Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) - திருக்குரான் வெளிப்பட்ட ஆவேச நிலை குறித்த யோகியர்/சித்தர் பார்வை
- நேச குமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

இஸ்லாத்தைப் பற்றிய விவாதங்களின் போது, பெரும்பாலான முஸ்லிம் அல்லாதோரும் முந்தய முஸ்லிம்களும், இஸ்லாத்தின் பாதகமான அனுகுமுறைகள் - குறிப்பாக பெண்கள், முஸ்லிம் அல்லாதோர் குறித்த இஸ்லாத்தின் பார்வைகள் போன்றவற்றை குறித்தே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இஸ்லாம் என்பது முதலாவதாக நம்பிக்கையின் மார்க்கம் - சில உண்மை விளம்பல்களின் மீது கட்டமைக்கப்பட்டது அது. இதன் பின்னரே அது ஒழுக்கம் குறித்த  கட்டுப்பாடுகள், அவற்றின் அடிப்படையிலான செயல்பாடுகள் அடங்கிய மதம். ஆகவே, இஸ்லாம் வாழ்வதும் வீழ்வதும் இரண்டு நம்பிக்கைகள் - உண்மை விளம்பள்களைச் சார்ந்திருக்கின்றது. அவையாவன:

1. பிரபஞ்சத்தைப் படைத்த ஏக இறைவன் அல்லாஹ்வே. அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை.

2. மனித குலத்திற்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட கடைசி நபி(மனிதர்களுக்கு கடவுளின் கட்டளைகளை கொணர்ந்துரைக்கும் இறைத்தூதர்) முகம்மது அவர்கள். இந்த முகம்மது மூலமாக அல்லாஹ் மனித குலத்திற்கான தமது இறுதி போதனைகளை அனுப்பிவைத்தார். முகம்மது அவர்களின் 40ஆவது வயதிலிருந்து( கி.பி 610) சாகும் வரை(கி.பி 632),  திருக்குரான் என்று அழைக்கப்படும் இந்த மனித குலத்திற்கான வழிகாட்டுதல்கள்-கட்டளைகள், தொடர்ந்து "வெளிப்படுத்தப்பட்டன".

இதில், முதல் நம்பிக்கை கடவுளின் மாண்புகள் சம்பந்தப் பட்டது. இந்நம்பிக்கையில் இஸ்லாத்திற்கும் ஏனைய ஓரிறைக் கோட்பாடு கொண்ட மதங்களுக்கும் ஒப்புமை ஏற்படலாம். பன்முகத்தன்மை அதிகம் விரவிக் கிடக்கும் இந்து மதத்தோடு கூட சில அர்த்தப்படுத்தல்களுக்குப்பின் ஒப்புமை ஏற்படலாம்("ஒரே உண்மையை சான்றோர் பல பெயர்களில் அழைக்கின்றனர்"). ஆனால், இரண்டாவது நம்பிக்கைதான் இஸ்லாத்தை ஏனைய மதங்களிலிருந்து பிரித்துக் காண்பிக்கின்றது - இந்நம்பிக்கை முகம்மது அவர்களின் நபித்துவம் பற்றியது.

முதன் முதலாக காஷ்மீர் ஹெரால்டில் 2002-2003ல் வெளிவந்த இந்த முதல் கட்டுரையானது, முஸ்லிம் அல்லாதோரின் பார்வையில், இந்த இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை குறித்து ஆய்ந்தது. இக்கட்டுரையானது முகம்மது அவர்களின் நபித்துவம் குறித்த இந்துப் பார்வையை பிரதிபலிக்கும்.

காலனிக்காலத்திற்கு முன்னர் இந்துக்கள் இஸ்லாம் குறித்த புரிதல்களை பெரும்பாலும் கொண்டிருக்கவில்லை, அதிலும் குறிப்பாக இஸ்லாத்தின் ஆதார அடிப்படையான முகம்மது அவர்களின் நபித்துவம் குறித்து எந்தவித அபிப்ராயமும் இந்துக்களிடையே நிலவியதாகத் தெரியவில்லை. 1875ல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் தாம் முதன் முதலாக இஸ்லாத்தைப் பற்றியும் திருக்குரானைப் பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பெரும்பாலும் திருக்குரானின் முரண்பாடுகள், பகுத்தறிவிற்கொவ்வாத நம்பிக்கைகள், கொடூரமான கட்டளைகள் குறித்தே தமது விமர்சனங்களை வெளிப்படுத்தினார். பின்னர், ஆரிய சமாஜத்தின் விமர்சனங்கள் முகம்மது அவர்களின் கொடுங்கோன்மை, அவரது ஒழுக்கமற்ற தனிப்பட்ட வாழ்வு ஆகியவற்றையே மையமாகக் கொண்டு விளங்கின (உதாரணமாக ராஜ்பால் அவர்களின் " ரங்கீலா ரசூல்" - இது முகம்மது அவர்களின் பாலியல் வாழ்க்கை பற்றியது). ஆனால், இவையெல்லாம் இஸ்லாத்தில் இறைவனின் வசனங்கள் "வெளிப்பட்ட" விதத்தை கவனிக்க வில்லை.

இஸ்லாத்தின் மூல நம்பிக்கையை ஆழ்ந்து கவனித்தோமானால், அடிப்படை நம்பிக்கையானது முகம்மது அவர்களின் இறை ஆவேசம் பற்றியது எனக் காணலாம். முகம்மது அவர்கள் அடிக்கடி இறையுணர்வு மிகுந்ததோர் ஆவேச நிலைக்கு(வஹி) சென்று அல்லாஹ்வின் கட்டளைகளை கேட்டு பிறருக்கு உரைப்பார். சமீப காலங்களில் இஸ்லாத்தை ஆய்வு செய்யும் இந்து ஆய்வாளர்கள், முகம்மது அவர்களின் சமகாலத்தவர்கள் - வஹியை நேரில் கண்டவர்கள் இந்த ஆவேசம் குறித்த ஐயங்களை வெளிப்படுத்தியிருப்பதைக் கண்டு வஹி குறித்த தமது சந்தேகங்களை இவை நிரூபிப்பதாகக் கருதுகின்றனர்: "முகம்மது அவர்களின் விமர்சனத்தை உதாசீனம் செய்துவிட்டு தமது கடவுள் நம்பிக்கைகளில் உறுதியாக நின்றனர் மக்கா நகர்வாசிகள். அல்லாஹ் கூறுகிறார்: 'அல்லாஹ்வைத் தவிர மெய்யான நாயகன் இல்லை என்று உரைத்தும் இவர்கள் அதை ஏற்கவில்லை. அவர்கள் சொன்னார்கள்:'ஒரு பைத்தியக்கார மனிதருக்காக நாங்கள் எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?'(திருக்குரான் வசனங்கள் 37:35-36) 'அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்தது குறித்து ஆச்சர்யமடைந்தனர்; " இவர் ஒரு சூனியக்கார பொய்யர்" என்று அவர்கள் கூறினர்'(திருக்குரான் வசனம் 38:4)  "(S.R.கோயல் : ஹிந்துக் கோவில்கள்(என்ன நிகழ்ந்தது அவற்றிற்கு?) - இரண்டாம் பாகம், இரண்டாவது பதிப்பு., வாய்ஸ் ஆ·ப் இந்தியா, டெல்லி 1993, பக் 334)

அனேகமாக சுவாமி விவேகானந்தர் தாம் முதன் முதலாக இந்த நபித்துவத்திற்கும், முகம்மது அவர்களின் குறைபாடுடைய தலைமைத்துவத்திற்கும் உண்டான தொடர்பைக் குறித்து கருத்து தெரிவித்தவர்.பிறழ்ந்த தன்மையிலிருந்து பிறந்த நபித்துவத்தின் குறைபாட்டுத்தன்மை காரணமாகவே, அச்சுறுத்தல்கள், கொடும் செயல்கள் மூலம் முகம்மது அவர்கள் தமது இறைக்கடன்களையும் அது சார்ந்த நம்பிக்கைகளையும் பிறர் மீது சுமத்த நேர்ந்தது. பக்கத்து வீட்டில் இருக்கும் சாதாரண வியாபாரி ஒருவர் உங்களிடம் வந்து தமக்கு சில குரல்கள் கேட்பதாகவும், அவை கடவுளின் கட்டளைகள் என்றும் ஆதலால் நீங்கள் எல்லோரும் அவர் சொல்கிறபடி நடக்க வேண்டும் என்று கூறினால், அவருக்கு 'ஏதோ' நிகழ்ந்து விட்டது என்றே நீங்கள் கருதுவீர்கள் அல்லவா? - இந்த வித்தியாசமான நிகழ்வு குறித்து விவேகானந்தர் தமது கருத்தை தெரிவித்து, முகம்மது அவர்கள் தாம் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டு மனிதர்களிடம் கட்டளைகளை சொல்லவேண்டிய விசேஷ நபர் என்று கருத நேர்ந்ததை, அதன் பின்னால் இருந்திருக்கக் கூடிய காரணங்களை குறித்த தமது விளக்கங்களை முன்வைத்தார்.

திருக்குரான் வெளிப்பட்ட விதம் குறித்த விசேஷ கருத்தை இந்து சமுதாயம் முன்வைத்தது - தமது யோகியர், சித்தர் தம் அனுபவங்களின் அடிப்படையில். சரியான வழிகாட்டுதல்கள் இல்லாவிட்டால் எவ்வாறு யோகியர் தவறான பாதையில் செல்லக் கூடும், ஆன்மீகப் பாதையில் என்னென்ன அபாயங்கள் உள்ளன என்பதற்கு உதாரணமாக விவேகானந்தர் முகம்மது அவர்களை உதாரணமாகக் குறிப்பிடுகின்றார்: " இந்த நிலையைப் பற்றி யோகிகள் எச்சரிக்கின்றனர். எவ்வளவு உன்னதமான மனிதர்களாகயிருந்தாலும், இந்த நிலையில் வீழ்ந்தவர்களில் பெரும்பாலோர் மனப்பிறழ்வுக்கு உள்ளாவதும், தப்பித்த ஒரு சிலர் கூட தடுமாறுவதும், ஆன்மீக செறிவு நிறைந்திருந்தும் அதனூடே ஒருசில  மூடநம்பிக்கைகளுக்கு இவர்கள் ஆட்படுவதையும் காணமுடிகிறது. இத்தகையோர் மாய உலகில் மாட்டிக் கொண்டு மனத்தோற்றங்களுக்கும் பிரமைகளுக்கும் ஆட்பட்டனர். இதன் காரணமாகவே, முகம்மது அவர்கள் காப்ரியேல்(ஜிப்ரீல்) தன்னிடம் வந்து தன்னை புராக் எனும் சுவனக்குதிரையில் ஏற்றி சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது என்று நம்பி, பிறரிடம் எடுத்துரைத்தார்”.

" ஆனால், இப்படியான மனத்தோற்றங்களினூடே முகம்மது சில அரிய ஆன்மீக உண்மைகளையும் எடுத்துரைத்தார். நீங்கள் குரானைப் பார்ப்பீர்களானால், மூட நம்பிக்கைகளினூடே மிகச் சிறந்த ஆன்மீக உண்மைகளும் கலந்து உரைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம். இதை எவ்வாறு விளக்குவது? முகம்மது இறையாளர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த இறையுணர்வு திடீரென அவருக்கு கிட்டியது. அவர் ஒரு பயின்ற யோகி/சித்தர் அல்லர், அவருக்கு என்ன நிகழ்கிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை. முகம்மது உலகிற்கு செய்த நன்மைகளை நினைவு கூறுங்கள், அவரது வெறியின் விளைவால் உலகிற்கு ஏற்பட்ட மிகப் பெரும் அழிவுகளையும், அனர்த்தங்களையும் பாருங்கள். அவரது போதனைகளால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கானோரை நினைவு கூறுங்கள், குழந்தைகளை இழந்த தாய்மார்கள், அனாதைகளாக்கப்பட்ட சிறுவர் சிறுமியர், அழிக்கப் பட்ட நாடுகள், உயிரழக்க நேர்ந்த லட்சோப லட்சம் பேர்(...) ஆகவே, முகம்மது மற்றும் அவரைப் போன்ற மதகுருமார்களின் வாழ்வை நோக்கும்போது இந்த அபாயத்தின் தீவிரம் புலனாகும். ஆனால், அதே சமயம் அவர்கள் அனைவரும் இறையுணர்வு தூண்டப்பட்டவர்தாம். ஒரு நபியானவர் எவ்வெப்போது தமது இறையுணர்வுகளை உச்சகட்ட நிலைக்கு கொண்டு சென்று ஆவேச நிலையையெட்டி ஆன்மீக வெளிப்பாடுகளை கொணர்ந்தாரோ, அப்போதெல்லாம் பல ஆன்மீக உண்மைகளையும் அதனூடே சில அடிப்பட¨வாதக் கருத்துக்களையும், மூட நம்பிக்கைகளையும் கொணர்ந்தார். இதனால் இம்மாதிரியான மனிதர்களின் போதனைகள் எவ்வளவுக்கெவ்வளவு நன்மைகளை உலகிற்கு ஈந்தனவோ அதே போன்று உலகிற்கு ஊறுகளையும் விளைவித்தன”. (Vivekananda: Complete Works, பாகம் 1, பக் 184 - அவரது ராஜ யோகம் பற்றிய புத்தகத்தின் ஏழாவது அத்தியாயம் : “தியானமும் சமாதியும்”).

ஆன்மீக பரிசோதனைகளின் விளைவாக எழும் மனப்பிறழ்வுகளே திருக்குரானின் வெளிப்பாடுகள் என்று பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சு கால்வினிஸ்ட் (கிறிஸ்துவ) போதகரும் மத ஆய்வாளருமான ஜிஸ்பெர்டஸ் வோர்டஸ் என்பார் தெரிவித்துள்ளார். இவர், இந்தோனேசியாவில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பிரச்சாராம் செய்வதற்காக  மதப்பிரச்சாரகர்களை பயிற்றுவித்தவர்( இது குறித்து Kare Steenbrink தமது Dutch Colonialism and Indonesian Islam Contacts and Conflicts 1595-1950, Rodopi Amsterdam/Atlanta 1993 எனும் புத்தகத்தில் விவாதித்துள்ளார்). கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் பிரிவு கிறிஸ்துவ மதகுருமார்களின் ஆன்மீக பயிற்சிகளை கண்டனம் செய்த ப்ராடஸ்டண்டுகளும் இதே அபாயங்கள் குறித்தே எச்சரித்தனர். இந்த எச்சரிக்கைகள் முகம்மது அவர்களுக்கும் பொருந்தும்.

பெரும்பாலான யோக நூல்கள் ஹடயோக முறைகளை தவறாக பின்பற்றுவது குறித்து எச்சரிக்கின்றன. சரியான முறையில் பின்பற்றினால், உடனடியாக பெரும் நன்மைகளைத் தரும் இந்த யோக/தாந்த்ரீக/சித்தர் முறைகள், நியதிகளை சரியான முறையில் பின்பற்றாவிட்டால் யோகியருக்கு/சித்தர்களுக்கு விளையக்கூடிய கெடுதிகளையும் பட்டியலிடுகின்றன. சரியான முறையில் பிராணாயாமம் செய்யாததால் ,நரம்பு மண்டலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து யோகிகள், தமது சக யோகியர்களுக்கோ அல்லது மாணாக்கர்களுக்கோ விளைந்த கேடுகளை கூறும் செவிவழிச் செய்திகளும் யோக பாரம்பர்யங்களில் நிறையவே உண்டு. கோபி கிருஷ்ணா என்பவர் எழுதி 1967ல் வெளிவந்த(தற்போதும் நிறைய கடைகளில் இப்புத்தகம் கிடைக்கிறது) Kundalini, the Evolutionary Energy in Man எனும் புத்தகத்தில் சரியான முறையில் செய்யப்படாத யோகமுறைகளின் கடும் பின்விளைவுகள், உடலுக்கு நேரும் துன்பங்கள் பற்றிய விவரனை தரப்பட்டுள்ளது. ஆரிய சமாஜத்தின் தலைவர்களுள் ஒருவரான வந்தே மாதரம் ராமச்சந்திர ராவ் அவர்கள் ஒருமுறை என்னிடம் அவரது நன்பர் ஒருவர் செய்த தவறான பிராணாயாமத்தால் நேர்ந்த பக்க விளைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவரது நன்பருக்கு மூளையும் இதயமும் பாதிக்கப் பட்டு காலமானாராம். இதுபோன்றே தாவோயிஸத்தின் சக்தி(பிராண) வழிப்படுத்துதல் முறையான க்யூகாங்க்(Qigong)கிலும் இது போன்ற எச்சரிக்கைகளும், உதாரண சம்பவங்களையும் காண முடிகின்றது. உலகெங்கும் இது போன்று திடீரென்று ஆன்மீக “வெளிப்பாடுகள்” நேர்வோர்க்கெல்லாம் “ஞானம்” பிறப்பதோடு மட்டுமல்லாமல், தமக்கு வெளிப்பட்ட ‘ஞானம்’ மட்டுமே உண்மை ஆகவே தாமே முக்கியத்துவம் வாய்ந்தவர் என்ற அசைக்க முடியாத (மூட) நம்பிக்கையும் ஏற்படுகிறது. நவீன மதக்குழுக்களிடையே அதைத் தோற்றுவித்த மதகுருமார்களின் சுயமுக்கியத்துவத்தை பாருங்களேன், இது புரியும்.

இந்திய யோக/சித்தர் மரபுகளில் வந்தோர் இது போன்ற ஆபத்தான மனச்சுழல்களிலிருந்து தப்பியது ஏனென்றால், அவர்களின் முன்னோடிகள் இது போன்ற ஆன்மீகப் பயிற்சிகள் குறித்த நெடிய ஆய்வின் மூலம் பாதுகாப்பான, ஆரோக்கியமான யோக முறைகளை பிறப்பித்து, பதஞ்சலியின் யோக சூத்திரம் போன்ற அற்புதமான ஆக்கங்களை வழிகாட்டியாக அமைத்துச் சென்றனர். ராம் ஸ்வரூப் அவர்கள் (Hindu View of Christianity and Islam, Voice of India, Delhi 1993, பக் 45-46) இந்திய யோக முறையானது இது போன்ற நீண்ட நெடிய பாரம்பர்யத்தின் விளைவாக எழுந்த முறைப்படுத்தப்பட்ட நெறிமுறைகளின் விள¨வாக ஏனைய உள்ளார்ந்த ஆன்மீக நெறிகளைக் காட்டிலும் சீர்ந்து விளங்குவதாக தெரிவிக்கின்றார். ஆகவே இந்நோக்கில் , இந்திய யோக முறைகளை ஷமன்களின் மனமயக்கும் மூலிகைகளின் மூலமாக எழுப்பப் படும் மயக்க நிலைகளோடும், முகம்மது அவர்களின் வரவேற்பின்றி அழைக்கப்பட்ட விண்-குரல்களோடும் ஒப்பிடுவது என்பது “எல்லா மதங்களும் ஒன்றே” என்று இப்போது பாஷனாகிவிட்ட கோஷங்களுடன் ஒத்திருந்தாலும், அடிப்படையில் மிகவும் வித்தியாசப்பட்டவை என்பதால் முறையற்ற ஒப்புமைகளாகின்றன.

சமீப காலங்களின் ராம் ஸ்வரூப்பும், சீதா ராம் கோயலும் விவேகானந்த சுட்டிக் காட்டிய திருக்குரான் வெளிப்பாட்டுக் கோட்பாட்டை இன்னமும் செம்மைப் படுத்தியுள்ளனர். ராம் ஸ்வரூப், யோக சமாதியின் பல்வேறு நிலைகளைப் பற்றி விவரித்து அவற்றில் சிலவற்றில் யோகசமாதியில் சில மனமயக்கங்களும் ஏற்படுவதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்(Hindu view of Christianity and Islam, பக் 107). சீதாராம் கோயல் அவர்கள் செங்கிஸ்கானுக்கு ஏற்பட்ட ஆவேச நிலை பற்றி விவரித்து, அந்நிலையிலிருந்து அவர் பிறப்பித்த கட்டளைகள் காரணமாக ஒரு பெரும் குழுவின் நாயகராக அவர் ஆகி, அக்குழு பெரும் (படையெடுப்புகளின் மூலமாக) வெற்றிகளை ஈட்டியதைச் சுட்டிக் காட்டுகிறார் (The Calcutta Quran Petition, 3rd ed., Voice of India Delhi 1999, p.238-249; with reference to Ibn Ishaq: Sira Rasul Allah, tra. Alfred Guillaume: The Life of Mohammed, OUP Karachi, p. 104/150 - 107/154).

இவர்களிருவரும் முடிவுக்கு வருவது என்னவென்றால், இம்மாதிரியான மனமயக்கங்களுக்காட்பட்டு அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மூலம் பரப்பப்பட்ட ஒரு இறைக்கோட்பாட்டை நிராகரித்த பாகன் அரபிகளின் சிந்தனை சரியே. ஆனால், அவர்கள் வரலாற்றால் மன்னிக்க இயலாத தவற்றை செய்தனர், அதாவது போரில் முஸ்லிம்களிடம் தோற்றது. ஆனால், “ இது முதன் முறையல்ல, ஒரு சாந்தமான சமூகம் தீவிரத்தன்மை கொண்ட போக்கிரிகளிடம் வீழ்வது. நமது காலத்திலேயே லெனின், மா சே-துங், ஹிட்லர் போன்றோர் சமுதாயத்தை வெற்றி கொள்ளவில்லையா என்ன?” என்கிறார் சீதாராம் கோயல் (Goel: Hindu Temples Vol 2, 2nd ed., p.272).

நானறிந்த வரையில் மேலே சொன்ன விமர்சனங்களே இஸ்லாம் குறித்து உலகில் நிலவும் விமர்சனங்களுள் கடுமையானவை. கிறிஸ்துவ விமர்சகர்கள் என்னதான் இஸ்லாத்தை திட்டித் தீர்த்தாலும், அதன் ஏக இறைக் கோட்பாட்டை அவர்கள் பாராட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றனர். ஆனால், இந்த இந்து எழுத்தாளர்களுக்கு இப்படியான நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லை. அது போன்று கிறிஸ்துவர்களுக்கு இன்னொரு சங்கடமும் இருக்கின்றது. முகம்மது அவர்களுக்கு இறைவனிடமிருந்து “வெளிப்பட்ட” கட்டளைகள் குறித்து திட்டினால், அவர்களது பழைய ஏற்பாடு சம்பந்தமான நம்பிக்கைகளையும் வேறு யாராவது கேள்விக்குள்ளாக்களாம். எனவே, என்னதான் “மரியாதையின்றியும்”, இதிகாச நம்பிக்கைகளை தகர்க்கிற விமர்சனங்களை நமது பத்திரிகைகளும், விமர்சகர்களும் இஸ்லாம் குறித்து முன்வைத்தாலும், இந்த இந்து-மீட்சியர் ஆய்ந்து உரைப்பது போன்ற  முகம்மது அவர்களின் நபித்துவம் குறித்த கடுமையான விமர்சனங்களை ஏனையோர் முன்வைப்பதில்லை.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
Feedback Closedஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |