Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) - குரான் வெளிப்பட்ட இறை-ஆவேசநிலை குறித்து முகம்மதுவுக்கே எழுந்த ஐயங்கள்
- நேச குமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

குரான் வெளிப்பட்ட விதம் குறித்து உலகிலேயே முதன்முதலாய் சந்தேகம் கொண்ட நபர் வேறு யாருமல்ல, முகம்மதுவேதான். அவரது நபித்துவத்தின் ஆரம்பக் காலகட்டங்களில் அவருக்கே தமக்கேற்படும் இந்த இறையுணர்வு நிலை குறித்த சந்தேகங்கள் இருந்தன.

கி.பி 610ம் ஆண்டு, மெக்கா நகருக்கு வெளியே தங்கி ஆன்மீகப் பாதையில் நடைபோட முயற்சித்துக் கொண்டிருந்த முகம்மதுவுக்கு, அவரே சற்றும் எதிர்பாராதவிதமாக ஒருசில தோற்றங்களும், குரல்களும் கேட்க ஆரம்பித்தன. காப்பிரியேல் எனும் தேவதூதனின் ஆவியானது விஸ்வரூப தோற்றமளித்து, "ஓது" என்று கட்டளையிட்டது. இந்த முதல் 'வெளிப்பாடை'த் தொடர்ந்து, தமக்கு மனநோய் தோன்றிவிட்டது அல்லது பேய்பிடித்துக் கொண்டது என்றே முகம்மது எண்ணினார்.

இத்தகைய திடீர்த் தோற்றங்களினாலும், விண்-குரல்களினாலும் மிகுந்த மனசஞ்சலமடைந்து, வாழ்நாளின் ஏனைய பகுதிகளையெல்லாம் மெக்கா நகரின் முட்டாளாக கழிக்க விரும்பாத அவர், மலை மீதிலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொள்ள எண்ணினார்: "இப்படிப்பட்ட சூழலில், உலகிலேயே நான் மிகவும் வெறுத்ததெல்லாம் இது போன்றதொரு ஆவேச நிலையடையும் கவிஞன் அல்லது ஆவியின் ஆளுமைக்குட்பட்ட மனிதனையே. இனி நாசமாய்ப் போவேனாக என்று நினைத்துக் கொண்டேன். பேய் பிடித்தவன் அல்லது
பித்துக்கவிஞனென்று எனை குரைஷிகள் கூற அனுமதியேன்! மலைமுகட்டிலிருந்து சீறிப்பாய்ந்து எனதுயிர் துறப்பேன், இந்தத் துயரநிலையிலிருந்து விடுதலை பெறுவேன்" (Ibn Ishaq’s Sirat Rasul Allah, tra. Alfred Guillaume: The Life of Mohammed, OUP Karachi, p.106/153)

முகம்மது மட்டும் இந்த முடிவில் உறுதியாய் நின்று, இந்த முடிவை நிறைவேற்றியிருந்தாரெனில், இஸ்லாத்தின் வரலாறு அத்தோடு முடிவுக்கு வந்திருக்கும், துர்-ஆவி என அவர் கருதியதன் ஆளுமையிலிருந்து முகம்மதுவுக்கும் விடுதலை கிட்டியிருக்கும். ஆனால், அவரை இந்த முடிவிலிருந்து மாற்ற அந்த ஆவியே அவருக்குத் துணை புரிந்தது.

முகம்மது கூறுகின்றார்: "ஆகவே, இந்த முடிவை நிறைவேற்றும் வண்ணம் நான் மேலே செல்லலானேன். அப்போது பாதிவழியில், விண்ணிலிருந்து ஒரு அசரீரி எழுந்தது. 'ஓ முகம்மதுவே! நீரே அல்லாஹ்வின் தூதன், நான்தான் கேபிரியேல்" (மேலே கண்ட நூல்).

இந்த தோற்றங்கள் அவருக்கு திரும்பத்திரும்ப ஏற்பட்டன. இப்படித் திரும்பத்திரும்ப ஏற்பட்ட தரிசனங்கள் முகம்மதுவுக்கு அவரது மனநிலை குறித்த ஐயங்களைத் தெளிவிக்கப் போதுமானவையாக இருந்தனவா என்பதை நாம் அறியோம். ஆனால், இதைவிட முக்கியமான ஒரு விஷயம் இத்தருணத்தில் அவருக்குத் துணை நின்றது: "அங்கேயே நான் நின்று கொண்டிருந்தேன், முன்னேயும் செல்லாமல் பின்னேயும் போகாமல். அத்தருணத்தில் கதீஜா தம்முடையா ஆட்களை மெக்கா நகருக்கு வெளியே அனுப்பி என்னைத் தேடிப் பிடித்து
அழைத்துவருமாறு பணித்தாள். இந்நிலையில், அவர் (கேபிரியேல்) என்னிடமிருந்து பிரிந்தார், நானும் அவரிடமிருந்து மீண்டேன்" (மேலே கண்ட அதே நூல்).

இத்தகைய 'வெளிப்பாடுகள்' அடிக்கடி தொடர்ந்து ஏற்பட ஆரம்பித்த நிலையில், முகம்மதுவின் மனைவியான கதீஜாதான் அவரை ஆறுதல்படுத்தி, அவருக்கு ஏற்படும் இறை-ஆவேச நிலைகளைப் பொறுத்துக் கொள்ளும் மனோதிடத்தை அவருக்கு வழங்கினார். பிற்காலத்திலும் கூட ஏனையோர் முகம்மதுவைக் குறித்து சந்தேகம் கொண்டபோதுகூட கதீஜா அவருக்கு உறுதுணையாக இருந்து உதவினார்: "அவரின் (கதீஜா) மூலம் கடவுள் தம்முடைய நபியின் மனப்பாரத்தைக் குறைத்தார். இம்மாதிரி புறத்தே தூற்றப்பட்டாலும், வீடு
திரும்பியதும் (கதீஜா மூலமாக) இறைவன் அவருக்கு ஆறுதலை அளித்தார். (கதீஜா) அவரை ஆசுவாசப்படுத்தி, மனப்பாரத்தைக் குறைத்து, அவர் (முகம்மது) கண்ட சத்தியத்தை முன்மொழிந்து, எதிர்ப்புகளை உதாசீனப்படுத்தும் உள்ள வலுவை (முகம்மதுவுக்கு) ஊட்டினார்" (மேலே கண்ட அதே நூல்:111/155)

இதையெல்லாம் விடவும் (கதீஜாவின்) முக்கியமானதொரு பங்களிப்பு என்னவென்றால், முகம்மதுவுக்கே தமக்கு ஏற்படும் இந்த இறையாவேசநிலை குறித்த சந்தேகங்கள் இருந்த நேரத்தில், கதீஜா அவருக்கு தெம்பை ஊட்டி தன்னம்பிக்கை கொள்ளச் செய்தார்.

கதீஜா, முகம்மதுவுக்கு நம்பிக்கையை ஊட்டியவிதம் இவ்வாறிருந்தது. (முதல் வஹிக்குப் பிறகு) முகம்மது வீடு திரும்பியபோது கதீஜாவிடம் கூறினார்: "கவியான அல்லது பேய் பீடித்த நான் நாசமாய்ப் போவேனாக!". ஆனால் கதீஜாவோ, "காசிமின் தந்தையே (முகம்மதுவின் முதல் மகனின் பெயர் காசிம்) கடவுளிடம் நான் தஞ்சமடைகின்றேன்! எனதன்பே, இது அவ்வாறிருக்க வாய்ப்பில்லை. கடவுள் உம்மை அந்த நிலைக்குத் தள்ள மாட்டார். உமது நேர்மை, நம்பகத்தன்மை, நற்பண்புகள், காருண்யம் ஆகியவற்றை
கடவுள் அறிவார். உண்மையிலேயே நீவிர் எதையாவது கண்டிருக்கக் கூடும்" என்று கூறினார். அதற்கு முகம்மது : "ஆம், எதையோ கண்டது நிஜம்தான்" என்று பதிலளித்தார்.
(மேலே கண்ட அதே நூல்:106/153)

நிச்சயமாக முகம்மது எதையோ கண்டார். அதாவது, புலன்களின் வழி தகவல்களைச் சேகரித்து தோற்றங்களையும், குரல்களையும் தோற்றுவிக்கத் துணைபுரியும் புலனுணர்வு நரம்புகள் பலவித தகவல்களை அவரது மூளைக்கு அனுப்பின. ஆனால், இவையெல்லாம் நரம்பு மண்டலத்தின் பொய்த்தகவல்களா அல்லது அந்தக்கால நம்பிக்கைகளின்படி பேய் பிடித்ததன் விளைவா? கதீஜாவும் அவரது ஒன்றுவிட்ட (கிறிஸ்துவச்)சகோதரர் வராக்கா பின் நவ்·பாலும் முகம்மதுவுக்கு கிட்டியவை நிஜமான ஆன்மீக தரிசனங்கள், அவருக்கு நபித்துவம் கடவுளால்
வழங்கப் பட்டுவிட்டது என்றே நம்பினர். ஆனால், முகம்மதுவுக்கோ இது சம்பந்தமாக சந்தேகங்களும், பெரும் சஞ்சலங்களும் இருந்தன. நல்லகாலமாக முகம்மதுவின் அன்பு மனைவிக்கு ஓர் உபாயம் தென்பட்டது. இந்த உபாயத்தின் மூலம், அவருக்குக் கிட்டிய வஹியைச் சோதித்து, அது ஆன்மீக மேலுணர்வே என்ற நம்பிக்கையை, அவரது நபித்துவத்தின் பாதையில் பயணிக்கும் உள்ளத் துணிவை, முகம்மதுவுக்கு கதீஜா அளித்தார்.

அடுத்தமுறை முகம்மதுவுக்குள் அமானுடக்குரல் கேட்கும்போது தம்மிடம் சொல்லுமாறும், பின்னர் அது தேவன் காப்ரியேலா அல்லது வேறு ஏதாவது வழக்கமான பிசாசா என்று முடிவு செய்வோம் என்றும் அவர் முகம்மதுவைக் கேட்டுக் கொண்டார். அப்படியே மறுமுறை முகம்மதுவுக்கு கேப்ரியேலின் தரிசனம் கிட்டியவுடன் "இதோ கேப்ரியேல் வந்துவிட்டார்" என்று கதீஜாவை உடன் அழைத்தார்.  "எழுந்திரும் என் மாமன் மகனே!" என்று அவரை எழுப்பிய கதீஜா, "எழுந்து என் இடத்தொடைப் பக்கம் அமர்வீராக" என்று சொல்ல, அப்படியே அமர்ந்தார் முகம்மது. "என்ன இன்னும் அவரைக் காண்கீறாரா" என்று கேட்க "ஆம்" என்றார் முகம்மது. "சரி, இப்போது வலத்தொடைப் பக்கம் வந்தமர்வீராக!" என்று சொல்லி "இன்னும் உள்ளாரா?" என்று கேட்க "ஆம்" என்று பதில் சொன்னார் முகம்மது.

பின்னர் அவரைத் தம் மடியிலேயே வந்து அமர்ந்து கொள்ளுமாறு கதீஜா கேட்டுக்கொள்ள முகம்மதுவும் அப்படியே செய்தார். மடியில் அமர்ந்து கொண்ட பின்னரும் கேப்ரியேலைத் தொடர்ந்து காண்பதாகச் சொன்னவுடன், கதீஜா மேல்திரையை விலக்கினார். தம் வடிவை வெளிக்காட்டி "இப்போது காண்கிறீரா?" என்று கேட்க "இல்லை" என்றார் முகம்மது. "மகிழ்வீர் என் மாமன் மகனே! நீங்கள் கண்டது தேவனையே, சாத்தானை அல்ல!" என்று உறுதி செய்தார் கதீஜா. (மேலே கண்ட அதே நூல்: 107/154)

முகம்மதுவின் பார்வைக்கு மட்டுமே தேவன் தோன்றி மறைந்த கதை இப்படிச் சொல்லப் படுகிறது. இதைத் தொடர்ந்து வர்ணிக்கும் இஷாக் இது குறித்து இரண்டாவதாகச் சொல்லப்படும் வழக்கையும் சேர்த்துச் சொல்கிறார். கதீஜாவின் மகள் பாத்திமா, அவர் மகன் ஹூசேன், ஹூசேனின் மகள் பாத்திமா, அவர் மகன் அப்துல்லா மூலம் சொல்லப்படுவது மேலும் விளக்கமாய் இருக்கிறது. அதன்படி கதீஜா நபியவர்களை உறவு கொள்ள அழைத்ததாகவும், உடன் கேப்ரியேல் விலகிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. அதைக் கேட்ட கதீஜா "இது உண்மையில் தேவனேயன்றி சாத்தானில்லை" என்று அறிவிக்கிறார். (அதே நூல்)

அக்கால நம்பிக்கைப்படி, முகம்மது கண்டது இச்சை மிகுந்த துர்தேவதையாய் இருக்குமாயின் அது கதீஜாவுடன் உறவு கொள்வதைக் கண்டு நின்று சுகித்திருக்கும் என்றும், உலகவாழ்வைத் துறந்த தேவனுக்கு இக்காட்சியில் விருப்பமில்லாமல் நகர்ந்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

மனைவி நடத்திய இந்தச் சோதனையின் மூலம் தாம் கண்டது தேவனையா என்ற முகம்மதின் சந்தேகம் தீர்ந்தது. இதன்மூலம் தாமே இறைவனின் பிரத்யேகப் பிரதிநிதி என்று நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்கிய முகம்மது பின்னர் தொடர்ந்து கேப்ரியேலின் செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினார். இவை ஓர் உதவியாளரால் தொகுக்கப்பட்டுப் பின்னர் குரான் என்ற புத்தகமானது. இதன் பின்னரும் ஒருமுறை மீண்டும் இந்தச் 'சாத்தானின் உரையோ' என்ற சந்தேகம் எழுந்தது.  அதையும் பார்ப்போம்.

மெக்காவாழ் மக்கள் தம் நபித்துவத்தை, தாம் பெற்ற இறைவசனங்களைத் தொடர்ந்து மறுத்து வருவதைக் கண்ட முகம்மது அவர்களைத் தம்பக்கம் திருப்ப ஒருவழியைக் கண்டுபிடித்தார். இறைவனைப் பன்முகங்களில் வழிபட்டுவந்த மெக்காவாழ் மக்களைத் தம்பக்கம் திருப்ப 'அல்லாஹ்வைத் தவிர வேறிறையில்லை' என்ற தம் அடிப்படைச் சித்தாந்தத்தையே கொஞ்சம் விட்டுக் கொடுப்போமே என்று முகம்மது முடிவு செய்த நேரமது.

மெக்காவாழ் பூர்வகுடிமக்களான பாகன்மாரை சகிப்புத்தன்மையற்ற வெறியர்கள் என்றும், முகம்மதுவின் புதுமைக் கண்டுபிடிப்பான 'ஒரேவழியினை' ஒதுக்கித் தள்ளியவர்கள் என்றும் தற்காலத்திய வரலாற்றுவாதியர் சொல்வதற்கு மாறாக, அவர்கள் எல்லாவழிகளையும் அரவணைத்துச் செல்பவராகவும், இக்காலத்திய இந்தியர்களின் பாஷையில் சொல்வதென்றால்  உண்மையில் 'செக்யுலரா'கவும் இருந்தனர்.

அவர்களின் புராதன ஆலயமான காபாவுக்கு வெளியே நடந்த ஒரு சந்திப்பில் முகம்மதுவிடம் ஒரு சமரசத்திட்டத்தையும் கொண்டு வந்தனர். "வாருங்கள், தாங்கள் தொழுவதை நாங்கள் தொழுகிறோம். நாங்கள் தொழுவதைத் தாங்களும் ஏற்பீர்! நாம் இப்படி இணைவோம்!" (மேலே கண்ட அதே நூல்:165/239) என்றனர். மேலும் முகம்மதுவால் தம் வழியின் உயர்வினை நிரூபிக்க முடியுமென்றால் அதையும் தாங்கள் ஏற்பதாகச் சம்மதித்தனர். "தாங்கள் தொழுவது நாங்கள் தொழுவதைவிட மேன்மையானது என்றால், அக்கூறுகளையும் ஏற்போம்; அல்லது நாங்கள் தொழுவது மேன்மையானது என்றால் அதன் கூறுகளையும் உங்கள் மார்க்கத்தில் கொள்வீராக!" (மேற்சொன்ன நூல்)

அத்தருணத்தில்தான் முகம்மதுவுக்கு இப்படி விட்டுக்கொடுக்கும் போக்கையும், யாதொரு பன்முகத்தன்மையையும் நிராகரிக்கும் 'வெளிப்பாடு' தோன்றியது. "சொல்வீர், ஓ நம்பிக்கை அற்றவர்களே, நீங்கள் தொழுவதை நான் தொழவில்லை; நான் தொழுவதை நீங்கள் தொழவில்லை. மேலும் நீங்கள் தொழுது வருவதை நான் தொழவும் மாட்டேன். நான் தொழுவதை நீங்களும் தொழப் போவதில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு!" (திருக்குரான் வசனம் - 109)

பிறிதொரு சந்தர்ப்பத்தில் மெக்காவாழ் பூர்வகுடியினர் முகம்மதுவின் பெரிய தந்தையார் இறக்கும் தருணம், அவர் படுக்கையைச் சூழ்ந்துகொண்டு சமரசமாய்ப் போவோமென வேண்டிக் கேட்கையில் (அவர் மார்க்கத்தை அவர் கடைபிடிக்கட்டும்; நாங்கள் எங்களின் வழியே செல்ல வேண்டுகிறோம்) முகம்மது அத்திட்டத்தை முற்றாய் நிராகரித்து, தம் 'ஒரேவழி'க் கோட்பாட்டையும், தம் நபித்துவத்தையும் அவர்கள் ஏற்பதைத் தவிர வேறுவழியே இல்லையென்றும் சொல்லி விட்டார். (மேற்சொன்ன நூல்: 191/278)

ஆயினும் ஒரு கட்டத்தில் மெக்கன்மாரை எப்படியாவது தம் ஒரேவழிப் பாதையில் திருப்ப சற்றே நிபந்தனைகளைத் தளர்த்தினார் முகம்மது. மெக்காவாழ் பாகன்மாரிடையே மிகப்பிரபலமாய் இருந்த அல்-லாத், அல்-உஸா, மனாத் என்ற முப்பெரும் தேவியரை ஏற்றுக்கொள்ளவும் திடீரென்று சம்மதித்தார். உடன் ஒரு 'வெளிப்பாடும்' விண்ணிலிருந்து தோன்றியது அவருக்கு. "அல்-லாத், அல்-உஸா மற்றும் மூன்றாவதான மனாத் ஆகியோரைப் பற்றி யோசித்தாயா? அவர்கள் விண்ணுலகின் அன்னங்கள், அவர்களது பரிந்துரை (அல்லாஹ்வால்) ஏற்கப்படும்( ஆதலால் அவர்களின் வழிபாடும் ஏற்புடைத்ததே!)" (மேற்சொன்ன நூல் 165/239)

அவ்வளவுதான். மெக்கன்மாருக்கு உற்சாகம் பீறிட்டெழுந்தது. தாம் வணங்கும் தேவியர் அல்லாஹ்வுடன் சேர்ந்திருப்போரே என்ற இறைத்தகவல் கேட்டு இஸ்லாமியர்களுடன் சேர்ந்தே தொழுதனர். அவர்கள் இஸ்லாத்துக்கே மாறி விட்டதாகவும் செய்தி பரவியது. 

பாகன்மாரின் உற்சாகம் நெடுநேரம் நீடிக்கவில்லை. முகம்மதுவுக்கு மேலும் ஒரு வெளிப்பாடு இறங்கி வந்தது. அவர் சாத்தானால் இப்படி ஏமாற்றப் பட்டதாகவும், தேவியரை வணங்கும் வரிகளைச் சாத்தான், வஹியின் வழியே வழக்கமான குரான் வெளிப்பாடு போல் தோன்றும்படி இடைச்செருகி விட்டதாகவும் சொன்னது அந்த இறைவசனம்.

"(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை¢ எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான். " (திருக்குரான் வசனம் - 22:52 மற்றும் மேற்சொன்ன நூல்: 166/239)

இதன் பின்னர் குரானில் கேப்ரியேல் வாக்காகத் திருத்தப்பட்ட வசனமும் எழுந்தது.

"நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?) உங்களுக்கு (மட்டும்) ஆண் சந்ததி, அல்லாஹ்வுக்குப் பெண் சந்ததியா? அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.  இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை¢ நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை¢ நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்¢ எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது." (திருக்குரான் வசனம் - 53:19-23)

இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டாலும், முகம்மதைச் சார்ந்த சிலரே எப்படி இவ்வளவு கவனக்குறைவாய் இருக்க நேர்ந்தது என்று எழுப்பிய சந்தேகத்தையும் கடந்து சென்றாலும், இங்கே கூர்ந்து கவனிப்போருக்கு ஒரு கேள்வி எழும்: முகம்மது இப்படி சாத்தானால் இந்த இடத்தில் ஏமாற்றப்பட்டார் என்றால், மற்ற வசனங்களிலும் எதுவுமே அப்படி இல்லையா என்று.

இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பாய்ந்துவரும் இஸ்லாமியப் பரிந்துரையாளர் வழக்கமாய்ச் சொல்வது மேற்சொன்ன நிகழ்ச்சியில் வருவதுபோல் இறைவனோ, கேப்ரியேலோ எவை உண்மை வசனங்கள் என்று தெளிவுபடுத்துவார் என்று. இப்படி ஒரு வசனத்தை உறுதிப்படுத்த அதே முகம்மது வழியாக அடுத்து ஒரு வசனம் இறங்கிவர
வேண்டியிருக்கிறது போலும்.

இங்கே ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். முகம்மது தாம் இப்படிச் சாத்தானால் ஏமாற்றப்பட்ட குறுகிய காலத்தில் மிகவும் வருந்தியதையும், இறைநடுக்கத்தில் இருந்ததையும் (மேற்சொன்ன நூல்: 166/239) புரிந்து கொள்ள முடிகிறது. மெய்யான இறைவாக்கையே பதிவுசெய்ய வேண்டும் அவர் முயன்றிருப்பதும் தெரிகிறது. ஆனால், எப்போது கதீஜாவின் மடியில் அமர்ந்து காப்ரியேலின் குரலையும், தோற்றத்தையும் கான்பதை வைத்து அது நல்ல சக்தியின் தோன்டுதலா அல்லது தீய சக்தியின் திசை மாற்றலா என்று முடிவு செய்தாரோ, அப்போதே முகம்மதுவின் 'வெளிப்பாடுகளிலிருந்து' பகுத்தறிவு விடை பெற்றுக்கொண்டது என்ற முடிவுக்கே நாம் வர வேன்டியிருக்கின்றது.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
Feedback Closedஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |