Vol. VII P. 1959).

அவர் சொன்னதாவது:
"சுன்னா என்பது பெரும்பாலும் 'ஒழுகலாற்று விதிகளை'  (அதாவது நபிகளாரின் வாக்குகள் செயல்களை)க் குறிப்பதாகத் தவறாகக் கருத்துக் கொள்ளப்படுகின்றது. ஆனால், உண்மையில் அது மக்களால் பொதுவாகப் பின்பற்றப்பட்ட மரபு ரீதியான நடத்தையையே குறிக்கும்".

Juynboill தனது இக்கருத்துக்கு Goldzier மற்றும் Hurgrinje ஆகிய இருவரின் கருத்துக்களையே ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

கிப்தி (Coptic) கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்த  Majid Khadgri என்பார்,  இமாம் ஷாபிஈ அவர்களின் ரிஸாலா பற்றித் தாம் எழுதிய Islamic Juris Prudence - Shafi"s Risala (Baltimore 1961) என்ற நூலின் முன்னுரையில், இஸ்லாத்திற்கு முந்திய காலப்பிரிவில் அரபு நாட்டில் வழக்கிலிருந்த பொதுச் சட்டமே (Common Law) சுன்னா என்று அழைக்கப்பட்டது என்றார்.

இவர்கள் சொல்ல வரும் கருத்தே இவர்களின் நரித்தனத்தை அடையாளம் காட்டுவதோடு இவர்களின் மனநிலையையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது.

 

முஹம்மது நபியின் சமுதாய மக்கள், பெண்குழந்தைகளை உயிரோடு புதைப்பவர்களாகவும் இறை ஆலயத்தை நிர்வாணமாகச் சுற்றுபவர்களாகவும் திகழ்ந்தனர்.  அவர்களின் இதுபோன்ற எத்தனையோ அறியாமை காலத்துப் பழக்கங்களை முஹம்மது நபி துடைத்தெறிந்தார். (அறியாமைக் காலத்துப் பழக்கங்கள் பற்றி சற்று விரிவாக பிறகு பார்க்க இருக்கிறோம்).

 

கீழைத்தேயவாதிகளின் ஆய்வாக இருக்கட்டும் நேசகுமாரின் கட்டுரையாக இருக்கட்டும் முஹம்மது நபியின் வழிமுறையை எதிர்த்து அவரின் முந்தைய சமுதாயம் வாழ்ந்த அறியாமை காலத்துப் பழக்கங்களைச் சிறந்ததாகக் கூறுவதன் மூலம் இவர்கள் எத்தைகைய வழிமுறைகளுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள் என்பது வாசகர்களுக்கு எளிதாக விளங்கும்.

மொழிபெயர்ப்பாளர் நேசகுமார் எடுத்து வைக்கும் வாதங்கள் எல்லாம் கீழைத்தேய ஆய்வாளர்களின் திரித்தல்களே தவிர வேறெதுவும் இல்லை. முன்பு தனது 'சொந்த ஆராய்ச்சி என்று சொல்லி எழுதிக்கொண்டிருந்தவர் கடைசியாக "கொயின்ராட் எல்ஸ்ட்" மொழிப்பெயர்ப்பு என்று சற்று இறங்கி வந்துள்ளார். தனக்கு இஸ்லாத்தைப்பற்றி அவ்வளவாக தெரியாது என்று அவர் ஒத்துக்கொண்டதையும் இங்கு நினைவு கூர்கிறேன்.

எது எப்படியிருந்தாலும் கீழைத்தேயவாதிகளின் திரித்தல்கள் தமிழில் வருவது தமிழ் இணைய வாசகர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால்,  இது புதிய மொந்தையில் வார்க்கப் பட்ட (இக்னாஸ் கோல்ட்லியரின்) பழைய கள்தான் என்பதில் ஐயமில்லை.

 

....தொடரும்

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
Feedback Closedஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |