Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) - முகமதுவின் மனநலம் குறித்த டாக்டர் சோமர்ஸின் ஆய்வுகள்(2)
- நேச குமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

சரித்திரத்தில் எத்தனையோ மதநிறுவனர்களைப் பார்க்கிறோம். ஆனால் ஏனையோர்களைக் காட்டிலும் முகம்மதுவின் வாழ்க்கைச் சரித்திரம் குறித்து நிறையவே துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் ஆதார நூல்களிலிருந்து கிடைக்கும் இத் தகவல்களை வைத்து முகம்மது உண்மையிலேயே மனம் பிறழ்ந்தவரா, பாரனாய்ட் நிலைக்காட்பட்டவரா என்ற சந்தேகத்தை உறுதி செய்ய முடியுமா என்று மேலும் பார்க்கலாம்.

முகம்மதுவின் சிறிய பிராயத்தைப் பற்றிய பதிவுகள் அதிகம் அறியப் படாதவை. ஆனாலும் கிடைக்கும் சில விந்தையான தகவல்கள் மனநோயின் ஆரம்பகால அறிகுறிகள்(prodromes) அப்போதே தென்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.

சிறு வயதில் அந்தக்கால அரபியர் நடைமுறைப்படி முகம்மது வளர்ப்புத் தாயிடம் வளர்ந்து வந்தார்(நகரத்தில் வாழ்பவர்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் கிராமத்தில் உறவினர்களிடம் பாதுகாப்பாய் வளர்ப்பது வழக்கம் - குறிப்பு: கிராம அரபிப் பெண்கள் நகரப் பெண்களைக் காட்டிலும் ஆரோக்கியமாக இருந்ததாலோ என்னவோ, இவர்களிடம் குழந்தைகளை விட்டு பால்கொடுக்கச் சொல்வதும் அக்கால அரபியர் வழக்கமாயிருந்தது) . மூன்று வயதுச் சிறுவனாய் இருக்கையில் முகம்மது ஒருமுறை தரையில் ஏதோ ஒரு அதிர்ச்சியில், பலவீனமாய்ப் படுத்துக் கிடப்பதைப் பார்த்து ஓடி வந்தார் அவர் வளர்ப்புத் தாய் ஹலீமா. வெள்ளை உடையணிந்த யாரோ இருவர் வந்து, தன் வயிற்றைக் கீறி உள்ளே எதையோ தேடியதாய்ப் புலம்பினார் சிறுவன் முகம்மது.

இதைக் கண்டு பயந்து போன ஹலீமா, குழந்தைக்கு மேலும் ஏதாவது பிரச்னை வருவதற்குள் அவரின் சொந்தப் பெற்றோரிடமே அனுப்பி வைக்க முடிவு செய்தார். சிறுவன் முகம்மதுவின் உடலுக்குள் ஏதோ பேய் (அல்லது ஜின் ) புகுந்திருப்பதாய் கருதினார் ஹலீமா. மனச்சிதைவின் அறிகுறியாய் இதை உறுதிபடச் சொல்ல முடியாது என்றாலும், சிறுவயதில் இருந்தே முகம்மதுவிடம் ஏதோ பிரச்னை இருந்ததை இது காட்டுகிறது.

வாலிபனாய், நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவராய், வலுவுடன் இருக்கையில் இதைப் போன்ற அசாதாரண நிகழ்வுகள் முகம்மதுவின் வாழ்க்கையில் பதிவு செய்யப் படவில்லை. தளர்ந்த நிலையில் நடுவயதில் அவை திரும்பவும் திரும்பின அவரிடம்.

குரான் வெளியாவதற்கு சில வருடங்கள் முன்பாகவே இது தொடங்கி விட்டது. ஆரம்பத்தில் அவர் மனைவி கதீஜாவும் ஏதோ சாத்தானின் பார்வை பட்டு விட்டதாக இதை நினைத்து பேயோட்டுபவர்களிடம் இவரை அழைத்துப் போனார். அவரின் சமகாலத்தவர் கூட முகம்மதின் இதைப்போன்ற மனநிலை மாற்றங்களை அறிந்திருந்தனர். இதெல்லாம் முகமதின் மனநலம் குறித்த நம் சந்தேகங்களை உறுதிப் படுத்தும் சம்பவங்கள்.

வரவர முகம்மதின் ஆவேச நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்க கதீஜா அவரை வராக்கா இப்னு நவஃபால் என்ற இறையாளரிடம் அழைத்துப் போனார். அவர் மனநோய் மருத்துவர் அல்ல, - இறைநம்பிக்கை மிகுந்த, தளர்ந்து போன ஒரு முதியவர்(குறிப்பு: கிறிஸ்துவ நம்பிக்கை கொண்டவர், வயோதிகர், கண் பார்வை மங்கியவர், ஹீப்ரூ மொழியையும், யூத நம்பிக்கைகளையும் அறிந்தவர் இந்த வராக்கா என்று ஹதீதுகள் தெரிவிக்கின்றன ). அவர் முகம்மதுவின் நிலையைப் பார்த்து விட்டு, முகம்மது காணும் காட்சிகள் உண்மைதான் என்று சான்றிதழ் வழங்கி விட்டார். அதிலிருந்துதான் கதீஜாவும் கணவருடன் சேர்ந்து அந்தக் காட்சிகளை நம்ப ஆரம்பித்தார். சொல்லப் போனால் கதீஜாதான் இஸ்லாத்தின் முதல் நம்பிக்கையாளர். தன்னுடைய சுய அறிவை மூட்டை கட்டிவிட்டு, முகம்மது சொல்வதே வேதவாக்கு என்று அன்றிலிருந்து அவர் அதற்கு அடிமையானார்.

சகிப்பின்மையும் மனநோயின் ஓர் அறிகுறிதான் மேலே சொன்னதைப் போல், சில உறுதிப்படுத்தும் தகவல்களை விட, முகம்மதுவின் கூற்றாகவே அவர் கண்ட காட்சிகளைப் பற்றித் தெரிய வருபவை, அவரை மனம் பிறழ்ந்தவர் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கின்றன. சொர்க்கத்திலிருந்து கேட்ட உரத்த குரல் மற்றும் நெடிதுயர்ந்த உருவம் ஒன்று முகம்மதை முன்னிலைப் படுத்திச் சொன்னவை: நீயே இறைத்தூதன். அகிலத்தைப் படைத்த ஆண்டவனால் அவர் சொற்களைப் பரப்ப அவரால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதி என்று. அது மட்டுமின்று, 'அகிலத்தின் ஆட்சியில் முகம்மதுவுக்குக் கிட்டிய பிரதம அதிகாரம், இறைவனின் ஏக-இறுதிப் பிரதிநிதி, மண்ணிலே மானுடத்தை முழுமையாய் ஆள்வதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட துணைத் தலைவர், இறுதித்தீர்ப்பு நாளில் பாவிகளைப் பற்றி முடிவெடுக்கையில் இடைத்தரகராய்க் கிடைத்த நியமனம்' என்று முகம்மதுவைப் பற்றிய எழுப்பப் பட்ட பிம்பங்கள் எல்லாமே இதை உறுதி செய்வன.

தன்னைப் பற்றியே அவர் எழுப்பிக் கொண்ட இந்த மனக்கோட்டைக்கும், உண்மையில் அன்றைய நிலையில் அவருக்கிருந்த சமூக அங்கீகாரத்துக்கும் இருந்த இடைவெளி மிக அதிகம். சாதாரண வணிகர் என்றே பலராலும் பார்க்கப்பட்டு, பின்னர் பலவிதங்களில் ஏளனமாய்ப் பேசப்பட்ட ஒரு மதக்கூட்டத் தலைவராய் தன்னை உயர்த்திக் கொண்ட முகம்மதுவிற்கு இது தாங்க முடியாததாய் இருந்தது. தன்னை விமர்சனம் செய்வோரை கொஞ்சமும் சகித்துக் கொள்ளாமை, பின்னர் அவர்களைக் குறிபார்த்து மறக்காமல் பழிவாங்குவது போன்ற குணாதிசயங்கள் ஒரு மனநோயாளியின் அம்சங்கள் என்றே எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றிச் சொல்லலாம். சரித்திரத்தைப் பார்த்தால் இடித்துரைக்கும் சகாக்களைக் கொன்றழித்த கொடுங்கோலர்கள் பலர். இருந்தாலும் முகம்மதுவைப் போல் விடாது தேடிச் செய்த அழித்தொழிப்பும், அதற்குக் காரணமாய்ச் சொல்லப்படும் அவரது இறைஆவேச சாமியாடல்களும், அவர் மனநலத்தைத் தனித்துக் காட்டும் சான்றுகளாகும்.

சொல்லப் போனால் வரலாற்றில், பல கொடுங்கோலர்கள் இதைப் போன்ற மனநிலையைக் கொண்டே வெற்றி தேடிக் கொண்டதைப் பார்க்கிறோம். மனச்சிதைவுக்கும் வெற்றிக்கும் ஏதோ ஒரு பொருத்தம் போல் இருக்கிறது. குறிப்பாக 'மெகலோமேனியா' என்ற எதிலும் தன்னையே மையமாய் வைத்துப் பார்க்கும் வெறி, அதிகாரத்தைக் கைப்பற்ற ஒரு தூண்டுகோலாய் இருப்பதையும் காணலாம். மனநோயின் உடற்கூறுச் சான்று முகம்மதின் இந்த மெகலோமேனியாவிற்கு, அவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தது, குழந்தைகளைப் பறி கொடுத்தது போன்ற சொந்த வாழ்க்கையின் சோகங்களும் ஒரு வகையில் காரணமாய் இருக்கலாம்.

ஆனாலும் இதைப் போன்ற ஃபிராய்டியக் காரணங்கள் மட்டும் அவர் மனநோயை விளக்க உதவாது. ஃப்ராய்ட் தொடங்கிவைத்து பின்னர் எழுபதுகளில் மிகவும் பிரபலமான ஃபிராய்டியக் கருத்துகள் உடற்கூறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை விட முக்கியமாய்க் கருதப் படுகின்றன. சிறுவயதில் பள்ளியில் பிரகாசிக்க முடியாதது,ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் ஒரு மனிதன் தன் பிற்கால வாழ்வில் அதை ஏதோ ஒரு வகையில் சரிக்கட்ட முயல்கிறான். இது முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்ட அணுகுமுறை. இதற்கு சைக்கோட்ரோபிக் மருந்துகள் பலனளிப்பதைப் பார்க்கிறோம்.

 

முகம்மதின் விஷயத்தில் இந்த மனோதத்துவ அணுகுமுறையை விட அவர் உடல்ரீதியான பிரச்னைகளும் சேர்ந்திருக்கின்றன. முகம்மதின் உடல்நலத்தைப் பற்றிய செய்திகளை ஆராய்ந்து பார்க்கும்போது தெரிய வருவது என்னவென்றால், அவர் தீராத தலைவலியால் அவதிப் பட்டிருந்தார் என்பது. அதைக் குணப்படுத்த கழுத்தின் இரண்டு ரத்தநாளங்களை வெட்டி(இரத்தத்தை வடித்து)க் கொண்டதாகத் தெரிகிறது. முகம்மதின் மனச்சிதைவை இதை வைத்து எடை போட முடியாவிட்டாலும், இந்தக் காரணம் ஒரு வலுவான ஆதாரம் என்று கொள்ளலாம்.

 

முகம்மது தன் சிறுவயதில் தரையில் விழுந்து கிடந்தது ஒருவகை வலிப்புநோய் என்று பைஸாண்டினைச் சேர்ந்த(Byzantine) தியோபேன்ஸ் குறித்து வைத்திருக்கிறார். இதுவும் ஒரு திருப்தியான ஆதாரம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் வலிப்பு நோயால் ஒருவன் நிரந்தர மனநோய்க்கு ஆளாவதில்லை. வலிப்பிலிருந்து மீண்டபின் அதைப்பற்றியே நினைவிருக்காது. ஆனால் பாரனாய்ட் போன்ற மனோவியாதிகள் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நம்பகமான அறிகுறி என்று ஆராய்ந்து பார்த்தால் இறைமயக்கம் ஏற்பட்ட பின்னர் தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி முகம்மது தன் வாயாலேயே சொல்வதை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பக் கட்டத்தில் காட்சிகள் கிட்ட ஆரம்பித்த காலத்தில் ஆவி வந்து தன்னைத் தாங்க முடியாமல் அழுத்துவதாகச் சொல்கிறார். இறைமயக்கத்தைத் தொடர்ந்து தன் காதில் கேட்ட பேரொலியையை, வெளியிலிருந்து யாரோ பலமாய்த் தாக்கியது போன்ற உணர்வை, அப்துல்லா இப்ன் உமரிடம் அவர் ஒருமுறை சொல்வதையும் கவனிக்க வேண்டும்.

தன் காதில் கேட்ட ஒலிகள் தாங்க முடியாததாய் இருந்ததாகவும், தன் செவிப்பறைகள் மிகவும் தளர்ச்சியுற்று இருந்ததாகவும் முகம்மது சொல்கிறார். அதனால்தான் அவர் இசைநிகழ்ச்சிகளின் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதை அவுரங்கசீபும், அயதுல்லா கொமேனியும் அப்படியே பின்பற்றினார்கள்.

இப்ன் சய்த் பதிவு செய்துள்ள படி முகம்மது சொல்வது: "எனக்குக் கிட்டிய காட்சிகள் இருவகை. சிலநேரம் காப்ரியேல் வந்து நேருக்கு நேர் சொல்வது. அதை ஆனால் மறந்து விடுகிறேன். சில சமயம் மணியடிப்பது போலவோ, அலையடிப்பது போலவோ சத்தம் கேட்டு நான் குழப்பத்தில் ஆழ்கிறேன், ஆனால் அந்த நேரம் நான் காண்பதெல்லாம், கேட்பதெல்லாம் என்னை விட்டுப் போவதில்லை."

முகம்மதின் மனக்குழப்பங்களுக்கு இதை நியூரோபேதலாஜிகல் ஆதாரமென்று சொல்லலாம். முகம்மதின் மனோவியாதிக்கான உடற்கூறு ரீதியான காரணம் என்று டாக்டர்.சோமர்ஸ் சுட்டிக் காட்டுவது அவரின் நடுமூளைக்குள் பிட்யூட்டரி கிளாண்டின் முன்பகுதியில், மெயின் சென்ஸரி நரம்புகளுக்கு மிக அருகில் ஒரு கட்டி வளர்ந்திருக்கலாம் என்பது. ஆனால் இது யூகத்தின் அடிப்படையில் சொல்வதே தவிர, நன்கு தெரிந்த சைக்கோபேதலாஜிகல் காரணங்களை விட உறுதியான ஆதாரமாய் இல்லை. வருங்காலத்தில் இதை மேற்கொண்டு உறுதியாய் யாராவது ஆராயலாம். காரணங்கள் எப்படி இருந்தாலும் பதிந்து வைக்கப்பட்டுள்ள தெளிவான தகவல்களின் மூலம் ஆய்ந்து பார்க்கும்போது, முகம்மதின் மனச்சிதைவு தெளிவான மடுவின் அடிப்பரப்பைப் போல் உற்று நோக்குவோர்க்கு, தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
Feedback Closedஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |