Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) - இஸ்லாத்துக்குள் இருக்கும் சில நுட்பமான பேதங்கள்
- நேச குமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

முகம்மதுவுக்குக் கிட்டிய இந்த 'வஹி தரிசனத்தின்' பின்புலத்தை அறிவியல்பூர்வமாய் அலசி அறிந்து கொண்ட நிலையில் இனி நிஜவாழ்வில் இதன் தாக்கத்தையும், இஸ்லாத்தின் உண்மையான பிரச்னை என்னவென்றும் இந்த அலசல் தந்த வெளிச்சத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பல நூற்றாண்டு மாயையில் சிக்கியுள்ள நம் அண்டை வீட்டு முஸ்லிம்களை முதலில் எதிர்கொள்வது எப்படி? அதையும் இந்த முடிவுரையில் யோசிப்போம்.

(1) இஸ்லாத்துக்குள் இருக்கும் சில நுட்பமான பேதங்கள்

இதற்கு முதல்படி இஸ்லாத்தைக் குறித்த நம் புரிதலைக் கூர்மைப் படுத்திக் கொள்வது. யாராவது எங்கேயாவது இஸ்லாத்தை விமர்சிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் முதலில் பாய்ந்து வந்து 'இவன் இனவாத வெறுப்பைத் தூண்டுபவன்' என்று முத்திரை குத்தி ஒதுக்குவது பொதுவாய் இஸ்லாமியர் அல்ல, இஸ்லாமியர் அல்லாதவரே. எப்படி கம்யூனிஸத்தைக் குறித்து விமர்சிப்பவரை, அதுவும் தக்க ஆதாரங்களோடு மறுதளிக்க முடியாத எதிர்தரப்பு வாதம் வைப்போரைக் கூட சற்றேனும் செவி கொடுத்துக் கேட்காமல், 'ஆ, அது எப்படி நீ புனிதமான கம்யூனிஸத்தை விமர்சிப்பாய்?' என்று பாய்ந்து வரும் ஒரு கூட்டம் இருக்கிறதோ,
அப்படியே இன்று இஸ்லாத்தைக் குறித்த நேர்மையான விமர்சனங்களையும் எடுத்து வைப்பதைத் தடுக்க பலர் இருக்கிறார்கள். மேலும் பெருவாரி இந்துக்களுக்கும், இதர இஸ்லாமியர் அல்லாத பலருக்கும், இஸ்லாத்தைக் குறித்து ஏதோ ஒருவகை பரிவு இருக்கிறது. அவர்கள் பொதுவாய் சுபிக் கவிதைகளில், இஸ்லாத்தின் பொற்காலக் கனவுகளில் மனதைப் பறி கொடுத்தவர்கள்.

ஒரு வாதத்துக்காக இப்படிப் பார்ப்போம். ஏதோ ஒரு காலத்தில் இஸ்லாத்தின் சில உன்னதமான சாதனைகளை ஏற்றுக் கொண்டாலும், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கும், அவற்றுக்கும் உள்ள வித்தியாசங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கமாய்ச் சொல்லப்படும் சாதனைகளான அல்ஜீப்ரா, அரேபியச் சித்திர எழுத்து மற்றும் பலரையும் கவர்ந்த சுபிக்களின் ஆன்மீகத் தேடல் கொண்ட தத்துவப்பாடல்கள் போன்ற எல்லாமே அடிப்படை இஸ்லாமியக் கோட்பாட்டுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாதவை.

முதலில் அரேபியச் சித்திர எழுத்து, ஜியோமிதி நகாசு வேலைகள் மற்றும் குறிப்பான வடிவற்ற அழகம்ஸங்கள் எல்லாம் மனித, விலங்கு வாழ்வியலைச் சித்தரிக்கும் கலைகள் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டக் காரணத்தால் எழுந்தவை. மேலும் அவை ஏதோ புதிய கண்டுபிடிப்புகளும் அல்ல. அந்த நாளில் இருந்து இஸ்லாத்துக்கு முந்தைய மனித சமுதாயம் போற்றி வந்த பலவிதமான கலை வடிவங்களின் ஒரு வெளிப்பாடுதான். 

அல்ஜீப்ரா மற்றும் பல அறிவியல் அம்சங்கள் எல்லாம் பல அரேபியக் கொடுங்கோலர்களே ஏற்றுக் கொண்டபடி, இந்தியா, சீனா, கிரீஸ் போன்ற நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவைதான். 'உலகிலேயே உயர்ந்த தூய்மையான மதம் நாங்கள் பெற்ற எங்கள் மதம்' என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே அவர்கள் நெஞ்சம் நிறையப் பெருமை கொள்ளப் போதுமானதாக இருக்க, மற்ற சாதாரணமான சாதனைகள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாய் இருக்கவில்லை. இந்த அல்ப விஷயங்கள் எல்லாம் பிற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை என்று சொல்லிக் கொள்ள அவர்கள் தயங்காததற்கு இதுவே காரணம்.

சுபிக்கள் பரப்பிய 'தான் என்ற உணர்வை அழித்து கடவுளுடன் கலக்கும்' முக்கியமான கோட்பாடு கூட வேதாந்த, பௌத்த சமயங்களில் இருந்து பெறப்பட்டதுதான். ஆனால் ஆரம்பத்தில், உபநிஷதங்கள் சொல்லும் 'நானே பரம்பொருள்' (அனால் ஹக் என்று அரபியில் மாற்றி) என்ற கொள்கையைப் பரப்பிய சுபிக்கள், இறைவனுக்கு எதிராய் சதி செய்வதாய்க் குற்றம் சாட்டப்பட்டு ஒட்டுமொத்தமாய்த் தீர்த்துக் கட்டப்பட்டார்கள். காலப்போக்கில் ஒருவகை சமரசம் ஏற்பட்டு, இஸ்லாத்துக்கு ஒத்துவராத கொள்கையாய் இருந்தாலும், இந்த சுபியிஸத்தால் பெருத்த அபாயம் இல்லை என்று கருதியோ என்னவோ அதையும் இஸ்லாத்தின் ஒரு கூறாக அங்கிகரித்துக் கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் ஏதோ ஆன்மீகக் கோணங்கிகளுக்கும், படிப்பறிவில்லாத பக்திமான்களுக்கும் ஒரு வடிகாலாய் இருந்துவிட்டுப் போகட்டும் என்றும் தப்பித்திருக்கிறது.

எது எப்படியோ, வெளி ஆட்களைக் கவர்ந்திழுக்கும் இதுபோன்ற 'கண்ணைக் கவரும் காட்சிப் பொருட்கள்' எல்லாம் உண்மையான இஸ்லாத்தை எடை போடவோ, வரையறுக்கவோ எந்த வகையிலும் உதவாது. இது மட்டுமில்லாமல், ஆதாரமான இஸ்லாமியக் கோட்பாடுகளை வைத்துப் பார்த்தாலும், அதற்குள் இருக்கும் சில தவிர்க்க முடியாத அம்சங்களை, நிபந்தனைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் பொதுவான இறைக் கொள்கைகள், ஒழுக்கங்கள் மட்டுமின்றி சில பிரத்யேகமான இஸ்லாமியக் கண்டுபிடிப்புகளைக் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதோ ஒருவகையில் பெருவாரி மக்கள் மதிப்பைப் பெறுவதற்கு திருக்குரானில் முகம்மதால் சேர்க்கப்பட்ட மரபு சார்ந்த ஒழுக்கங்கள், திருடாமை, புறங்கூறாமை, குழந்தைநலம், படைகள ஒழுக்கம் போன்ற சில அம்சங்களைப் பார்க்கலாம். மோஸஸ் தனது பத்து கட்டளைகளில் எப்படி தன் கண்டுபிடிப்புகளான ஏக இறைக் கொள்கை, உருவவணக்க எதிர்ப்பு, இறைவன் நாமத்தைப் பகிரங்கமாய்ச் சொல்வதற்குத் தடை, வாரத்தில் ஒருநாள் ஓய்வு போன்ற புதிய
கொள்கைகளுடன் தொன்றுதொட்டு இருந்துவரும் பொய் சொல்லாமை, திருடாமை, பெற்றோர் வணக்கம், பிறன்மனை விழையாமை போன்ற நெறிமுறைகளைக் கலந்து கட்டிக் கொடுத்தாரோ, அது போலவே முகம்மதுவும் தன் கண்டுபிடிப்புகளுடன், பல பண்டைய காலத்திய நெறிமுறைகளையும் சேர்த்தே சொல்லி இருக்கிறார். மோஸஸ், முகம்மது இருவருக்குமே தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு வெகுஜன மதிப்பைத் பெறுவதற்கு இப்படி மரபுமுலாம் அவசியமாய் இருந்திருக்கிறது.

விவிலியத்தையோ, குரானையோ படிக்கும் ஒரு சாதாரணன், தான் அதனால் ஒழுக்கத்தைக் கற்றுக் கொண்டதாகச் சொல்லவும் இது வாய்ப்பளிக்கிறது. உலகளாவிய பொதுத்தன்மைகள் சிலவற்றை - அவை இஸ்லாத்துக்கு மட்டுமே சொந்தமான கொள்கைகள் இல்லையென்றாலும் - போதிக்கும் விஷயத்தில் திருக்குரானும் ஒரு மதிப்புக்குரிய நூல்தான்.

அதே நேரம் இஸ்லாத்தைத் தனித்துக் காட்டுவதாகச் சொல்லப்படும் அதன் ஆதாரக் கொள்கைகளை நன்கு கவனித்துப் பார்த்தால், அதன் ஏக இறைக் கொள்கையை (அல்லாவைத் தவிர வேறு இறைவனில்லை) பார்க்கும்போது, முகம்மதுவின் நபித்துவ நம்பிக்கையையும் (முகம்மதே அல்லாவின் தூதர்) சேர்த்தே பார்க்க வேண்டும். 

முதலாவதாக ஏக இறைக் கோட்பாடு, பரம்பொருள் ஒன்றே என்று சொல்லும் கோட்பாடு, குரானிலோ, பைபிளிலோ மட்டும் சொல்லப் படுவது அல்ல. மேலும் இக்கொள்கை ஒரு வகையில் அரிஸ்டாடிலின் தத்துவங்களிலும், ஸ்டாய்ஸிஸத்திலும், ஜாரதுஷ்றாவின் அஹ¤ர மஸ்தாவிலும் எடுத்துச் சொல்லப் பட்டிருப்பதைக் காணலாம். ஏன், பல இறைக் கோட்பாடு கொண்டதாகத் தாக்கப்படும் இந்து நூல்களின் ஆதாரமாக இந்த ஏக இறைக் கோட்பாடு இருப்பதைக் காணலாம்.

இடைக்காலத்திய மற்றும் நவீனத்துவத் தத்துவச் சிந்தனையாளர்கள் (அல் அராபி, குஸானஸ், ப்ரூனோ, கலீலி, லெப்னிஸ் போன்ற) பலர் அகிலத்தைப் பற்றியும், பிரக்ஞையைப் பற்றியும் பல முன்னோடியான கருத்தாங்களை உருவாக்கி உள்ளனர். ஆக கொள்கைரீதியாகப் பார்த்தால், இந்த ஏக இறை தத்துவத்தைப் போதிக்கும் மதங்களுடன் - இஸ்லாம் உட்பட - ஒத்துப் போவதில் யார்க்கும் பெரிதாய் எதுவும் பிரச்னை வரப் போவதில்லை.

அடுத்த முறை உங்கள் அடுத்த வீட்டு இஸ்லாமியர் 'அல்ஹம்துலில்லா' என்றோ அல்லது அல்லாவைப் போற்றி வேறு எதுவும் சொன்னாலோ, அவரைப் பற்றி அவசரப்பட்டு ஏதோ ஜிஹாதி என்று முடிவெடுத்துவிட வேண்டாம். அல்லா வாழ்த்து என்பது நீங்கள் - ஹிந்துக்கள் - பகவானைப் போற்றிச் சொல்வது போன்றதே.

உண்மையான பிரச்னை ஆரம்பமாவது எப்போது என்றால், இந்த அல்லாவானவர் தங்களுக்கு மட்டுமே உரிமையுள்ள, முகம்மதுவுக்கு மட்டும் காபிரியலால் அருளப்பட்ட குரான் புத்தகத்தில் விவரிக்கப் பட்டுள்ள குணாதிசயங்கள் மட்டும் கொண்ட தனி இறைவன் என்று அவர் என்று புரிந்து கொள்ளத் தொடங்குகிறாரோ அன்றிலிருந்து. அதற்குப் பின்னர் நீங்கள் உஷாராய் இருப்பது நலம்.

இஸ்லாத்தின் அடிப்படையான பிரச்னை அல்லாவோ, ஏக இறைக் கொள்கையோ அல்ல; முகம்மதுவும், அவரின் பிரத்யேக நபித்துவ நம்பிக்கையும் மட்டுமே.

ஏக இறைக் கொள்கை எங்கும் இருப்பது. முகம்மதுவும் அவர் நூலும் மட்டுமே இஸ்லாத்தைத் தனித்துக் காட்டும் விஷயங்கள்.

ஏக இறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில், சொர்க்கத்திலிருந்து முகம்மது வைத்திருந்த பிரத்யேகத் தொலைபேசி இணைப்பை மறுதளிப்பதில் எவ்விதத் தயக்கமும் இருக்கக் கூடாது. இதுதான் இஸ்லாத்தைக் கவனமாய் ஆராய்ந்து பார்த்தால் நாம் போய் முட்டிக் கொள்ளும் பகுத்தறிவு அற்ற இறுதித் தடைக்கல்.  இந்த இடத்தில் யாதொரு சர்க்கரை தடவிய மழுப்பல்களையும், எம்மதமும் சம்மதம் என்பது போன்ற பிதற்றல்களையும் ஏற்றுக் கொள்ளவே கூடாது. ஏனெனில் இஸ்லாம் என்ற மதத்தை வரையறுக்கும் இந்த அடிப்படையே தவறானது. இது ஒரு சாதாரண இடைக்காலத்து வணிகர் ஒருவரின் மயக்கத்தில் பிறழ்ந்த
நம்பிக்கை. இதைப் போய் அபாரமான சிந்தனையாளர்களான யாக்ஞவல்கியருடனோ, புத்தருடனோ, கன்பூசியஸ¤டனோ, லாவோஸியுடனோ, சாக்ரடீஸ¤டனோ ஒப்பிடுவது முட்டாள்தனமானது.

(2) தெளிவாய்ப் பேசுவோம்

எடுத்தவுடன் இஸ்லாத்தின் அடிப்படையான இந்தத் தவறுகளை நமக்குத் தெரிந்த இஸ்லாமியரிடமே சுட்டிக் காட்டுவது கடினமான காரியம். ஆரம்பத்தில் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தவர் யாராய் இருந்தாலும் 'நம்பிக்கை அற்றவன்' என்ற சலுகையை சில காலம் அனுபவிக்கலாம். அதுவும் மாறி வரும் இன்றைய உலகில், அவர்கள் வேறு வழியில்லாமல் 'நம்பிக்கை அற்றவர்'களை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இங்கே நம்பிக்கை என்பது இறைவனின் மீதல்ல; முகம்மதுவின் நபித்துவத்தின் மீது. ஒரு முறை முகம்மதுவின் இறுதி நபித்துவத்தை ஏற்றுக் கொண்டால், அடுத்ததாக குரானையும், அதன் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். அப்புறம் என்ன நீங்களும் இஸ்லாமியர்தான்.

தனிப்பட்ட சம்பாஷணைகளில், நாகரிகமான முறையில் இஸ்லாத்தின் இந்த அடிப்படை நம்பிக்கை குறித்த நம் சந்தேகங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். என் மதமே எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று யாராவது அவ்வப்போது சொன்னாலும், இதைத் தெளிவாய் எடுத்துச் சொல்லலாம்.

இஸ்லாமியராய்ப் பிறந்தவர்களுக்குச் சில எல்லைகள் உண்டு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைக் குறித்து விமர்சனம் செய்வது கிட்டத்தட்ட அவர்களால் இயலாத காரியம். சில நாடுகளில் இது தெய்வகுற்றமென்று மரணதண்டனையும் காத்திருக்கும். இருந்தாலும், இஸ்லாத்தை விட்டு வந்த சில தைரியசாலிகள்தான் அவர்களின் சகோதர சகோதரிகளுக்குக் கதவைத் திறந்து விட வேண்டும். நம்மைப் போன்ற இஸ்லாமியர் அல்லாதவர் அவர்களின் அடிப்படை பிரச்னைகளை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அதற்குச் செவி கொடுக்கும் இஸ்லாமியர் குறைவாகவே இருப்பார்கள். 'இஸ்லாத்தின் அமானுட அடிப்படை'யை நாம் ஒரு பார்வை பார்த்தது போல், அறிவியல் ரீதியான தகவல்களை, குறைந்தபட்சம் அரசாங்கப் பள்ளிகளில், பள்ளிக் குழந்தைகளுக்குப் பொதுப்பாடமாய் வைக்க நாம் முயல வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமியக் குழந்தைகளுக்கு இது ஒரு வகையில் தீர்க்கமாய் யோசிக்க உதவும். ஆனால் அவர்களின்
பெற்றோர் இதையெல்லாம் 'நம்பிக்கை அற்றவர்கள்' சொல்வது என்று புறந்தள்ளி விடலாம்.

யோசித்துப் பார்த்தால், ஒரு முஸ்லிமாய்ப் பிறந்து வளர்ந்தவர் ஆழமாய்ச் சிந்தித்து தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள மாயவலையை உடைத்துக் கொண்டு வெளியே வந்து, தன்னைச் சார்ந்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதே சிறந்தவழி. அதனால்தான் மனம் திறந்து பேசுவதையே அவர்கள் அபாயமாகக் கருதுகிறார்கள் போலும். 

இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை. சமீபத்தில் பிரபலமாகி வரும், செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பு, இண்டர்நெட் என்ற தடைகளை உடைத்து வரும் ஊடகப் புரட்சி, இவை எங்கோ அரேபியாவின் மூலைமுடுக்கில் இருக்கும் ஒரு கிராமத்தைக் கூட சென்றடையும் வாய்ப்பு இதையெல்லாம் நினைக்கும்போது எனக்கு நம்பிக்கை துளிர்க்கிறது. இஸ்லாமிய மனநிலையில் பரவலாய் ஒரு மாற்றம் வரும். அது இடைக்காலத்திய சிந்தனைகளை விட்டு வெளியே வரும்.

இதுநாள்வரை வெளி உலகம் என்னவென்று தெரியாமல் வளர்க்கப்படுவதாலேயே பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில், அடிப்படைவாதிகளின் அராஜகப் போக்கு தொடர்ந்து வந்திருக்கிறது. சாதாரணக் குடிமக்களுக்கு மேற்கத்திய கலாசாரத்தைப் பற்றியும், சக ஆசிய கலாசாரங்களைப் பற்றியும் இவர்கள் எதிரிகள் என்று திரும்பத்திரும்ப போதிக்கப்பட்டு வருவதும் ஒரு முடிவுக்கு வரும். அவர்களின் சிந்தனை எல்லை, வரும் தலைமுறையில் நிச்சயம் விரியும்.

இஸ்லாமிய நாடுகளின் கொடுமைகளிலிருந்து மீண்ட பலர் நடத்தும் வலைத்தளங்களில், இஸ்லாத்தின் இருண்ட பக்கத்தை, அவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர் மீது நடத்தும் வன்முறைகளை. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை, குறிப்பாய் பகுத்தறிவுக்கு ஒத்து வராத இஸ்லாமிய அடிப்படை வாதத்தைப் புட்டுப்புட்டு வைப்பதை ஏற்கனவே பார்க்கிறேன். புத்தகங்களை எரிக்கலாம். சுதந்திரமாய்ப் பேசுவதைத் தடை செய்யலாம். ஆனால், தகவல்துறையில் நடந்துவரும் புரட்சிகளை, அது சந்தேகத்திற்கு இடம் கொடுக்காமல், சத்தமில்லாமல், வெளி உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ள இஸ்லாமியர் வீட்டுக்குள் நுழைவதை யார் என்ன செய்ய முடியும்.

(3) வேறு என்ன வழி?

மேற்கத்திய அனுபவங்களை வைத்து அனுமானித்தால், மதத்தின் பிடியிலிருந்து வெளிவருவதன் சில பக்க விளைவுகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒருபுறம் பார்த்தால், மக்கள் வெளிப்படையாகவும், நன்கு விஷயஞானம் பெற்றவராகவும், சில சங்கடமான பிரச்னைகளை நேர்மையாய் எதிர்கொள்பவராகவும் இருக்கலாம். ஆனால் மறுபுறம் பார்த்தால், மதத்தைப் புறக்கணிக்கும் பலர் அதனுடன் சேர்த்து தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற எல்லாவற்றையும் பழமைவாதம் என்று எறிந்து விடுகிறார்கள். இதை வைத்துப் பார்த்தால் முஸ்லிம் மக்கள் பயப்படுவதையும் புரிந்து கொள்ளலாம். எங்கே இது கடைசியாய் தங்களை, வரம்பில்லாத அட்டகாசம், கேடுகெட்ட நுகரும் போக்கு, குழுவெறி கொண்ட சின்னச்சின்ன மதங்கள், பொதுவான கலாசாரச் சீரழிவு என்று கொண்டு போய் விடுமோ என்று மதத்தின் பிடியிலிருந்து வெளியே வந்து சுதந்தரமாய்ச் சிந்திக்கப் பயப்படலாம். இன்று இஸ்லாமியர் அல்லாதவர் உலகம், ஹாலிவுட், மெக்டொனால்ட்ஸ், ப்ளேபாய் என்றே அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது என்று பார்க்கும்போது, அவர்கள் ஒண்டவந்த மேற்கத்தியப் பிசாசை விட ஊர்ப்பிசாசே மேல் என்று யோசித்தாலும் அதைப் புரிந்து கொள்ள முடியும்.

இங்குதான் இந்துசமயம் மற்றும் இதர ஆசியச் சம்பிரதாயங்கள் நல்ல ஒரு பங்காற்ற முடியும். மதத்தின் பிடியிலிருந்து வெளியே வந்தாலும் சிறப்பாய், ஒழுக்கமாய் வாழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று கீழை கலாசாரங்களால் எடுத்துக் காட்ட முடியும். மதநம்பிக்கை என்பது யாரோ ஒரு தனிமனிதரின் சொந்த சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு அதை வாழ்நாள் முழுவதும் சுமப்பதை விட எளிமையானது என்று அவர்களால் சுலபமாய்ச் சுட்டிக் காட்ட முடியும். இந்தியாவில் இது மேலும் சுலபம். இங்கே இன்னும் உயிருடன் இருக்கும், மானிடம் கண்ட மகோன்னதமான சித்தாந்தங்களை, அவற்றைத் தனிமனித அளவில் ஏற்றுக் கொண்டோ,
நிராகரித்தோ சிக்கல் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் அவர்கள் சூழப்பட்டுள்ளார்கள். இந்துக்கள் தங்களின் மரபின் உன்னதமான விஷயங்களைத் தாங்களே மீட்டெடுத்து, சில மூடப்பழக்கங்களுக்குத் தலைமுழுகி விட்டு, உதவிக்கரம் நீட்டினால், சில நூற்றாண்டுப் பிரிவினையை மறந்து, தங்களின் வேர்களைத் தேடி, இன்னும் உயிருடன் இருக்கும் தங்கள் சொந்தக் கலாசாரத்துக்குத் திரும்புவது சரியான தீர்வாய் இருக்கும்.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
Feedback Closedஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |