Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கனலை எரித்த கற்பின் கனலி - பாகம் : 1
- செல்வன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}


Sitaஅனேக பட்டிமண்டபங்களில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்ட இதிகாச நாயகன் ராமனாகத்தான் இருக்க முடியும். கிருஷ்ணன் செய்யாத குறும்புகள் கிடையாது.ஆனால் ஏனோ கண்ணனை விட்டு விட்டு ராமனை பிடித்துக்கொள்கிறார்கள். வாலிவதம் மற்றும் சீதா அக்னிப்பிரவேசம் ஆகிய இரண்டு வழக்குகளும் ராமன் மேல் பல காலமாக நடந்து வருகின்றன.  கம்ப ராமாயணத்தை பற்றி ஹரிகிருஷ்ணன் மிகவும் அழகாக எழுதுகிறார். ராமன் மேல் தீரா காதல் கொண்ட ஹரிகிருஷ்ணன் கூட இந்த விஷயம் வரும்போது உடைந்து போய் விடுகிறார்.
 
இவ்விஷயம் பற்றி விவாதித்த பல பெரியவர்களை ஹரிகிருஷ்ணன் உதாரணம் காட்டுகிறார். வ.வே.சு ஐயரின் உரையை மேற்கோள் காட்டும் ஹரிகிருஷ்ணன், வ.வே.சு ஐயர் பின்வருமாறு சொன்னதாக சொல்கிறார்
 

"There is a blot in Rama's love, but of that we shall speak when we come to Sita."

இதே போல் ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார் ராமனை கண்டித்ததையும் ஹரிகிருஷ்ணன் விளக்குகிறார்.
3 பாகமாக பிரிந்து செல்லும் ஹரிகிருஷ்ணன் உரையை படிக்கும் எவருக்கும் கண்ணீர் பொங்கும் என்பது உறுதி. "என் ஐயனா தப்பு செய்தான்" என ஆற்றாமையுடன் "ஏன் அப்படி செய்தான்" என ஒவ்வொரு காரணமாக அலசி ஆராயும் ஹரிகிருஷ்ணன் அன்னையின் அக்கினிப்பிரவேசத்துக்கு சொல்லப்படும் ஒவ்வொரு காரணத்தையும் அழகாக நிராகரித்துக்கொண்டே வருகிறார். கடைசியில் அனைத்து காரணங்களையும் நிராகரித்துவிட்டு ஐயனை குற்றம் சொல்ல முடியாமல் அதே சமயம் அம்மையை அவன் படுத்திய பாடு தாங்க முடியாமல் நெஞ்சு கனக்க பின்வரும் தீர்ப்பை வழங்குகிறார்

"இராமன் நல்ல மகன். நல்ல நண்பன். நல்ல சகோதரன். நல்ல தலைவன். ஈடு இணையற்ற வீரன். மிகச் சிறந்த மன்னன். அதில் என்ன ஐயம் இருக்க முடியும் ? "

அதாவது ராமன் சிறந்த கணவனாக இருக்கவில்லை என்று மறைமுகமாக சொல்கிறார். நேரடியாக சொல்ல அவர் ராம பக்தி இடம் தரவில்லை.


இதுவரை இம்மாதிரி பட்டிமண்டபங்களில் முக்காலே மூணு வீசம் சமயங்களில் ராமனை குற்றவாளியாக தான் தீர்ப்பளிப்பார்கள்.

மிகவும் அலசி ஆராயப்பட வேண்டிய விஷயம் இது. தீர்ப்பை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். அது எப்படி என்பதை விரிவாக பின்வரும் பகுதிகளில் விளக்குகிறேன்.

"ராமன் குற்றவாளி அல்ல". இது தான் என் தீர்ப்பு.

ஹரிகிருஷ்ணன், வ.வே.சு ஐயர், சினீவாச சாஸ்திரிகள் ஆகியோர் தீர்ப்பு தப்பு,தப்பு,தப்பு.

தவறான முறையில் இப்பெரியவர்கள் இவ்விஷயத்தை அணுகியிருக்கிறார்கள்.

குறிப்பாக ஹரிகிருஷ்ணன் சொல்லும் இந்த தீர்ப்பு சரியல்ல.

"...இராமன் நல்ல மகன். நல்ல நண்பன். நல்ல சகோதரன். நல்ல தலைவன். ஈடு இணையற்ற வீரன். மிகச் சிறந்த மன்னன். அதில் என்ன ஐயம் இருக்க முடியும்..."

இந்த தீர்ப்பை நான் இப்படித்தான் சொல்லுவேன்.

"ராமன் நல்ல மகனல்ல,நல்ல நண்பனல்ல,நல்ல கணவனல்ல.நல்ல சகோதரனுமல்ல.நல்ல மன்னனுமல்ல,ஈடு இணையற்ற வீரனுமல்ல"

ராமாயணம், பாரதம் மற்றும் விஷ்ணு புராணம் ஆகியவற்றின் அடிப்படையில்  பின்வரும் கருத்தை துணிந்து சொல்லுகிறேன்.

"...விஷ்ணுவின் எந்த அவதாரமும் (ராமன்,கண்ணன் உட்பட) நல்லதொரு மகனாகவோ, நல்லதொரு தகப்பனாகவோ, சிறந்த கணவனாகவோ, சிறந்த சகோதரனாகவோ, சிறந்த வீரனாகவோ இருந்தது கிடையாது.இவர்கள் பிறந்த எந்த குடும்பமும் தழைத்தது கிடையாது.உதாரண புருஷன் என்று சொல்லும் வாழ்வை இவர்கள் வாழவில்லை.இவர்கள் வாழ்ந்தது போல் வாழ வேண்டும் என நினைத்தால் நாம் தப்பு செய்கிறோம் என்று அர்த்தம்...."

பாரதத்தையும்,ராமாயணத்தையும்,கீதாசார்யன் சொன்ன கீதையையும் நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.

 
(தொடரும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |